திண்ணமாக நான் இணைவைப்பாளனாக இருக்கவில்லை!

 

திண்ணமாக நான் இணைவைப்பாளனாக இருக்கவில்லை!

திண்ணமாக நான் இணைவைப்பாளனாக இருக்கவில்லை!

– மு.அ.அப்துல் முஸவ்விர்

இந்த மூன்று அம்சங்களைக் குறித்து சேஷாசலம்,பெரியார்தாசன்,சித்தார்த்தன் – ஆகியோர் எத்தகைய மனநிலை கொண்டிருந்தார்கள்?ஏகஇறைபால் இந்த பயணம் எப்படி திரும்பியது?

நல்ல கேள்வி தம்பி! சமயசார்பு பொறுத்தவரை என்னை நிராகரிப்பாளன் என நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.ஆனால்,இறைவன் இல்லை எனும் எனது வாதத்தை நான் நிரூபித்துக் கொண்டிருந்தேனா?உண்மையில் எனக்கு தெரியுமா இறைவன் இல்லை என்று?

இன்னொருபுறத்தில் நிராகரிப்பாளன் என்று பிறரால் அறியப்பட்டேனே தவிர,நிராகரிப்பாளன் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேனே தவிர, திண்ணமாக நான் இணைவைப்பாளனாக இருக்கவில்லை!

ஆனால், எனது பெற்றோர்,உற்றார்-உறவினர்,நான் சத்தியத்ததை ஒப்புக்கொண்டதால் இப்போது என்னுடன் பேசவே மறுக்கும் நண்பர்கள் – ஆகிய அனைவரும் இணைவைப்பாளர்கள்!ஆனால், எனது பதின்பருவமாகிய 16-ஆவது வயதிலிருந்து நான் எந்நிலையிலும் இணைவைப்பாளனாக இருந்ததேயில்லை.மாறாக, ‘லா இலாஹ’ -இறைவன் இல்லை என்று பாதி கலிமாவை மொழிந்து கொண்டிருந்தேன்.எனவே, எனது இந்த பாதை தெளிவாக குழப்பமில்லாமல் இருக்கின்றது.அந்தப் பயணத்தினூடே சென்று ஏகஇறையை அறிந்து ‘இல்லல்லாஹ்’ –அல்லாஹ்வைத் தவிர எனும் அடுத்த பாதி கலிமாவை மொழிந்து பூரணமாக ஏகஇறைகொள்கை எனும் இலட்சியத்தை அடைந்துகொண்டேன்.அதாவது மனத்தளவில் இறைநம்பிக்கையாளனாக வந்திருக்கின்றேன்.., இல்லையா?

என்னைப் பொறுத்தவரை ஏகஇறைவன், ஒவ்வொருவரது உள்ளங்களையும் தனது இரு விரல்களுக்கிடையில் பிடித்து வைத்திருக்கின்றான்.அதனை எந்தப் பக்கம் திருப்புவது என்பதை அவன்தான் முடிவு செய்ய வேண்டும்.

45 ஆண்டுக்காலம் பாதி கலிமாவை மொழிந்து கொண்டிருந்த பெரியார்தாசனை 2000-ஆம் ஆண்டுகளில் இறைவன் இறைமார்க்கத்தின் பக்கமாக திரும்பிப் பார்க்க செய்தான்.மறுமையின் மயக்கம்,சுவனத்தின் சுகந்தம்,நரகத்தின் நாசம்,ஹராம்-விலக்கப்பட்டதிலிருந்து விலகி இருத்தல்,ஹலால்-ஆகுமாக்கப்பட்டதன் ஆரத்தழுவல்,முஹம்மத் (ஸல்) அவர்களின் முன்மாதிரியான வசந்த வாழ்வு ஆகிய அனைத்தையும் குறித்து என்னைப் பலகோணங்களில் சிந்திக்க வைத்தான்.

இவ்வாறு இறைச்சட்டத்தின்படி நம் வாழ்வை நடத்திச் செல்லும்போது திண்ணமாக, அல்லாஹ்வின் அளவற்ற அருளில் நமக்கும் சிறிதளவு வாய்க்கப்பெறும், நம் பாவங்களை அவன் மன்னிக்கத்தக்கவனாக இருக்கின்றான்.அனைத்துக்கும் அவனே போதுமானவனாக இருக்கின்றான்.இந்த அம்சங்கள் அனைத்தையும் நான் மனத்தளவில் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.

இந்த மாற்றம் வெளியுலகுக்கு உடனே தென்பட ஆரம்பித்துவிட்டதா..?

2000-ஆண்டுகளில் எனது மனத்தளவில் ஏற்பட்ட இந்த மாற்றம் எனக்கு மட்டுமே தெரியக்கூடியதாக இருந்தது.ஆனாலும் எதனையும் ஆய்ந்து சிந்திக்கக்கூடியவன் நான்! இதன் விளைவுதான் திருக் குர்ஆனை நான் ஆய்வு செய்ய ஆரம்பித்ததும்.., முஹம்மத் (ஸல்) அவர்களின் அறிவுரைகள் குறித்து அலச முற்பட்டதும்..!

ஒரு புதிய திசையில் வாழ்க்கையை செலுத்த ஆரம்பித்தீர்கள் என சொல்கின்றீர்கள்..?

ஆம்!அதுதான் உண்மை!அத்தகைய பயணத்தில் நான் சந்தித்தவர்களிடத்தில் இதைக் குறித்து வெளிப்படுத்தியதில்லை.

இந்த சமயத்தில் நாத்திகக் கொள்கைகள் குறித்து உங்கள் நிலை என்னவாக இருந்தது?

நாத்திகம் பேசுவதை 2000-மாவது ஆண்டிலேயே விட்டுவிட்டேன் தம்பி!அதன் பிறகு பவுத்தராக மாறி அதைத்தான் பேசிக் கொண்டிருந்தேன்.அது நாத்திகமா? அல்லவே!அது ஒரு மதம்.

உங்களது இறைதேடலுக்கான விடையை பவுத்தத்திலிருந்து பெற முடிந்ததா, ஐயா?

இல்லை!அந்த மதத்திலும் இறைவன் பற்றிய பேச்சே இருக்கவில்லை.பவுத்தரைப் பற்றி..,ஒழுக்கத்தைப் பற்றித்தான் பேச்சு!பவுத்தம் சார்ந்த மொழியிலும் பாண்டித்யம் பெற்று பவுத்த கொள்கைகள் குறித்து சுவாரஸ்யமாகப் பேசி பிரச்சாரம் செய்துகொண்டிருந்தேன்.

அவ்வாறெனில், உங்கள் கண்ணோட்டத்தில் பவுத்தத்தின்.., கவுதம புத்தரின்.. மதிப்பு என்னவாக இருந்தது?

திருவள்ளுவரும், அவர் இயற்றிய திருக்குறளும் என்னிடத்தில் எத்தகைய மதிப்பு பெற்றிருந்தனரோ, அதேபோல்தான் கவுதமரையும்,பவுத்த கொள்கைகளையும் கண்டேனே தவிர, இறைவன் பற்றி அறியக்கூடிய முகாந்திரத்துக்கான வழியே அவற்றில் தென்படவில்லை.ஆனால், என்னையறியாமலேயே என் மனம் இறைவனை நாடிக் கொண்டிருந்தது.., அவனைத் தேடிக் கொண்டிருந்தது.., இது எனக்குள்ளேயே பொதிந்திருந்தது..! என் மனைவி மக்களுக்குக்கூட தெரியாது!

உண்மை இறைவனை அறிய எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டார்?சத்தியத்தின்பால் திண்மைத்தழுவிய அவரது ஆகுமான மனப்பிறழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்ன?இந்த மனமாற்றம் குடும்ப வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? வினா அம்புகள் தொடர்கின்றன,னுச.அப்துல்லாஹ்வுடனான நேர்காணலில்…!அச்சில் வாசிக்க அடுத்த இதழ் வரை பொறுங்கள்.., இறை நாடின்!

பேசுவேன்!!ஆழமாக சிந்திப்பேன்!!! இதுதான் பெரியார்தாசன்!

Related Post