– கார்க்கி
அழகைக் கூட்டும் தங்கஆபரணம் பெண்ணின் அழகுக்கு மெருகேற்றும் ஓர் உபகரணம்.ஆனால், அதனையே உலகம் ஆக்கிவிட்டது தேவைக்குக் காரணம்.பண்பு ஆபரணத்தில் தன்னை வார்த்தெடுக்காத பாவையும் பொன் ஆபரணத்திடம் அடைகின்றாள் அளவுக்கு மீறிய சரணம்.அழகிய ஆபத்தாய் பெருகி வரும் இந்த தங்க மோகம், பலர் வாழ்வை ஆக்கி வருகின்றது சோகம்.இத்தகைய தரித்தர மோகம் அடைய வேண்டும் மரணம்.
அழகா..,அந்தஸ்தா..,ஆபரணமா…,ஆபத்தா..?
புதிய தாராளவாதக் கௌ;கையின் அறிமுகம் இந்த நிலையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது. நடுத்தர வர்க்கத்தினருக்கும் புதிதாக உருவாகி வந்த சேவைத்துறை ஊழியர்களுக்கும் ஐந்திலக்க சம்பளம் என்பது சாதாரணமாகிவிட்டபடியால், அத்துறைகளின் மாப்பிள்ளைமார்களுக்கும் பெற்றேர்களுக்கும் மணப்பெண் வீட்டை இரத்தம் வர கறப்பதற்கான வாய்ப்பும் கூடியது. தங்கம் ஒரு சேமிப்பு என்ற நடுத்தர வர்க்க மனோபாவத்தைக் கடந்து, அது இப்பேது அந்தஸ்தின் அடையாளமாகி விட்டது.
தாராளமயமும், நுகர்வுக் கலாச்சாரமும் ஊட்டிய தங்க போதை
1991இல் என்.ஆர்.ஐ இந்தியர்கள் இந்தியாவுக்குள் தங்கம் கெண்டு வருவதில் இருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. மேலும் தங்கம் இறக்குமதி செய்வதில் இருந்த மற்ற கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ன. 1990ல் இருந்து 1998காலகட்டம் வரை தங்கத்தின் தேவை ஆண்டுக்கு 15சதவீதமாக வளர்ச்சியுற்றது. இது அதே காலகட்டத்தில் வளர்ந்த மெத்த உள்நாட்டு உற்பத்தியை விட, எண்ணை, சர்க்கரை உள்ளிட்ட மற்ற பெருட்களுக்கான தேவை அதிகரித்த விகிதத்தை விட, உலகளவில் தங்கத்தின் தேவை அதிகரித்த விகிதம் மிகவும் அதிகமாகும்.தமது வாடிக்கையாளர்களில் பெரும் பகுதியினரை கவர்ச்சிகரமான ஷேஷரூம்கள் கெண்ட நகை மாளிகளிடம் நகைப் பட்டறைகள் இழந்தன.
தனியார்மய, தாராளமயக் கௌ;கைகளால் கொழுத்து விட்ட மேட்டுக்குடி வர்க்கம், வாழ்க்கைத்தரமும் சேமிப்பும் மேம்பட்ட நடுத்தர வர்க்கம், இவர்கள் அனைவரிடமும் நிலவிய பிற்பேக்குத்தனமான நகை மோகமும், நகை முதலாளிகளுக்கு பென்னானதெரு வாய்ப்பை, மெய்யாகவே தங்கத் தாம்பாளத்தில் வைத்து வழங்கியது.
மணமகள்களின் நகைக்கடை சுமப்பு.., செல்வத்தின் செருக்கு!
நுகர்வு மோகத்துக்கான வடிகாலாகவும், அந்தஸ்தைக் காட்டிப் பீற்றிக் கௌ;ளத் தோதான பகட்டாகவும், அதே நேரத்தில் எச்சரிக்கை உணர்வு மிக்க இந்திய நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புப் பெட்டகமாகவும், இலஞ்ச ஊழல் கருப்புப் பணத்தைப் பதுக்குவதற்கும் வரி ஏய்ப்பு செய்வதற்குமான கையடக்கமான முதலீடாகவும் இருந்த தங்கம், தனிச்சிறப்பானதெரு இடத்தை சந்தையில் பிடித்தது.கார்ப்பரேட் நிறுவனங்களும், கறுப்புப் பண மாபியாக்களும்தான் இன்று இத்தெழிலில் கோலோச்சுகின்றனர்.
இவர்களுடைய விற்பனைக்கு ஏற்கெனவே வாடிக்கையாளர்களிடம் நிலவி வந்த தங்க மோகம் பேதுமானதாக இல்லை. வாழ்த்து அட்டை வியாபாரிகளும் பரிசுப்பொருள் வியாபாரிகளும், தந்தையர் தினம், தனயர் தினம், தமக்கையர் தினம், காதலர் தினம், காதல் கைகூடாதவர்கள் தினம்’ எனப் பலவகையான தினங்களை உற்பத்தி செய்வதைப் பேல நகை வியாபாரிகள் புதிய சம்பிரதாயங்களை உருவாக்கத் தெடங்கினர். உயர்’சாதிகளிலிருந்து மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட சாதிகளிலிருந்தும் நடுத்தர வர்க்கம் பரவலாகத் தேன்றி விட்டதால், இன்ன ஜாதிக்கு இன்ன தாலி என்றும், இன்ன ராசிக்கு இன்ன ராசிக்கல் என்றும் பரிந்துரைக்க ஜோதிட வல்லுநர்களை பெரும் நகைக் கடைகள் அமர்த்திக் கெண்டனர்.
ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் கேள்வியே பட்டிராத அக்ஷய த்ரிதியை என்ற ஒரு பண்டிகையை பரணிலிருந்து தூசு தட்டி எடுத்தனர். அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் என்று மாறி மாறி மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர். அட்சய திரிதியை நாளில் நகை வாங்கினால் நல்லது என்றும் ஐசுவரியம்’ பெங்கும் என்றும் மக்கள் நம்பவைக்கப்பட்டனர்.
மேல் வர்க்கத்தாரின் மீது பிரமிப்பு கொள்ளும் அடித்தட்டு வர்க்கத்து மக்களும் கூட அந்த நாளில் ஒரு குந்துமணி அளவுக்காவது வாங்கித்தான் வைப்பேமே என்று சிந்திக்கும் அளவுக்கு அக்ஷய த்ரிதியை ஒரு சடங்காகவே மாறிப்பேனது. நல்லதே கெட்டதே ஒரு தேவைக்குப் பயன்படும் என்ற நியாயத்தைக் கூறிக்கெண்டு, கடன் வாங்கியாவது அந்த நாளில் தங்கத்தை வாங்குவது ஒரு பழக்கமானது. பேதும் பேதாதற்கு மக்களிடையே நிலவும் சினிமாக் கவர்ச்சியும் துணைக்கழைத்துக் கௌ;ளப்பட்டது. துணிக்கடைகளைப் பேலவே நகைக்கடைகளுக்கும் பிரபல நடிகைகள் நடிகர்கள் பிராண்டு அம்பாசிடர்களாகினர்.
தங்கத்தின் சூதாட்டமும், இரத்தக்கறை படிந்த வரலாறும்
சென்ற ஆண்டு மட்டும் இந்தியாவில் 800டன் தங்க நகைகள் விற்பனையாகியுள்ளது. இதில் கேரளம், ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் பங்கு மட்டுமே அறுபது சதவீதத்திற்கும் அதிகம். உலகளவில் ஆண்டுதோறும் விற்பனையாகும் தங்கத்தில் 15மூ இந்தியாவில்தான் விற்பனையாகிறது. எனவே இந்தியாவை தங்கத்தின் இதயம் என்கிறார்கள் தங்க வியாபாரிகள்.
தங்கம் இப்போது முன்பேர ஊக வணிகத்தில் பட்டியலிடப்பட்டிருப்பதாலும், டாலரின் வீழ்ச்சி காரணமாக பாதுகாப்பான முதலீட்டின் அடுத்த புகலிடமாகத் தங்கம் இருப்பதாலும், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அதன் விலை மூன்று நான்கு மடங்கு எகிறியுள்ளது. தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அபரிமிதமான செயற்கையான விலையேற்றம் என்பது உழைக்கும் மக்களை அதன் அருகில் கூட வர முடியாமல் விரட்டியடித்துள்ளது.
பளபளக்கும் இந்த உலோகத்தின் வெளிச்சத்தில் தமது பகட்டினைக் காட்டும் சீமான்கள் இந்த வெளிச்சத்தின் கீழே இருண்டு கிடக்கும் கேடிக்கணக்கானேரின் வாழ்வை அறிந்திருக்கவே மாட்டார்கள்.
எங்கோ தென்னாப்ரிக்காவின் தங்க வயலின் பொந்துகளுக்குள் எவ்வித பாதுகாப்பு வசதிகளும் அற்று, நச்சுவாயுக்களை சுவாசித்து டன் டன்னாக பாறையை வெட்டி குந்துமணி குந்துமணியாக தங்கத்தைச் சேர்க்கும் அந்தக் கறுப்பினத் தெழிலாளியின் வியர்வைக்கும் இங்கே ஏதேவெரு சந்தினுள் ஒரு இருட்டு அறையினுள் குண்டு பல்பின் வெளிச்சத்தில் வெளியாகும் ஆஸ்துமா இருமலுக்கும் என்ன விலை வைக்க முடியும் ஸ்பெயின் நாட்டுக் காலனியவாதிகள் கென்றெழித்த இருபது கேடி செவ்விந்தியர்களின் ரத்தத்திலும் எண்ணி மாளாத கறுப்பின அடிமைகளின் ஏக்கப் பெருமூச்சின் வெப்பத்திலும் தேய்ந்த தங்கம் உங்கள் கழுத்தில் ஊறுகிறது.
– புதிய கலாச்சாரம்