Main Menu
أكاديمية سبيلي Sabeeli Academy

சாப்பிடப் போறீங்களா..?

மௌலவி லாஃபிர் மதனி (அபூ அரீஜ்) 

சாப்பிடப் போறீங்களா..?

பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள்

பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள்

றைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். பின்னால் உங்களுக்குக் கூறப்படுபவை தவிர கால்நடை வகையைச் சேர்ந்த அனைத்து பிராணிகளும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் வேட்டையாடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதென்று கருதிவிடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுவதைக் கட்டளையிடுகின்றான்.

பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள். பறக்கப் பறக்க உண்டாலும் பக்குவமாக உண்ண வேண்டும். இதோ அண்ணலார் அவர்களின் அழகிய சில வழிகாட்டுதல்கள்:

உமய்யா (ரழி) அறிவிக்கின்றார்கள்:

‘நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் ‘பிஸ்மில்லாஹ்’ கூறவே இல்லை. அவரின் உணவில் ஒரு கவளம் மட்டுமே இருந்த சமயம், தன் வாய் அருகே அதை உயர்த்திய போது, ‘பிஸ்மில்லாஹி அவ்வல{ஹ வஆகிர{ஹ’என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் சிரித்தார்கள். பின்பு, ‘இவருடன் ஷைத்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இவர் ‘பிஸ்மில்லாஹ்’ ‘கூறியதும் தன் வயிற்றில் உள்ளதை வாந்தி எடுத்து விட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘ (அபூதாவூது, நஸயீ)

அபூஉமாமா(ரலி) அறிவிக்கின்றார்கள்:

‘நபி(ஸல்) அவர்கள் (தான் சாப்பிட்டு முடித்து) தன் தட்டை உயர்த்துவார்களானால், ‘அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கதீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹா ஙைர மக்ஃபிய்யி வலா முவத்தஇன், வலாமுஸ்தஹ்னன் அன்{ஹரப்புனா ‘ என்று கூறுவார்கள்.. (புகாரி)

துஆவின் பொருள்:

அபிவிருத்தி மிக்க – தூய்மையான அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! அப்புகழ், போதுமாக்கப்படமாட்டாது. அதை விட்டும் தேவையற்றதாகப்பட மாட்டாது. நீயே எங்களின் இறைவன்.(ரியாளுஸ்ஸாலிஹீன்: 734)

அபூ{ஹரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

‘நபி(ஸல்) அவர்கள் ஒருபோதும் உணவைக் குறை கூற மாட்டார்கள். அவர்கள் விரும்பினால் அந்த உணவைச் சாப்பிடுவார்கள். அந்த உணவை வெறுத்தால் சாப்பிடாமல் விட்டு விடுவார்கள்.’ (புகாரி, முஸ்லிம்)

அம்ரு இப்னு அபீ ஸலமா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

‘நபி(ஸல்) அவர்களின் வீட்டில் நான் சிறுவனாக இருந்தேன். (உணவுத்) தட்டில் இங்கும் அங்கும் என என் கை அலைந்து கொண்டிருந்தது. அப்போது என்னிடம் நபி (ஸல்) அவர்கள், ‘சிறுவரே! பிஸ்மில்லாஹ் கூறு! உனது வலது கையால் சாப்பிடு! உனக்கு அருகில் உள்ளவற்றில் சாப்பிடு என்று கூறினார்கள்.’ (புகாரி, முஸ்லிம்)

Related Post