டிஸம்பர் 18:இன்று சர்வதேச அரபிமொழி தினம்..!அரபு எழுத்துகள் அல்லது அரபு அரிச்சுவடி என்பது அப்ஜதிய்யா அரபிய்யா என்றழைக்கப்படுகின்றது. இந்த எழுத்துமுறை ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பல மொழிகளை எழுதப் பயன்படுகின்ற முதன்மையான எழுத்துமுறைகளில் ஒன்று. இலத்தீன் எழுத்துமுறைக்கு அடுத்தபடியாக அரபு எழுத்துமுறை உலகில் இரண்டாம் மிகப் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை ஆகும்.[1] முதலாக அரபு மொழியை எழுதுவதற்காக பயன்படுத்தப்பட்டது. இஸ்லாம் விரிந்து அச்சமயத்தின் தாக்கம் காரணமாக இஸ்லாம் உலகில் பல்வேறு மொழிகளின் பேசுவோர் அரபு எழுத்துமுறையை பின்பற்றியுள்ளனர். அரபு மொழி சேர்ந்த செமிட்டிக் மொழிக் குடும்பத்தை சேராத பாரசீகம், உருது, ஹவுசா, பாஷ்தூ, மலாய், பிராகுயி, சிந்தி போன்ற மொழிகளை பேசுவோர் சிறிய மாற்றங்களை செய்து இந்த எழுத்துமுறையை தனது தாய்மொழிகளை எழுதுவதற்காக பயன்படுத்தியுள்ளன.இந்த எழுத்துமுறை முதலில் அரபு மொழி நூல்களையும், அதுவும் குறிப்பாக திருக் குர்ஆனையும், எழுதப் பயன்படுகிறது. பின்னர் இசுலாம் மதம் பரவிய பின்னர் பல மொழிக்குடும்பங்களில் உள்ள பிற மொழிகளின் வரிவடிவங்களையும் எழுதப் பயன்பட்டது. இம்மொழிகளில் பாரசீக மொழி, உருது, பஷ்து (Pashto), பலோச்சி (Baloch), மலாய், கிசுவாகிலி, பிராகுயி, காசுமீரி, சிந்தி, பால்ட்டி, பாக்கிஸ்தானிய பஞ்சாபி, சீனாவின் சிஞ்சியாங் மாநிலத்தில் பேசப்படுகின்ற உய்குர், கசக், உசுபெக்கு, இலங்கை, தென்னிந்தியா மற்றும் சில நாடுகளிலுள்ள அர்வி, ஆப்பிரிக்காவில் மாண்டிங்கா, ஃவுல்ஃவ்வுல்டி-புலார், ஔசா முதலியவும், குர்திசுத்தான், பெலாரூசியன் தார்த்தார், கிர்கிசுத்தான், உதுமானிய துருக்கியம், போசினியாவில் செர்போ-குரோசியம், இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலத்தில் உள்ள ஆச்சே மொழி ஆகிய நில-இன மக்கள் பேசும் மொழிகள் உட்பட வேறு பல மொழிகளும் அரபு எழுத்து முறையைப் பயன்படுத்தி எழுதப்படுகின்றன.
அரபு எழுத்துகள் மொத்தம் 28. ஆனால் அவை முதலெழுத்தாகவும், சொல்லின் இடையேயும், கடைசியாகவும் வரும்பொழுது வடிவங்கள் மாறுபடுகின்றன. அரபு எழுத்து முறையைக் கீழே உள்ள அட்டவணை காட்டுகின்றது. அரபு வலமிருந்து இடமாகப் படிக்கும் மொழி. ஆகவே முதல் எழுத்து என்பது வலது கோடியில் உள்ளது. கடைசி எழுத்து என்பது இடது கோடியில் உள்ளது. வேறு மொழிகளில் கூடுதலாக சில எழுத்துகள் உள்ளன. உயிரெழுத்துகளை கட்டாயமாக எழுத வேண்டம் என்பதால் அரபு எழுத்துமுறை ஒரு அப்ஜத் வகை எழுத்துமுறையாக பிரிந்து கொண்டு இருக்கிறது. கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து…!