கல்வியின் தாயகம் இஸ்லாமிய மார்க்கம்..!

-அஹமட் யஹ்யா

இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்;

இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்;

துவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு! (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக! மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்;மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். அவ்வாறன்று! மனிதன் வரம்பு மீறி நடக்கின்றான்; அவன் தன்னைத் தன்னிறைவுடையவன் என்று கருதிக் கொண்டதால்! ஆனால், திரும்பிச் செல்வது திண்ணமாக, உம் இறைவனின் பக்கமே ஆகும்.தடுப்பவனை நீர் பார்த்தீரா? அடியார் ஒருவர் தொழுது கொண்டிருக்கையில் அவரைத் தடுப்பவனை நீர் பார்த்தீரா? நீர் என்ன நினைக்கிறீர்? அவர் நேர்வழியில் நடந்தாலுமா? அல்லது தூய்மையை மேற்கொள்ளும்படி ஏவினாலுமா? (தடுக்கக்கூடிய இந்த மனிதன் சத்தியத்தைப்) பொய்யென்று தூற்றினால் மேலும், புறக்கணிக்கவும் செய்தால் (அவனைப் பற்றி) நீர் என்ன கருதுகின்றீர்? அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பது அவனுக்குத் தெரியாதா? அவ்வாறன்று! அவன் (இந்த நடத்தையிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையெனில், திண்ணமாக, அவனது நெற்றி முடியைப் பிடித்து இழுப்போம், கடும் தவறிழைத்த பொய்யுரைத்த அந்த நெற்றியை! அவன் தன் (ஆதரவாளர்களின்) கூட்டத்தை அழைத்துக் கொள்ளட்டும்; தண்டனை தரும் வானவர்களை நாமும் அழைத்துக் கொள்வோம். ஒருபோதும் அவ்வாறில்லை! அவனுக்குக் கீழ்ப்படியாதீர். மேலும், சிரம் பணிவீராக! மேலும் (உம் இறைவனின்) நெருக்கத்தைப் பெறுவீராக!

1.இஸ்லாத்தின் பார்வையில் கல்வியின் முக்கியத்துவம்.

உலகில் காணப்படுகின்ற எந்த மதமும், சித்தாந்தமும் வழங்கிட முடியாத அளவு அறிவைத் தேடுமாறு வலியுறுத்துவதுடன், விவேகத்தையும் ஞானத்தையும் வரவேற்பதன் மூலம், அறிவைத் தேடுகின்றவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்தை வழங்கியுள்ளது இஸ்லாம்.
( “இக்ரஃ”) என்னும் ஓதுவீராக!என்ற வார்த்தைகளோடு ஆரம்பமாகி, அதன் நிறைந்த கருத்தின் அடிப்படையில் உலகத்தில் வாழும் மனித சமூகத்தின் பண்பாடுகள்,கலாச்சாரங்கள்,அவ்வப
்போது ஏற்படும் பிரச்சனைக்கான தீர்வுகள்,மனித வாழ்க்கையின் வட்டத்திற்குள் ஹராம்,ஹலால் பேணவேண்டிய வடிவமைப்புக்கள் இது போன்று உலக ஆரம்பம் முதல் முடிவு வரை “ஓதுவீராக!” என்ற வார்த்தையின் மூலமே அமையப்பெற்றது. இது தான் கல்வியின் முக்கியத்துவத்திற்கு வரைவிலக்கணம்.

அல்லாஹ் அல்

ஓதுவீராக!என்ற வார்த்தைகளோடு ஆரம்பமாகி

-ஓதுவீராக!என்ற வார்த்தைகளோடு ஆரம்பமாகி

குர்ஆனில் கூறுகின்றான்.
“அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்”.(அல்குர்ஆன்: 39:9)
“குருடனும் பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டிர்களா? என்று கேட்பீராக!”( அல்குர்ஆன்: 6:50)

அறிந்தவர்களும்,அறியாதவர்களும் சமமாவார்களா ? என்றும் குருடனும்,பார்வையுள்ளவனும் சமமாவார்களா? என்றும் அல்லாஹ் அல்குர்ஆனில் ரத்தினச் சுருக்கமாக உலகத்தில் வாழும் சமூகங்களுக்கும், எக்காலத்துக்கும் பொருத்தமான நிலையிலும் கூறுகின்றான். இந்த வசனத்தை ஆரம்பமாக அறிந்தால் கல்வியின் முக்கியம் ,அதன் சீர்திருத்தம் போன்ற பன்முனைகளை விளங்கிக்கொள்ளலாம்.

ஆக்குகின்றவன்,அழிக்கின்றவன் அல்லாஹ்.
அறிவைக் கொடுப்பதும்,கொடுக்காமல் இருப்பதும் அல்லாஹ்.
இதற்கிடையில் மனிதனை அல்லாஹ் படைத்து அவனுக்கும் மற்றும் உண்டான படைப்பினங்களுக்கும் வித்தியாசமாக பகுத்தறிவை அல்லாஹ் மனிதனுக்கு வழங்கினான். இந்த பகுத்தறிவின் மூலம் நல்லது,கெட்டது இந்த இரண்டையும் ஒன்றோடு ஒன்று கலப்பிடம் செய்யாமல் விளங்கக்கூடிய ஆற்றலை அல்லாஹ் மனிதனுக்கு வழங்கினான். இந்த விஷயத்தை வைத்து கல்வியின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டும் வசனமே மேலே சொல்லப்பட்டது.

அறிந்தவர்கள் எதையும் அறிந்து கொள்வார்கள் அதற்கான முயற்சியை ஆயுதமாகக் கையில் எடுப்பார்கள். அறியாதவர்கள் அறிந்து கொள்ள முயற்சி என்ற வாசகத்தில் , “”கண்டதே காட்சி கொண்டதே கோலம்”” என்று இதைத்தான் அவர்களின் ஆயுதமாக கையில் அல்ல அவர்களின் மனதில் பதித்துக்கொள்வார்கள்.
இதையும் அல்லாஹ் அல்குர்ஆனில் வர்ணித்துக் காட்டுகின்றான்.

“அவன் தான் நாடுவோருக்கு ஞானத்தை வழங்குகின்றான். எவர் ஞானம்கொடுக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக அதிக நன்மைகள்
வழங்கப்பட்டவராவார். சிந்தனையுடேயோர்தான் படிப்பினை பெறுவார்கள்.”(அல்குர்ஆன்.2:269)

இந்த வசனத்தில் சிந்தனை என்ற வாசகம் இடம்பெற்றிருப்பதால் மனிதனுக்கு முயற்சி அவசியம் என்பதை சுருக்கமாக விளங்கலாம்.
இந்த முயற்சி இருந்தால் மட்டும் படிப்பினை பெறலாம், ஒரு தலைப்பின்,அல்லது தான் செய்யும் ஒரு முக்கிய சேவையின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். இதிலிருந்து கல்வியின் முக்கியத்துவம் எந்தளவுக்கு மதிக்கப்பட வேண்டும் என்பதை மேலே சொல்லப்பட்ட வசனம் உணர்த்துகின்றது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருக்கு அல்லாஹ் நன்மை

எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ

எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ

யை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். அல்லாஹ் கொடுப்பவனாக இருக்கிறான். நான் அதை வினியோகிப்பவனாக இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில் ஒரு சாரார் அல்லாஹ்வுடைய கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமைநாள் வரும்வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்த தீங்கும் செய்துவிட முடியாது. (அறிவிப்பவர்..முஆவியா(ரலி) புகாரி 71)

கல்வி என்பது மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகும். மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்துப் பிரித்துக் காட்டும். பல அம்சங்களில் இந்த கல்வியும் முக்கியமான ஒன்று. அவன் சிந்திக்கவும் செயல்படவும் தேவையானது அறிவுதான். அந்த அறிவைப் பெற்றிட அல்லாஹ்வின் அருளால் அவன் நாட வேண்டியது கல்வியாகும்.
இஸ்லாம் சொல்லும் நேரான பாதையை கற்றுக்கொள்ளும் போது மனிதன் அதுதரும் அறிவைக் கொண்டு தனக்கென ஒருதனி அந்தஸ்தைப் பெறுகிறான்.

பயனுள்ள கல்வியை தனக்கும் பிறருக்கும் பயன் தரும் வகையில் அம்மனிதன் செயல்படுத்தும் போது அவனது வாழ்க்கைத்தரம் இறையருளால் உயர்ந்த கட்டமைப்பை நோக்கி நகர்கிறது…

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.
“நபிமார்கள் அனுப்பப்பட்டதும் கல்வி கற்பிப்பதற்கே! உங்களுக்கு உங்களிலிருந்தே தூதரை அனுப்பியது போல் (கிப்லாவை மாற்றுவதன் மூலமும் அருள் புரிந்தான்),அவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத் தூய்மைப்படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுத் தருவார். நீங்கள் அறியாமல் இருந்த வற்றையும் உங்களுக்கு அவர் கற்றுத் தருவார்”. (அல்குர்ஆன்: 2:151)
நபி(ஸல்)அவர்கள் எம்மைப்போன்ற மனிதர்தான் அவர்களை அல்லாஹ் மனிதர்களில்புனிதர்களாகத் தேர்ந்தெடுத்தான். அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத உம்மி நபியாக இருந்தும் அவர்களை அல்லாஹ் கல்வியைக் கற்பிக்கவே அனுப்பிவைத்தான்.
கல்வி என்பது விழிப்புணர்வை எற்படுத்துவதாக இருத்தல் வேண்டும். தொலை தூர நோக்கோடு மனிதர்களை நல்வழிப்படுத்துவதாக
இருத்தல் வேண்டும். சரியான நிலையாகப் பயன்தரும் இலக்கைச் சுட்டிக் காட்டுவதாக இருத்தல் வேண்டும். எந்த நிலை வந்தபோதும் அந்தப் பயன்மிக்க இலக்கை அடைவதை உயிர்மூச்சாகக் கொள்ளும் பக்குவத்தை மனிதர்களுக்கு தரும் விதமாக கல்வி இருக்க வேண்டும்.

தீமைகளை மட்டும் சொல்லி விட்டு தீர்வைச் சொல்லா விட்டால் பயனேதும் இல்லை. இவற்றிலிருந்து மீள்வதற்கான தீர்வுதான் என்ன? சென்று விட்ட சமுதாயத்தைப் பற்றி சிந்தித்துப் பயன் இல்லை-. இப்போது இருக்கின்ற சமுதாயத்தை நெறிமுறைப்படுத்த நாட்கள் பல ஆகலாம். அல்லது நாம் நினைப்பது போல் நடக்காமலும் போகலாம். ஆனால் இனி வரும் இளைய சமுதாயத்தை – வருங்கால சமுதாயத்தை வளர்த்தெடுக்கின்ற பணிகளை நாம் மேற்கொண்டால் நிச்சயமாக அதுவே நமக்கு மிகவும் நன்மை பயப்பதாக அமையும்.

(*) முஆத் பின் ஜபல் (ரழி)அவர்கள் கூறினார்கள்.

தீமைகளை மட்டும் சொல்லி விட்டு தீர்வைச் சொல்லா விட்டால்

தீமைகளை மட்டும் சொல்லி விட்டு தீர்வைச் சொல்லா விட்டால்

* அறிவைக் கற்றுக் கொள்ளுங்கள்;;,
* அதனை அல்லாவுக்காகக் கற்பது இறையச்சமாகும்.
* அதனைத் தேடுவது வணக்கமாகும் ஆகும்.
* அதனை மீட்டுவது தஸ்பீஹ் ஆகும்.
* அதனைப் பற்றி ஆராய்வது ஜிஹாத் ஆகும்.
* அறியாதவருக்கு அதனைக் கற்பிப்பது ஸதக்காவாகும்.
* அதனை அதற்குரியவனுக்கு வழங்குவது நற்கருமமாகும்.

(*)அறிவு,

* தனிமையின் தோழன்
* மார்க்கத்தின் வழிகாட்டி
* இன்ப துன்பத்தில் உதவியாளன்
* நண்பருக்கு மத்தியில் தலைவன்.
* நெருக்கமானவர்களுக்கு மத்தியில் நெருங்கியவன்
* சுவனப் பாதையின் ஒளி விளக்கு

அறிவைக் கொண்டு அல்லாஹ் சிலரை உயர்த்தி, அவர்களை நன்மையான விடயங்களுக்கு முன்னோடியாகவும் ஆக்கிவிடுகிறான்.
அவர்களின் அடிச்சுவட்டில் பலர் செல்வர்.
ஆவர்களின் தோழமையை மலக்குகளும் விரும்புவர்.
மலக்குகள் அவர்களைத் தமது இறக்கைகளால் தடவி விடுவர்.
கடலில் உள்ள மீன்கள், ஏனைய ஜீவராசிகள், கரையில் உள்ள மிருகங்கள், கால் நடைகள், வானம், நட்சத்திரங்கள் உட்பட பசுமையான, காய்ந்த அனைத்தும் அவர்களுக்காகப் பிரார்த்திக்கின்றன…
ஸூப்ஹானல்லாஹ் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள அல்லாஹ் நமக்கு நல்லருள் புரியவேண்டும்.

Related Post