கருணைக்கு கடிவாளம் வேண்டாம்!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..!

-மு.அ.அப்துல் முஸவ்விர்

ளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்).

எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.

மற்றவரிடம் கருணை காட்டாதவர்கள் மீது இறைவனும் தன் கருணையைப் பொழிவதில்லை!

தான் விரும்புவதையே தன்னுடைய சகோதரருக்கும் விரும்பாதவரை ஒருவர் உண்மையான இறைநம்பிக்கையாளராக ஆக முடியாது!

அண்டை வீட்டுக்காரர் பசியோடு இருக்க, தான் மட்டும் வயிறார உண்பவன் இறைநம்பிக்கையாளன் அல்ல!

பிறரை(த் தாக்கி) கீழே வீழ்த்தி விடுபவன் வலிமையாளன் அல்லன். (மாறாக) கோபம் வரும்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே (உண்மையான) வலிமையாளன்!

இறைவன் உங்களுடைய உடலமைப்பையும், தோற்றத்தையும் கொண்டு உங்களைக் கணிப்பதில்லை. மாறாக, அவன் உங்களுடைய உள்ளத்தையும், செயல்களையும் மட்டுமே பார்க்கின்றான்!

ஒரு மனிதன் தாகத்தால் தவித்த நாய் ஒன்றுக்கு பருக தண்ணீர் வழங்கினான். (அவனுடைய இந்த செயலுக்குப் பகரமாக) இறைவன் அவனது பாவங்களை மன்னித்தான். (அப்போது) முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: இறைத்தூதரே! விலங்குகளிடத்தில் கருணைக் காட்டினாலுமா எங்களுக்கு வெகுமதி கிடைக்கும்? முஹம்மத் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: ஒவ்வொரு உயிர்களிடத்திலும் காட்டப்படும் கருணைக்கு வெகுமதி உண்டு! (அந்த உயிரினம் ஒரு மனிதனாயினும் சரி அல்லது ஒரு விலங்காயினும் சரியே)!

 

 

 

Related Post