ஒரு உண்மை அழைப்பாளரின் இழப்பு..!

-மு.அ. அப்துல் முஸவ்விர்

குவைத்-தைச் சேர்ந்தவரான அப்துர் ரஹ்மான் அல்-சுமைத் அவர்கள் ஒரு மருத்துவர் மட்டுமல்ல, சிறந்த அறிஞர் மற்றும் சமூக ஆர்வலர்.

குவைத்-தைச் சேர்ந்தவரான அப்துர் ரஹ்மான் அல்-சுமைத் அவர்கள் ஒரு மருத்துவர் மட்டுமல்ல, சிறந்த அறிஞர் மற்றும் சமூக ஆர்வலர்.

குவைத்-தைச் சேர்ந்தவரான அப்துர் ரஹ்மான் அல்-சுமைத் அவர்கள் ஒரு மருத்துவர் மட்டுமல்ல, சிறந்த அறிஞர் மற்றும் சமூக ஆர்வலர்.

இஸ்லாமிய அழைப்புப் பணியில் அன்னாருடைய பங்கு பொன்னெழுத்துக்களால், குவைத் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று எனில் அது மிகயல்ல..! இந்திய சுதந்தர தினமான 15, ஆகஸ்ட், 1947-இல் பிறந்த இவர், தனது 66-ஆவது வயதில், அதே தினத்தில் மரணம் எய்தினார். (இன்னாலில்லாஹி..)

ஆப்பிரிக்க நாடுகளில் அன்னார் ஆற்றிய அழைப்புப்ணி ஆயிரக்கணக்கான மக்களை இஸ்லாத்தின்பால் ஈர்;ததது.

அதுமட்டுமல்ல, ஏறக்குறைய நான்கு பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட, 840 கல்வி நிலைய வசதிகளையும் ஏற்படுத்தி இருக்கின்றார். இததவிர, 90 மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களையும் அமைத்ததுடன், 12,000 நீல்நிலை கிணறுகளை ஏற்படுத்தி மக்களின் தாகம் தீர்க்க வழவகுத்துள்ளார்.

ஆப்பிரிக்க  முஸ்லிம் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். இது பின்னர், னுசைஉவ யுனை எனும் பெயர் பெற்றது. ஆப்பிக்காவின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிலைகள் குறித்து மிக ஆழந்த அறிவு கொண்ட அவர், தனது பணிகளை அக்கண்டம் முழுவதும் விரிவுபடுத்தியிருந்தார். அன்னாருடைய சேவை, எத்தியோப்பியா, எரிடேரியா, டிஜிபோடி, கென்யா, மொஸாம்பிக், மலாவி, ஜாம்பியா மற்றும் அங்கோலா உள்ளிட்ட நாற்பது நாடுகள் வரை பரவியிருந்தது.ஷ

ஆப்பிரிக்க மற்றும் இஸ்லாமிய உலகில் அன்னாரின் சேவையைப் பாராட்டி பல விருதுகள் வழங்கிக் கவுரவிக்கப்ட்டது அவரது ஆளுமைத் திறன்.

ஆம், அவர்கள் மிகச்சிறந்த செய்திறன் மிக்கவராகவும் அழகிய பண்புகள் மிளிர்ந்தவராகவும் இருந்தார். உலகத்தார் மத்தியில், எதிர்மறையான எண்ணங்களாக உருவெடுக்கும் அரபுசமூகத்திலிருந்து வந்தாலும் அயராத உழைப்புக்கு இலக்கணமாக இருந்தவர்.

அவருடைய அரும்பெரும் முயற்சியால், அன்னாருடைய மறைவுக்கு ஒரு வாரம் முன்பாகத்தான், கென்யா-வில் ஸவூதி –அல்-ராஜி நிறுவன உதவியுடன் ஒரு இஸ்லாமிய பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்பட்டது. இது அவருடைய சிந்தனைக் குழந்தையாக னடந்த 15 ஆண்டுகளாக இருந்துவந்த திட்டம்..!

இந்த பல்கலைக்கழகத்தின் மூலம் கென்ய மக்கள், மருத்துவம்,பொறிஇயல், வணிகம் மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் பட்டம் பெற வகை செய்யப்பட்டிருக்கின்றது.

தனது இளமைக்காலங்களில் அவர் மதன் முதலாக வாங்கிய காரை தன் சுயபயன்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்தாமல், குவைத்தில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இலவசமாக அவர்களுடைய போக்குவரத்துக்காக பயன்படுத்தினார். அன்னாருடைய ஒரு சமூகசேவைக்கு முற்றிலும் வித்தியாசமான சிறிய உதாரணம் இது..!

ஏகஇறைவன் அன்னாருடைய பிழைகளைப் பொறுத்து, அவருக்கு சுவனத்தை நிச்சயிப்பானாக.,! அன்னாருடைய குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையையும் வழங்குவானாக..!

Related Post