உலகத்தின் அனைத்து நிர்மானப் படைப்புக்களும் இறைவல்லமையைப் பறைசாட்டுவதாக உள்ளன. இறைவல்லமையை இலங்கச் செய்யும் மாபெரும் படைப்பாக விளங்குவது மனிதனும் அவனை இயக்கச் செய்யும் உறுப்புக்களும்..அவைகளின் பெருமதி மதிப்புக்கள் உலக செல்வங்களைக் கொண்டு வாங்க முடியாதது….
அழகுற அவைகளை பயன்படுத்தும்போதே அவற்றின் உரிமைப்பேணப்படுகின்றது……
அகத்தின் அழகு மகத்தில் தெரியும். முகத்தின் அழகு கண்களில் தெரியும். தூய உள்ளமா, இல்லையா என்பதைக் கண்களே காட்டிக் கொடத்துவிடும். ‘கண்ணிலே நல்ல குணம்’ என்றான் பாரதி!
கண் மட்டுமல்ல, காதும்தான் பாதகாக்கப்பட வேண்டும். எங்கு ஏற்படுகின்ற சத்தமும், எவர் பேசுகின்ற பேச்சும் காதில் வந்த விழத்தான் செய்யும். அதில் தேவையானவற்றை மட்டும் மூளைக்கு அனுப்பிவிட்டு வேண்டாததை உதறிவிடும் திறமை காதுக்கு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இது முடியாததல்ல. மனம் பயிற்சி செய்தால் காதுக்குப் பலம் கிடைக்கும். தேவையில்லாத நேரங்களில் காது கேளாமல் இருந்துவிட முடியும்.
ஆனால், நமது அனுபவம் வேறு மாதிரிதான் இருக்கின்றது. அதுவும் அடுத்தவர்கள் மெதுவாகப் பேசிக் கொள்கின்றார்கள் என்றால், நம் காதுகள் உடனே திறக்கப்பட்டுவிடுகின்றன. ஒட்டுக் கேட்பதில் இருக்கும் திருப்தி வேறு எதிலும்
இருக்கின்றதா என்ன? பயணங்களின்போது யாரோ இருவர் பேசிக் கொண்டிருந்தாலே நம்மையறியாமல் நம் காதும்,மனம் அதை ரசிக்கத் தயாராகிவிடுகின்றன.இது ஒரு பெரிய குறையல்லதான். ஆனால். சுயமாகவும் உருப்படியாகவும் சிந்திக்க நமக்கு ஒன்றுமே இல்லை என்பதையே இது காட்டுகின்றது.
மூன்று பேர் பேசிக் கொண்டிரக்கும் சூழலில் ஒருவர் காதில் மற்றவர் இரகசியம் பேசுவது போலப் பண்பாட்டுக் குறைவு எதுவும் இல்லை. ‘உனக்குத் தெரியக் கூடாத செய்தியை நாங்கள் பெசிக் கொண்டிருக்கின்றோம்’ என்று மூன்றாமவருக்கு சொல்வதாகும் அது. (அதேபோல், மூன்றாமவருக்குத் தெரியாத மொழியில் மற்ற இருவர் பேசிக் கொள்வதும்) இது ஒருவிதத்தில் அவரை அவமானப்படுத்துவதாகும். அந்த மூன்றாமவர் நாம்தான் என வைத்துக்கொள்வோம்.நம் எதிரில் நண்பர்கள் இருவர் இப்படி காதுக்குள் (அல்லது நமக்குத் தெரியாத மொழியில்) பேசிக் கொண்டால், நமக்கு மண்டையே வெடித்தவிடும். ‘என்ன பேசிக் கொண்டீர்கள்?’ என்று ஆரம்பிப்போம் அவர்கள் என்ன சொன்னாலும் மனம் எற்றுக்கொள்ளாது. ஆந்த இடமே சோகம் தவழும் இடமாகிவிடும் நமக்கு! சிலநேரங்களில் நட்பு உடைவதற்குக்கூட இது காரணமாகிவிடும். ‘நாம் இல்லாத இடத்தில் எவ்வளவோ பேசிக் கொள்கின்றார்கள். இப்போதும் பேசிவிட்டுப் போகட்டும்’ என்று நினைத்து மனத்தைப் பழகிக் கொண்டால். மனம் அவர்கள் பேசுவதை ஒதுக்கிவிடும்.இந்தச் கூழ்நிலைகளில் காதுகள் தற்காலிகமாகச் செவிடாகிவிடுவதுதான் காதுக்கு உண்மையான அணிகலன்.
கண்ணுக்கும் காதுக்கும் இவ்வளவ எச்சரிக்கை தேவை என்றால். வுhய் மட்டும் மட்டமா என்ன? உண்ணாவிரதம்கூட இருந்தவிடலாம். மவுனவிரதம் இருப்பது எளிதானதா, என்ன?
ஒரு சிறிய ஜென் கதையைக் கேளுங்கள்!
நான்கு துறவிகள் மவுன விரதம் இருந்தனர். ‘காலை முதல் இரவு வரை சோமல் இருக்க வேண்டும்’ எனும் எண்ணத்துடன் நான்கு துறவிகளும் அமர்ந்திருந்தனர். அமைதியாக நாள் கழிந்தத. எழுந்து போனால், பேச நேரலாம் என்பதால், இடத்தைவிட்டு யாரும் அசையக்கூட இல்லை. மாலை மயங்கி இரவு நெருங்கிக் கொண்டிருந்தது..!எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி தீர்ந்துபோய் அணைவதைப் போலிருந்தது. இருட்டாகிவிடுமோ எனும் பதற்றத்தில், ‘வேறு மெழுகவர்த்தி இருக்கின்றதா’ என கேட்கத் தொடங்கி, நாக்கைக் கடித்துக் கொண்டார் ஒருவர். பக்கத்துத் தறவிக்கு எரிச்சலாய் வந்தது.’மவுன விரதம் இரக்கின்றோம் என்பத மறந்துபோய்விட்டதா?’ என்றார். இருவரும் பேசியதால் இன்னொருவருக்குக் கோபம் பொங்கியது. ‘அவன்தான் பேசித் தொலைத்தான். நீயும் ஏன் பேசினாய்? ஏன்று கோபமாகக் கேட்டார். நான்காவது துறவிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ‘எல்லோரும் பேசிவிட்டீர்கள்… நான் மட்டும் பேசவில்லை’ என்று மகிழ்ச்சியோடு கத்தினார்.
நாம் பேசும் பேச்சுக்களை வைத்து ஒரு சீனப் பழமொழி நம்மை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கின்றது. ‘கீழ்த்தரமான மனிதர்கள் எப்போதும் பிற மனிதர்களைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். சாதாரண மனிதர்கள் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். உயரந்த மனிதர்கள் கருத்துக்களைப் பற்றிப் Nசுகின்றார்கள்.’
கண்,காது,வாய் தொடர்பாக இந்தச் சிந்தனையைப் படிக்கும்போது காந்திஜியின் மூன்று குரங்கு பொம்மைகளின் நினைவு (படம் அருகே) உங்களுக்கு வந்திருக்கலாம். எதிரி வெளியே இல்லை என்பதை உணர்த்தும் இந்த மூன்று குரங்கு பொம்மைகளை எல்லோரும் பார்த்திருக்கின்றோம். இதில் நயம் என்ன தெரியுமா? காதுகள் இரண்டானாலும் செய்யும் வேலை ஒன்றுதான். கண்கள் இரண்டானாலும் செய்யும் வெலை ஒன்றுதான். நாக்கு ஒன்றுதான், ஆனால் செய்யும் வேலைகள் இரண்டு. உண்பமு;. பேசுவதும்! இவை இரண்டுமே எல்லை மீறக் கூடாது. உண்பது எல்லை மீறினால், உடல்நலம் கெடும். பேசுவது, எல்லை மீறினால் பெயர் கெடும்.
எனவே, எதிரியை அடையாளம் காணுங்கள்… உங்கள் வாழ்வை செம்மைப்படுத்துங்கள்!