எஜமானன் அல்லாஹ்..!

–  ஷேக் ஸாலேஹ் உஸைமீன்

– ஹூதா

– தொகுப்பு அப்துல் முஸவ்விர்

அடிப்படைக் கடமைகள்

 

வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்றல்

வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்றல்

1.அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதும், நற்செயல்கள் செய்வதும் அல்லாஹ்வை நேசிப்பதும், அவனை கணியப்படுத்துவதன் மூலம் மனம் தூய்மையடைகிறது. அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கை உறுதியடைகிறது.

2.ஒவ்வொரு நாளும் இரவு பகலில் ஐந்துவேளை தொழுகையை நிலைநாட்டவேண்டும். அதன் காரணமாக அல்லாஹ் தவறுகளை மன்னித்து அந்தஸ்தை உயர்த்துகிறான். இதயத்தையும் சூழ்நிலைகளையும் சீர்படுத்துகிறான். இந்த நல் அமலை அடியான் இயன்ற வகையில் நிறைவேற்றியே ஆகவேண்டும்.

 فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوا وَأَطِيعُوا وَأَنفِقُوا خَيْرا ً لِأنْفُسِكُمْ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِه ِ فَأُوْلَائِكَ هُمُ الْمُفْلِحُون

 உங்களால் சாத்தியமான வரையில் அல்லாஹ்வுக்குப் பயந்து அவனுக்குச் செவிசாய்த்து வழிப்பட்டு நடந்து, தானமும் செய்யுங்கள். இது உங்களுக்குத்தான் மிக நன்று. எவர்கள் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அத்தகையோர் நிச்சயமாக வெற்றியடைந்து விடுவார்கள் (அல்குர்ஆன் 64 : 16)

நபி (ஸல்) அவர்கள் இம்ரான் இப்னு {ஹஸைன் (ரலி)  நோய் வாய்ப்பட்டிருந்தபோது கூறினார்கள் : நின்ற நிலையில் நீர் தொழுது கொள்வீராக! அது உமக்கு இயலவில்லையென்றால் உட்கார்ந்த நிலையில், அதுவும் உமக்கு இயலாவிட்டால் படுத்த நிலையில் தொழுதுகொள்வீராக! நூல் : புகாரி.

3.ஜகாத்

அது உனது செல்வத்தின் சிறு பகுதியாகும். அதை முஸ்லிம்களில் வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் கடனில் மூழ்கியவருக்கும் வழிப்போக்கர்களுக்கும் ஜகாத்துக்குத் தகுதிபெற்ற இவர்களல்லாதவர்ககளுக்கும் வழங்கவேண்டும்.

4.வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்றல்

எவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமளான் அல்லாத) மற்ற நாட்களில் (விட்டுப்போன நாட்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று) விடவும்… (அல்குர்ஆன்  2 : 185)

நிரந்தரமாக பலவீனமடைந்து நோன்பு நோற்கச் சக்தியற்றவர் ஒவ்வொரு நோன்புக்குப் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கவேண்டும்.

5.வசதி பெற்றவர் வாழ்வில் ஒருமுறை ஹஜ் செய்வது.

இந்த ஐந்தும் அல்லாஹ்வுக்கு நிறைவேற்றவேண்டிய அடிப்படைக் கடமைகளாகும். இவையல்லாத அனைத்தும் சூழ்நிலைகளுக்கேற்ப விதியாகும் கடமைகளாகும். உதாரணம் : அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது, அல்லது காரணங்களால் ஏற்படும் கடமையாகும். உதாரணமாக அநீதி இழைக்கப்பட்டவனுக்கு உதவி செய்வது.

இக்கடமைகளை செய்வது மிக எளிதானது. இக்கடமைகளை  நிறைவேற்றினால் இம்மை மறுமையில் ஈடேற்றமடைந்து  நரகிலிருந்து விடுதலைபெற்று சுவனத்தினுள் நுழைவது நிச்சயம்.

 

كُلُّ نَفْس ٍ ذَائِقَةُ الْمَوْتِ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلاَّ مَتَاعُ الْغُرُورِ

 

அது உனது செல்வத்தின் சிறு பகுதியாகும்.

அது உனது செல்வத்தின் சிறு பகுதியாகும்.

ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுகிக்க வேண்டியதாகவே இருக்கின்றது. (எனினும்) உங்கள் (செயல்களுக்கான) கூலிகளை நீங்கள் பூரணமாக அடைவதெல்லாம் மறுமைநாளில்தான். ஆகவே (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் புகுத்தப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை. (அல்குர்ஆன்  3 : 185)

 

Related Post