உலகமயமாக்கல்’ எனும் பெயரில் இன்றைய உலகில் திணிக்கப்பட்டுவரும் நவீன காலனித்துவம் அரசியல், பொருளாதார ரீதியான அமெரிக்க தலைமையிலான மேற்குலகின் மேலாதிக்கத்தை உலகில் வலுவடையச் செய்வதை மாத்திரமன்றி சிந்தனா ரீதயாகவும், கலாசார ரீதியாகவும் உலகை அடிமைப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டிருக்கிறது.
சமீப காலமாக நமது நீதிமன்றங்கள், நாட்டின் காலச்சார சீரழிவுக்கு ‘எதோ நம்மால முடிஞ்சது‘ என்ற வகையில் பரபரப்பான தீர்ப்புகளை வழங்கி வருகிறது. ஏற்கனவே ஓரினச்சேர்க்கை தவறல்ல என்ற ரீதியில் வழங்கிய தீர்ப்பு ஒரு நேரத்தில் சர்சையை உண்டாக்கியதை நாம் அறிவோம். அந்த வரிசையில் இப்போது,
”தனியாருக்குச் சொந்தமான வீடுகளில் ஆபாசப்படம் பார்ப்பது குற்றச் செயல் ஆகாது” என்ற ஒரு அற்புதமான[!] தீர்ப்பை மும்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதுபற்றி தினமலரில் வந்த செய்தி சுருக்கமாக நன்றியுடன்;
”மும்பை அருகே லோனாவ்லாவில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் நடந்த பார்ட்டியின் போது, லேப்டாப்பில், ஆபாசப்படம் பார்த்தபடி, நடனம் ஆடிக்கொண்டிருந்ததாக தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் 22 பேரும், நடனப் பெண்கள் 11 பேரும் கடந்த 2008 ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய திடீர் சோதனையில் அவர்கள் சிக்கினர். அவர்கள் மீது, பொது இடத்தில், ஆபாசப்படம் பார்த்தது, அனுமதி பெறாமல் மது பார்ட்டி நடத்தி, பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு மும்பை ஐகோர்ட்டில் நடந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள் கூறியதாவது: பொது இடங்களில், ஆபாசப்படங்களை திரையிடுவதுதான் குற்றமான செயல் ஆகும். யாரும் மறுப்பு தெரிவிக்காத நிலையில், தனியாருக்குச் சொந்தமான வீடுகளில் ஆபாசப்படம் பார்ப்பது குற்றச் செயல் ஆகாது. இதற்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க முடியாது. ஆபாசப்படங்களை விற்பனை செய்வது, வாடகைக்கு விடுவது, அதனை பரவ விடுவது, பொது இடங்களில் திரையிடுவது ஆகியவை குற்றச் செயல்கள் ஆகும். இந்த வழக்குத் தொடர்பாக, கைது செய்யப்பட்டவர்கள், தனியாருக்குச் சொந்தமான பங்களாவில், லேப்டாப்பில் ஆபாசப்படம் பார்த்துள்ளனர். தனியார் பங்களா என்பது பொது இடம் ஆகாது. அது லாட்ஜூம் அல்ல. மேலும், நடன பெண்களுடன், தனியார் நிறுவன அதிகாரிகள் நடனமாடியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்கள் எல்லாமே தனியார் இடத்தில் நடந்துள்ளது. அங்கு, பொதுமக்கள் வருவதற்கான முகாந்திரமோ, அங்கு படம் பார்ப்பது தவறு என்று சொல்வதற்கான முகாந்திரமோ இல்லை. எனவே, இந்த செயல் குற்றச் செயல் ஆகாது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பண போதையில் வயதை தொலைக்கும் இளைய சமுதாயம்!
சாதனை செய்யும் ஆசையில், இளைய சமுதாயம், மனரீதியிலும், உடல்ரீதியிலும் பாதிக்கப்படுவதாக, மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். நம் நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால், வேலைவாய்ப்பும் பெருகி விட்டது. ஒரு டிகிரிப் படிப்பு முடித்தாலே, கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கிறது !. சாதிக்க துடிக்கும் ஆவலுடன், இளைஞர்கள், கால நேரம் பாராது உழைக்கின்றனர். இதனால், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். முதுமைக்குரிய உடல் பாதிப்புகள், அவர்களுக்கு நடுத்தர வயதிலேயே ஏற்படுகிறது.
பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் சீனியர் அதிகாரியாக வேலைபார்க்கும் ஒருவர் கூறியதாவது:
நான் கடந்த ஏழு ஆண்டுகளாக, இந்த நிறுவனத்தில் பணிபுரிகிறேன். என் திறமையால் பல பணி உயர்வுகளையும், எதிர்பார்ப்புகளுக்கு மிஞ்சிய சம்பளத்தையும் பெற்றேன்.பணி நிமித்தமாக, பல்வேறு நாடுகளுக்கும் சென்று வருகிறேன். எனக்கு தற்போது 32 வயதாகிறது. ஆனால் நான், அந்திம காலத்தை நெருங்கிவிட்டது போல உணர்கிறேன். பணிச்சுமையால் மன ரீதியிலும்,உடல் ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். வாழ்க்கையில் மாற்றத்தை விரும்புகிறேன். எனவே வேலையை விட்டுவிட முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
இதே போன்று, பெரும்பாலான இளைஞர்கள், பணிச்சுமையால் மன அழுத்த நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து மனோதத்துவ நிபுணர் கூறியதாவது:
கைநிறைய காசு சம்பாதிக்கும் ஆசையில், இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கு சேர்கின்றனர். தொடர்ந்து திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம், வேலைப்பளு, நிச்சயமற்ற பணிச் சூழல் ஆகியவற்றால், குறுகிய காலத்தில் அவர்கள் மன அழுத்த நோய்க்கு ஆட்படுகின்றனர்.தற்போதைய வாழ்க்கை சூழலில் இளைஞர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது. வசதியான வாழ்க்கை அமைய, 32 வயதுக்குள், அள வுக்கு அதிகமாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தைவிட, அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் அவர்கள், மன அழுத்த நோய்க்கு ஆட்படுவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது.தற்போதைய வாழ்க்கை முறையில், எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளது. அதை அடைவதற்கு இளைய சமுதாயத்தினர், அதிக “ரிஸ்க்’குகளை எடுக்கின்றனர். இதனால் அவர்கள் இளம் வயதிலேயே முதுமையை உணர்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
“மன அழுத்த நோயை தவிர்க்க, தனிப்பட்ட வாழ்க்கைக்கும், அலுவலகத்திற்கும் இடையில் சமநிலையை கடைபிடிக்க வேண்டியது அவசியம்; வாழ்க்கையில் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரும் பழக்கத்தை விட்டொழித்து சுமூகமாக அணுக பழகி கொண்டால், மன அழுத்த நோய் நம்மை அண்டாது’ என, நிபுணர்கள் தீர்வு கூறுகின்றன