இஸ்லாமிய வாழக்கை முறையும் நடுநிலையும்!

இஸ்லாமிய வாழக்கை முறையும் நடுநிலையும்!
– மு.அ அப்துல் முஸவ்விர்
அமைதியின் மதர்க்கம் என்று பெயர் பெற்ற இஸ்லாமிய வாழ்க்கை முறை

அமைதியின் மதர்க்கம் என்று பெயர் பெற்ற இஸ்லாமிய வாழ்க்கை முறை

ஸ்லாமிய வாழக்கை முறையும் நடுநிலையும்!மைதியின் மதர்க்கம் என்று பெயர் பெற்ற இஸ்லாமிய வாழ்க்கை முறை என்பது, மனித வாழ்வுக்கு சிரமம் ஏற்படுத்தாத நடுநிலையானதொரு வாழ்க்கை முறையாகும். அதன் அழகிய கொள்கை கோட்பாடுகளில் மிளிரும் உன்னத தாத்பர்ய அம்சங்களிலிருந்து இதனை நாம் அறிந்து கொள்ள இயலும். வாழ்வின் அனைத்துத் துறை சார்ந்த அம்சங்களான, பரஸ்பர உறவுமுறைகள், வணக்க வழிபாடுகள், நடைமுறை சித்தாந்தங்கள், கொடுக்கல்-வாங்கல்கள், தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வு சார்ந்த அனைத்து விஷயங்களிலும் அதன் அழகிய நடுநிலைமை காண முடிகின்றது.
நாம் சொன்ன இந்த அம்சங்களில், தீவிரத் தன்மையோ அல்லது உதாசீனப் போக்கோ அன்றி, இந்த இருநிலைகளுக்கும் அப்பாற்பட்டு, சமப்படுத்திக் காணக்கூடிய, நடுநிலைமைப் போக்கை இஸ்லாம் மனிதனுக்கு வழங்கி இருக்கின்றது. சுருங்கக் கூறினால், வாழ்வின் ஒவ்வொரு தொடர்பிலும், அது அனைத்தையும் தழுவிய நடுநிலை சித்தாந்தப் போக்கை முன்வைக்கின்றது.
உதாரணத்துக்கு படைத்தவனுக்கும் படைப்பாளனுக்கும் இடையேயயான உன்னத தொடர்பில் முன்னதாக இருக்கக் கூடிய, வணக்க வழிபாட்டை எடுத்துக் கொள்வோம். மனிதனி;ன் ஆன்மிகம் சார்ந்த இந்த உன்னத கடமையை இஸ்லாம் ஒரு தீவிரத் தன்மை மிக்க கட்டாயமாக முன்வைக்கவில்லை. மாறாக, அவனால் முன்னெடுத்து செல்லக்கூடிய வகையிலான நடுநிலை அம்சம் கூடிய, அதே வேளை அவனுக்குப் பலனும் நல்கக்கூடிய ஒரு கடமையாகத்தான் முன்வைக்கின்றது.
ஒவ்வொரு முஸ்லிமும் கடமையாகக் கொள்ள வேண்டிய ஐவேளைத் தொழுகையை எடுத்துக் கொள்ளுங்கள். புத்தி சுவாதீனமுள்ள ஒவ்வொரு முஸ்லிம் ஆண்-பெண் இருவர் மீதும் கடமையாக உள்ள இந்த வணக்க வழிபாட்டு அம்சம், எந்தவொரு தீவிரத்தனமோ அல்லது அலட்சியப் போக்கோ அற்றதொரு வழிவகைகளுடன்தான் கடமையாக்கப்பட்டிருக்கின்து எனில் அது மிகையல்ல.
ஒரு மனிதன் நின்றுகொண்டு தொழுகையை மேற்கொள்ள வேண்டும். எனினும் அந்த மனிதனால், நின்றுகொண்டு தொழ இயலாமற் போகும் வகையில் உண்மையான காரண காரியம் இருக்குமானால், அவர் உட்கார்ந்துகொண்டு தொழ முடியும். அப்படியும் இயலாமற்போனால், படுத்nதுக் கொண்டும்.., அவ்வாறும் இயலாத பட்சத்தில் சைகை கொண்டும் தொழுதுகொள்ளலாம். ஆனால், அனைத்துக்கும் உண்மையான காரணம் இருக்க வேண்டுமே தவிர அதனை தன் விருப்பத்துக்கு சலுகையாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது.
எவரொருவர் எனது இந்த வழிமுறையிலிருந்து மாறி இருக்கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல

எவரொருவர் எனது இந்த வழிமுறையிலிருந்து மாறி இருக்கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல

இதனையே இன்னொரு கோணத்தில் நாம் காண்போமேயானல், மனிதனுக்குரிய சில தேவைகளை, அவனைச் சார்ந்தவர்களின் தேவைகளையும் புறந்தள்ளிவிட்டு எந்நேரமும் தொழுதுகொண்டே இருந்துகொண்டு, வணக்கவழிபாட்டில் இருப்பது என்பது சரியானதொரு விஷயமல்ல.
அண்ணலார் (ஸல்) அவர்களின் தொழுகைகூட நடுநிலையானதாக இருந்தது. ஒரு முறை தோழர்கள் தொழுகை, நோன்பு உள்ளிட்ட இறைவணக்கங்களில் தங்களின் அதி தீவிர ஈடுபாட்டைக் குறித்து அளவளாவிப் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்களுடைய இந்நிலை அண்ணலார் (ஸல்) அவர்களுடைய நிலைக்கு எவ்வாறு மாறுபட்டு இருந்தது என நபித்தோழர் அனஸ் (ரலி) அவர்களின் நபிமொழி அறிவிப்பு ஒன்றிலிருந்து அறிந்துகொள்ள முடியும். அந்த நீண்டதொரு அறிவிப்பில் அனஸ் (ரலி) அவர்கள், அண்ணலார் (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவும் செய்தார்கள், அதேபோல் இரவில் தூங்கவும் செய்தார்கள். நோன்புடனும் இருந்தார்கள்., அதேபோன்று அவர் நோன்பு நோற்காமலும் இருந்த நாட்கள் உண்டு. தமது இல்லத்தரசிகளுடன் சேர்ந்தும் இருந்தார்கள். எவரொருவர் எனது இந்த வழிமுறையிலிருந்து மாறி இருக்கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல என்று அண்ணலார் (ஸல்) அவர்களின் வாய்மொழியாகவே அந்த அறிவிப்பில் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். இவ்வாறாக, பல்வேறு அம்சங்களை உதாரணங்களாக நாம் காண முடியும்.
அதேபோன்று, அழைப்புப் பணி சார்ந்த துறையிலும் இந்த நடுநிலைமை வலியுறுத்தப்படுகின்றது. இறைவனே அதனை மிக அழகாக திருக் குர்ஆனில் கூறி இருக்கின்றான்.
(நபியே!) விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக! மேலும், மிகச் சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக! தன்னுடைய பாதையிலிருந்து வழிபிறழ்ந்தவர் யார் என்பதையும், நேர்வழியில் இருப்பவர்கள் யார் என்பதையும் உம் அதிபதி நன்கறிவான். திருக் குர்ஆன் 16:125
எனவே, ஏற்றுக்கொள்ளப்பட்ட இறைமார்க்கமான இஸ்லாமிய அழைப்புப்பணி சார்ந்த அம்சங்களிலும், இறைக்கட்டளையானது நடுநிலையையே பேணும்படி வலியுறுத்துகின்றது.
அதேபோன்றுசமூக உறவுசார்ந்த அம்சங்களிலும் இஸ்லாம் நடுநிலைமையையே பேணுவதைக் காண முடியும். அலீ (ரலி) அவர்கள் இநத உறவுமுறைப் பேணுதலின் நடுநிலைமையை மிக அழகாக் கூறினார்கள். எவரை நேசித்தாலும் நடுநிலையோடு நேசியுங்கள். ஏனெனில் ஒரு நாள் (அவருடைய செய்கையால்) அவர் உமக்கு விருப்பமானவராக இல்லாத நிலை ஏற்படக்கூடும். எவரைப் புறக்கணித்தாலும் ஒரேயடியாகப் புறக்கணித்திட வேண்டாம். ஏனெனில், பிற்காலத்தில் அதே நபர் உங்களால் நேசிக்கப்படவும் கூடும்.
சென்னையில் ஏற்பட்ட பெருமழையின்போது, முஸ்லிம்கள் ஆற்றிய நிவாரண நற்சேழவகள் அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்டது.ஏன்..?

சென்னையில் ஏற்பட்ட பெருமழையின்போது, முஸ்லிம்கள் ஆற்றிய நிவாரண நற்சேழவகள் அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்டது.ஏன்..?

சரியானதொரு சமூகத் தொடர்பு என்பது, நடுநிலைத்தனத்துடன் இருப்பின்தான் வெற்றிகரமாக இயங்ஙக முடியும். அண்மையில் சென்னையில் ஏற்பட்ட பெருமழையின்போது, முஸ்லிம்கள் ஆற்றிய நிவாரண நற்சேழவகள் அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்டது.ஏன்..?
மார்க்கம் அவர்களுக்குக் கற்றுத் தந்த இந்த அழகிய நடுநிலையான நேசமும் விருப்பமும்தான் என்பது விளங்கும்.
மற்றொரு முக்கிய அம்சமாக இருப்பது இல்லற வாழ்விலும், குடும்பவியலிலும் நாம் பேண வேண்டிய நடுநிலைமை. இதில், துணைகள் பரஸ்பரம் பேண வேண்டியவை, உறுப்பினர்கள் பேண வேண்டியவை என அனைத்தும் நடுநிலைமை சார்ந்தே இருக்கின்றன.
செலவிடுவது குறித்த இந்த திருக் குர்ஆன் வசனமே போதும், இஸ்லாத்தின் அழகிய நடுநிலைமையை பறை சாற்ற..!
மேலும், அவர்கள் செலவு செய்யும்போது வீண்விரயமும் கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக, அவர்களுடைய செலவுகள் இந்த மிதமிஞ்சிய இரு நிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும். திருக் குர்ஆன் 25:67
எனவே, வாழ்வின் அனைத்து துறை சார்ந்த அம்சங்களில் இஸ்லாம் அழகிய நடுநிலையையே பேணுகின்றது.

Related Post