– ஜென்னி
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. மேலும், மறுமைநாள் வந்துவிடும்போது அசத்தியவாதிகள் நஷ்டத்திலேயே கிடப்பார்கள். அந்நேரம் ஒவ்வொரு சமூகமும் முழந்தாளிட்டு விழுந்திருப்பதை நீர் காண்பீர். “வாருங்கள், உங்கள் வினைச்சுவடியைப் பாருங்கள்” என்று ஒவ்வொரு சமுதாயத்தினரும் அழைக்கப்படுவர் (அவர்களிடம் கூறப்படும்:) “நீங்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்குப் பிரதிபலன் இன்று உங்களுக்குக் கொடுக்கப்படும். இது, நாம் தயாரித்த வினைச்சுவடி. உங்கள் மீது மிகச் சரியாக சாட்சியம் அளித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் செய்துவந்த செயல்களை நாம் எழுதச் செய்துகொண்டிருந்தோம். இனி எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களை, அவர்களின் அதிபதி தன் கருணையில் நுழைவிப்பான். இதுவே தெளிவான வெற்றியாகும்.” மேலும், எவர்கள் நிராகரித்தார்களோ (அவர்களிடம் சொல்லப்படும்:) “என்னுடைய வசனங்கள் உங்களிடம் ஓதிக்காட்டப்படவில்லையா? ஆனால், நீங்கள் பெருமையடித்தீர்கள். மேலும், குற்றம்செய்யும் மக்களாய் இருந்தீர்கள். மேலும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும் மறுமைநாள் வருவதில் எவ்வித ஐயமும் இல்லை என்றும் சொல்லப்பட்டால் “மறுமை என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது. நாங்கள் வெறும் ஊகம்தான் கொண்டிருக்கின்றோம்; உறுதிகொள்ளக் கூடியவர்களாய் இல்லை” என்று நீங்கள் கூறிக்கொண்டிருந்தீர்கள். அந்த நேரம் அவர்களுடைய செயல்களின் தீய விளைவு அவர்களுக்குத் தென்பட்டுவிடும். மேலும், அவர்கள் எதைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். மேலும், அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் இந்நாளின் சந்திப்பை எப்படி மறந்திருந்தீர்களோ அப்படியே இன்று நாம் உங்களை மறந்துவிடுகின்றோம். உங்கள் இருப்பிடம் இனி நரகம்தான். மேலும், உங்களுக்கு உதவி செய்வோர் எவரும் இல்லை.
நடை பழகும் ஒரு குழந்தை தனக்கு முன்னால் சிறிது தூரத்திலுள்ள பந்தை எடுக்கத் தத்தித் தத்தி செல்கிறது. அந்தப் பந்து இல்லாவிட்டால் அது அந்த இடத்தை நோக்கிப் போகாது. பந்தை எடுத்து வருவது அதற்கு இலட்சியம். நாம் அடைய வேண்டிய எல்லையும் நாம் கடக்க வேண்டிய இடைவெளியும் தெரியாவிட்டால் நாம் குறிப்பிட்ட இலட்சியத்தை அடைய முடியாது. குழந்தைக்கு முன்னால் பந்தைவைத்திருப்பது போல நமக்கு முன்னால் நாம் ஒரு இலட்சியத்தை வைக்க வேண்டும், உருவாக்கிக் கொள்ளவேண்டும். அதை அடைய நாம் திட்டங்கள் தீட்டி வழி முறைகளை உருவாக்கிக் காலத்தைக் கணக்கிட்டுச் செயலில் இறங்க வேண்டும்.
இன்றே முடிவு செய்யுங்கள்
உங்கள் இலட்சியத்தை இன்றே முடிவு செய்யுங்கள். கடந்து போன காலத்தைப்பற்றி கவலைப்படாதீர்கள். காலம் கடந்துபோனது போனதுதான், இனித் திரும்ப வரப்போவதில்லை. இனி இருக்கின்ற காலத்தையாவது சரியாகப் பயன்படுத்துவோம்.
இலட்சியத்தை முடிவு செய்வதை சாதாரணமாக நினைக்காதீர்கள். Goal 300 x 225 இலட்சியவாதிகள்..!உங்கள் வாழ்க்கைப் பிரச்சனை. இலட்சியத்தை முடிவு செய்வதைத் தள்ளிப்போட போட நீங்கள் அடைய வேண்டிய வெற்றிகளும் அனுபவிக்க வேண்டிய சுகங்களும் தள்ளிக்கொண்டே போகும். இலட்சியத்தை ஒரே நாளில் முடிவு செய்ய முடியாது தான். ஆனால் ஒரு சில நாட்களில், ஓரிரு வாரங்களில் அல்லது ஓரிரு மாதங்களுக்குள் முடிவு செய்துவிடலாம். அதற்குரிய தொடக்கம் – இன்றாகவே இருக்கட்டும். இந்த நிமிடத்திலேயே தொடங்குங்கள். இப்பொழுதே ஒரு தாளை எடுங்கள்; உங்கள் இலட்சியத்தை எழுதுங்கள்.
இலட்சியம் என்றால் என்ன?
இலட்சியம் என்பது வேறொன்றுமில்லை. வெளிப்படையாகச் சொல்லப்போனால் உங்களுடைய ஆசைகள்தாம். ஆம். ஆசைகள்தாம் இலட்சியங்கள். உங்கள் வாழ்நாளில் ஒரு வீடுகட்டவேண்டும் என்று நினைக்கிறீர்கள், ஒரு கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். நீங்கள் இந்த அளவு பி.ஏ., அலது எம்.ஏ., படிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஒரு மளிகைக்கடை வைத்திருப்பவர் சொந்தமாக ஒரு பெரிய கடை கட்டி அதில் வியாபாரம் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றார். அரசியலில் இப்பொழுதுதான் நுழைந்துள்ள ஒரு தொண்டர் தான் அமைச்சர் ஆகவேண்டும் என்று விரும்புகிறார். வேறு ஒரு தொண்டரோ மாநில அரசியலே ஆகாது மத்திய அமைச்சர் ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஒரு ஓட்டல் அதிபர் தன் உணவு வகைகளை நவீனப் படுத்தி உலகின் எந்த நாட்டில் கேட்டாலும் நாங்கள் தயாரிக்கும் உணவுப் பண்டங்கள் கிடைக்கும்படிச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்.
தனிமனித – சமுதாய இலட்சியங்கள்
ஆசைகளே இலட்சியங்களாக வளர்கின்றன. மலர்கின்றன. தனிமனிதன் தனக்கு என்று தேடிக்கொள்பவைகளும் இலட்சியங்கள் தாம். ஆனால் இந்த நாட்டில் வறுமை ஒழிய வேண்டும், சாதி வேறுபாடுகள் களையப்படவேண்டும், ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்படவேண்டும் என்று தன்னை மறந்து இந்த நாட்டுக்காகவும் – உலகுக்காகவும் பாடுபடுகின்றவர்களின் ஆசைகளும் இலட்சியங்கள் தாம். தனிமனிதன் இலட்சியம் சிறப்பானவை என்றால் சமுதாய இலட்சியங்கள் மகத்தானவை என்று கூறலாம். ஒரு நாட்டிற்கு – இந்த உலக சமுதாயத்திற்கு இந்த இருவகையான இலட்சியங்களும் தேவைதான்.
இலட்சியத்தின் எல்லை
இலட்சியத்தின் எல்லையை வரையறுப்பது கூடாது. இலட்சியங்கள் தேவைக்கும் திறமைக்கும் ஏற்பக் காலத்திற்குக் காலம் வளர்ந்து கொண்டே போகும். ஒரு மில் போதும் என்று தொடங்கியவர்கள் அதன் நுட்பங்களை அறிந்த பின்னர் 10 மில்களை நடத்துகின்ற திறமையை வளர்த்துக்கொள்கிறார்கள். அதற்குரிய தகுதிகளும் அவர்கட்கு வந்துவிடுகின்றன. நதி ஓடிக்கொண்டே இருப்பது போல இலட்சியங்கள் வளர்ந்து கொண்டே போகும். ஆதலின் இலட்சியத்திற்கு எல்லை இல்லை. உங்கள் முயற்சிதான் எல்லை. உங்கள் முயற்சிக்கு நீங்கள் முற்றுப் புள்ளி வைக்கும்போது இலட்சியத்தின் வளர்ச்சியும் முடிவுக்கு வந்து விடுகிறது.
மிகப் பெரிய இலட்சியங்கள் பேராசை அல்ல
சிலர் இது போதாதா இன்னும் தேவைதானா? ஏன் இப்படி அலைகிறார்கள்? இது என்ன பேராசை என்று தவறாகக் கருதுவதும் உண்டு. இவர்கள் பேராசைக்கும் – இலட்சியத்திற்கும் வேறுபாடு தெரியாதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்பது தான் மட்டும் வளரவேண்டும் என்பதோடு மற்ற யாரும் அந்தத் துறையில் வளரக்கூடாது என்று தடைகளையும் ஏற்படுத்துவது இலட்சியம் என்பது – பிறர் பற்றிக் கவலைப்படாமல் எடுத்துக்கொண்ட காரியத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்து செயல்பட வைப்பது. தனக்காகப் பிறர் வளர்ச்சியைத் தடைப்படுத்தாமல் இருப்பதுதான் வளர்ச்சி அடைவது.
பேராசை என்பது தன்னலம் நிறைந்தது, பிறர் உரிமையில் தலையிடாமல் தன் முன்னேற்றத்தைச் சரியான வழிமுறைகளில் அடைவது. இதுவே முறையான வாழ்க்கை. ஒரு நாட்டில் இலட்சியவாதிகள் நிறைந்திருந்தால் அதுவே பெருஞ்செல்வமாகும்.
இலட்சியமும் குறிக்கோளும்
இலட்சியம் என்பது நமது முற்ற முடிந்த எல்லை. நாம் அடைய வேண்டிய முடிவான இடம். வெற்றி பெறுவதே நமது இலட்சியம் என்பார்கள். வாழ்வில் எடுத்த காரியங்களில் எல்லாம் கவனத்தோடு இருந்து வாழ்ந்த வெற்றியாளர்களை இலட்சியவாதிகள் என்று கூறுகிறோம். தாம் வகுத்துக் கொண்ட கொள்கை வழி – விதிகளின் வழிநின்று வாழ்ந்தவர்கள் அப்படி வாழ்ந்ததிலேயே வெற்றி கண்டவர்கள் என்பது பொருள். இலட்சியங்கள் அழிவதில்லை. இன்றைய உலகம் இன்றைய கண்டுபிடிப்புகள் எல்லாம் இலட்சிய வாதிகளால் உருவாக்கப்பட்டவை தாம்.
குறிக்கோள் என்பது என்ன?
குறிப்பிட்ட ஒன்றுக்குக் குறிவைத்து அதை அடைவது. ஒரு குறிப்பிட்ட விளையாட்டில் வெற்றி பெறுவதே குறிக்கோள். இந்தத் தேர்வில் முதன் மதிப்பெண் பெறுவதே குறிக்கோள். ஒன்றை எடுத்துக் கொண்டு – அதில் நினைத்த இடத்தை அடைவது குறிக்கோள் என்பது இலட்சியம் என்ற பெரிய இலக்கை, இடத்தை அடைய நாம் மேற்கொள்ளும் தனித்தனி செயல்களாகும். பல்வேறு குறிக்கோளை நிறைவேற்றும் போது ஒரு மாபெரும் இலட்சியம் நிறைவடைகின்றது.
ஒரு பாடல் ‘உயரே ஏறுங்கள், தொடர்ந்து செல்லுங்கள், உங்கள் இட்சியம் இந்த வானத்தைத்தொடுவதாக இருக்கட்டும். அப்பொழுதுதான் ஒரு நட்சத்திரத்தையாவது மண்ணுக்குக் கொண்டு வருவீர்கள்’ என்பது அந்தப் பாடல். (ஊடயiஅ hiபா, உடயiஅ கழச, லழரச யசை ளை வாந ளமல. லழரச பழயட ளை வாந ளுவயச) ஆதலின் இலட்சியம் என்பது மகத்தானது. பெரியது. குறிக்கோள் என்பது சிறப்பானது, சிறியது. இலட்சியத்தின் ஒரு பகுதியே குறிக்கோள். இலட்சியத்தை அடைய எடுத்துக்கொள்ளும் முயற்சியே குறிக்கோள்.