– அஹ்மதி
(நபியே! இவர்களிடம்) கூறும்: “தீனைகீழ்ப்படிதலை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கி அவனை வணங்கும்படி திண்ணமாக எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது.
இமாமவர்களின் மணவர் சொல்கிறார். நான் ஒரு இரவு பார்த்தேன் இமாம் புகாரி அவர்கள் அடிக்கடி தூக்கத்திலிருந்து எழுந்து விளக்கை பத்த வைப்பதும் ஏதோ குறிப்பு எழுதுவதுமாக இருந்தார்கள். ஹதீஸை தொகுக்கும் சிந்தனையில் அந்த ஆர்வத்தில் முழிப்பு வரும்போதேல்லாம் ஹதிஸ்களின் தரத்தை குறித்துக் கொள்வதும் அறிவிப்பாளர்களில் பெயர்களை குறித்துக் கொள்வதுமாக இருந்தார்கள் என்பதை நான் விளங்கிக் கொண்டேன் என்கிறார்.
இமாவர்கள் மொத்தம் 20 நூல்களை எழுதியுள்ளர்கள் ஒவ்வொரு நூல்களும் பல பாகங்கள் கொண்டவை. அவைகள் ஹதிஸ் துறையை சர்ந்த நூல்கள், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைச் சார்ந்த நூல்கள், பிக்ஹு (சட்டநூல்கள்) என்று வகைப்படுத்தலாம். அவைகளில் சில “கிதாபுல் தாரீக்” என்ற நூலில் ஹதீஸ்களை யார் யாரேல்லாம் அறிவித்தார்களோ அவர்களை சகல தகவல்களையும் தொகுத்து எழுதி மிகப் பெரும் சதனையை புரிந்தார்கள்.
தனது பதினெட்டாம் வயதில் எழுதிய “தாரீகுல் கபீர்” பிறகு “தாரீகுல் அஸ்கர்”, “தாரீகுல் அவ்ஸத்” கிதாபுல் குன்னா, கிதாபுல் உஹ்தான், “கிதாபுல் அதபில் முஃப்ரத்” கிதாபுல் அஃபாஃ” ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்கள்
இமாமவர்கள் இவ்வளவு நூல்களை ஏன் எழுத வேண்டும்? முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாக்கை சரியான முறையில் கொடுத்து செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது.
அவர்களின் உழைப்பை உதாசீனப்படுத்தும் முகமாக நாம் சமூகத்தில் சில குழுவினர் சரியான ஹதீஸ் சரியற்ற ஹதீஸ் என்பதேல்லாம் கிடையாது அரபியில் ஒரு வார்த்தை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி சொல்லப் படுபவைகள் அனைத்தும் ஹதீஸ்துதான் நிலைப்பாடு எடுக்கிறார்கள் இது எவ்வளவு பெரிய தவறு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்த நூல்களில் முதல் இடத்திலிருப்பது “ஸஹீஹ் புகாரி” எனும் நூல் ஆகும்.
82-க்கும் மேற்பட்ட விரிவுரை நூல்கள் வெளி வந்துள்ளன. அவற்றில் முகவும் சிறந்தது, இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானீ (ரஹ்) எழுதிய “ஃபத்ஹுல் பாரியும்” அடுத்து இமாம் அஹ்மத் இப்னு முஹம்மத் அல்கஸ்தலானீ (ரஹ்) எழுதிய “இர்ஷா துஸ்ஸாரி”யும் அதை அடுத்து இமாம் ஸகரிய்யா அல் அன்ஸாரீ (ரஹ்) எழுதிய “துஹ்ஃபத்துல் பாரீ”யும் ஆகும்.