இன்றைய நவீன இஸ்லாமிய குடும்பம்..! – 1

– M.S.றியாஸ் முஹம்மத் (நளீமி) M.A., P.G.D.E.

இன்றைய நவீன இஸ்லாமிய குடும்பம்..!

எதிர்நோக்கும் சவால்களும் அவற்றை வெற்றிகொள்ளும் முறைகளும்

மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.

மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.

னிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.

குடும்பம் என்பது இரத்த உறவாலோஇ அல்லது திருமண உறவாலோ,சுவீகாரம; (தத்தெடுத்தல்) போன்றவற்றாலோ சட்டபூர்வமான முறையில் அமைந்த ஒரு உறைவிடக் குழுவாகும்.

அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் 16(3) விதிப்படி ”குடும்பம்’ என்பது சமுகத்தின் இயல்பானதும், அடிப்படையானதுமான குழு அலகாகும் என்பதோடு, அது சமுகத்தாலும் தேசத்தாலும் பாதுகாக்கப்பட வேண்டியதாகும்’.

குடும்பம் என்பது ஒரு சமுகத்தின் மூலக்கரு எனவும், அது மானிட சமுகத்தின் அடிக்கல் எனவும், மானிட சமுகத்தின் சிறிதாக்கப்பட்ட வடிவம் எனவும் கூறுவர். அத்தனை சிறப்பு மிக்க இந்த குடும்பத்திற்கு வரைவிலக்கணம் கூறும் ர்நசடிநவ ளுpநnஉநச என்பவர், ‘சமுக இயல்பூக்க அடிப்படையில் உருவான, பௌதீகவியல் ரீதியான சமுகக்கட்டமைப்பே குடும்பமாகும். விலங்குகளின் கூட்டமைப்பின் தொடர்ச்சியான விருத்தியடைந்த வடிவமே (?) குடும்ப அமைப்பாகும்’ என குறிப்பிடுகிறார்.

உலக வரலாற்றில் எத்தனையோ நாகரிகங்கள் வந்து கடந்து சென்றுள்ளன. ஆனால், உலக நாகரிகங்களில் எந்த ஒரு நாகரிகத்திலும் ‘குடும்பம்’ என்ற அமைப்பு இல்லாமல் இருந்ததில்லை. குடும்ப நிறுவனத்தை பால் படுத்தும் வகையில், குடும்பம் அவசியமில்லை என்று ஆன்மீகம் பேசிய சமயங்களில் காணப்படும் அரநெறிக்கோட்பாடுகள் கூட இன்று அவை வெறும் ஏட்டுத் தத்துவமாகவே காணப்படுகின்றன.

சமுக மாற்ற செயன்முறைகளின் போது, ஏனைய எல்லா சமுக நிறுவனங்களை விடவும் குடும்பம் என்ற நிறுவனமே கூடுதல் பங்காற்றுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.  மனித சமுகத்தினை ஒரு உடலாகக் கொண்டால், ‘குடும்பம்’ என்ற அங்கமே அதன் இதயமாக விளங்குகின்றது. சமுக்தில் காணப்படும் தலைமைத்துவ வெற்றிடங்களை நிரப்புவதற்குரிய தனி மனிதர்களின் பயிற்சிப் பாசறையாகவும் இந்த குடும்பம் என்ற நிறுவனமே விளங்குகின்றது. காரணம், ஒரு தனிமனிதனின் ஆளுமை உருவாக்கத்தில் பெற்றோரினதும், குடும்ப அங்கத்தினரதும் பங்கே முதன்மையானதாகும்.

குடும்பம் என்பது, ஒரேகூறையினால் இணைக்கப்பட்ட இதயங்களின் இதயங்களின் இணைப்பாகும். கணவன், மனைவி, பெற்றார், பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் ஆகிய பல தரப்பினரும் ஒருவருக்கொருவம் கொண்டும், கொடுத்தும் மகிழ்ச்சியாக வாழும் வாழ்வே குடும்ப வாழ்வாகும். அது அன்பும், பரிவும், பாசமும், ஒருங்கிணைப்பும், பாதுகாப்புணர்வும், சகிப்புத் தன்மை போன்ற நல்லியல்புகள் குடும்பத்திலிருந்தே தோற்றம் பெறுகின்றன. ஒரு குழந்தையானது சமுகமயப்படுவதும், மொழிமயமாக்கப்படுவதிலும், அலகியல் மயமாக்கப்படுவதிலும், தொழில்நுட்ப மயப்படுவதிலும், நடத்தைமயப்படுவதிலும் குடும்பமே கூடுதல் பங்கை எடுத்துக் கொள்கின்றது.

சமுகத்தில் வாழும் ஒவ்வொரு தனிநபரினதும் பாதுகாப்பையும், பராமரிப்பையும் முதலில் உறுதி செய்வது குடும்பமாகும். இத்தகைய பாரிய பங்கை ‘குடும்பம்’ என்ற நிறுவனம் செய்து வருவதன் காரணமாகவே 1994 ஆம் ஆண்டை ‘சர்வதேச குடும்ப நல ஆண்டு’ (ஐவெநசயெவழையெட லநயச ழக வாந கயஅடைல) என பிரகடனப்படுத்தியுள்ளதுடன், ஒவ்வொரு வருடமும் மே மாதம் 15 ஆம் திகதியை சர்வதேச குடும்ப தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  ‘குடும்ப அமைப்பிலேயே உலகின் வருங்காலம் தங்கியுள்ளது’ (International year of the family) என்பதுதான் இந்நாளில் எடுத்துரைக்கப்படும் கொள்கை முழக்க வாசகமாகும்.

இஸ்லாத்தைப் பொருத்தவரையில், குடும்பம் என்ற நிறுவனத்தை மிக்க புனிதமாhன ஒன்றாகக் கருதுகிறது. அது ஒரு இயற்கை மார்க்கம் என்ற அடிப்படையில், அது மனித அபிவிருத்தியில் இயற்கை வரம்பை மீறாமல் செய்றபடும் குடும்ப அமைப்புக்கு அதிகூடிய முக்கியத்துவத்தினை வழங்கியுள்ளது. இதனால், இஸ்லாம் குடும்பம் சார்ந்த மார்க்கம் (குயஅடைல ழசநைவெநன) எனவும் அழைக்கப்படுகிறது.

மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.

மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.

பொதுவாகவே, சமுகத்தோடு கூடிவாழ விரும்புவது மனிதனது பண்பாகும். அவன் தனித்து வாழ்வதை விரும்புவதில்லை. எனவேதான், அவனை ஒரு ‘சமுகப் பிராணி’ என்று மேற்கு அறிமுகப்படுத்துகிறது. பொதுவாக, மனிதன் தனது தேவையை தனிமையாக இருந்து நிறைவேற்றிக்கொள்ள முடியாது. ஏதோ ஒரு வகையில் அவன் மற்றவரைச் சார்ந்தே தனது தேவையை நிறைவேற்றிக் கொள்கிறான். இந்தவகையில், மனிதன் குடும்ப அமைப்பிலும், சமுகச் கூழலிலும் வாழ வேண்டிய அமைப்பிலேயே இறைவன் படைத்துள்ளான் என்பது தெளிவானதாகும்.

அந்தவகையில், இஸ்லாம் குடும்பமாக இணையுமாறு தனி மனிதர்களைத் தூண்டுகிறது. அதற்கு மற்றொரு காரணம், குடும்ப வாழ்வென்பது தனிமனிதனைப் பாதுகாக்கும் கேடயமாக விளங்குவதனாலேயாகும். எனவே, இந்த கேடயத்தை பயன்படுத்தாத போது ஏற்படும் விளைகளையே இன்று உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.

மேலை நாடுகளில் இந்த குடும்பம் என்ற ஒரு கட்டமைப்பு அவசியமில்லை என்ற மனோபாவம் இருந்து வருவதனால் நவநாகரிக உலகில் எதிர்கொள்ள முடியாத பல சவால்களுக்கு மேற்குலகு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது. கட்டுப்பாடற்ற குடும்ப வாழ்வு மனோபாவத்தினால் பாடசாலைப் பருவத்திலேயே சின்னஞ் சிறு வயதுடைய சிறுமிகள் பல முறைகள் கருக்கலைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையும் மீறி பிறக்கும் குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்காக ஆண்டுதோரும் அமேரிக்கா அரசு 29 மில்லியன் டொலர்களை செலவிட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

பொருள் வளத்திலும், விஞ்ஞான முன்னேற்றத்திலும் உச்சத்திற்கு சென்றுள்ள அமேரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இந்த மனோபாவத்தினால் குடும்ப அமைப்பு சிதைந்துவரும் அதேவேளை, அதன் விளைவாக, விபச்சாரம், வன்முறைக் கலாச்சாரமும் பரவியுள்ளதைக் காணலாம். அது ஒரு புறமிருக்க, ஒருபால் புணர்ச்சி, தகாத உறவுகளின் மூலமாக உலகு இதுவரைகாலமும் கண்டிராத பல புதுப்புது நோய்களையும் உற்பத்தி செய்து விட்டுள்ளனர்.

ஐரோப்பாவின் கைத்தொழில் புரட்சி தந்த பரிசாக இத்தகை பெரும் பயங்கர விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கம்யூனிசத் தலைவர்களான கால்மாக்ஸ்,ஏங்கல்ஸ் போன்றோர் குடும்பம் தொடர்பாக கூறிய கருத்து இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூறத்தக்கது. ‘திருமணம், வீடு, குடும்பம் என்பனவெல்லாம் பெண்களை நிரந்தரமாக அடிமைத்தனத்தில் வைத்திருக்கும் ஒரு சாபமேயன்றி வேறல்ல’ என அவர்கள்  கூறினர். இத்தகைய பெரும் புத்திஜீவிகளது(?) சிந்தனைகளால் கவரப்பட்ட மேனாட்டவர் குடும்பத்தினை ஒரு சுமையாகக் கருதி, சமுக வழமைக்க திருமணம் செய்கின்றார்கள், குழந்தை பெறுகிறார்களே தவிர, அதனை ஒரு புனிதமானதாக கருதவில்லை. மாறாக, திருமணம் செய்வது ஒருவரை, வாழ்வது இன்னும் பலருடன் என்ற நிலை தோன்றியுள்ளது. இதனால், சமுகத்தில் குழந்தைகள் கவனிப்பாரற்று, மன உழைச்சலுக்கு ஆளாவதின் விளைவே இன்று மேற்கில் காணப்படும் கட்டுக்கடங்காத குற்றச் செயல்கள்.

இஸ்லாத்தைப் பொருத்தவரையில், அது குடும்ப நிறுவனத்தை பராமரிப்பதிலும், வழிகாட்டுவதிலும் கண்ணும் கருத்துமாக செயற்படுகிறது. ஏனெனில், ஒரு இஸ்லாமிய குடும்பம் உருவாவதற்கு பல குடும்பங்கள் துணைநிற்கின்றன. தனியான ஒரு குடும்பத்தின் பாதிப்பானது, பல குடும்பங்களின் இணைப்பான சமுகத்தையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேவேளை, ஒரு தனிக்குடும்பத்தின் வெற்றி அந்த சமுகத்தினது வெற்றிக்குரிய காரணியாக அமைகிறது என்றவகையில் இஸ்லாம் குடும்ப உருவாக்கத்தில் கூடிய கரிசனை செலுத்துகிறது.

Related Post