கோவை. பஷீர்
தண்ணீரையும் பாலையும் தனிப்படுத்தி அருந்தும் தன்னிகரில்லா அன்னம் போல், சிந்தனைகள் ஆகும்போது, சீர்திருத்தங்களே சிருங்கார விளைவுகளாக மாறும்..!அவர்தம் ஆளுமையின் ஆர்ப்பரிப்பை அக்குவேறு ஆணிவேராய் காட்டும்!
அல்லாஹ்வின் கருணையினால் ஆசீர்வதிக்கப்பட்ட முஹம்மது உமர் ராவ் ஆகிய நான் ஒரு இந்தியக் குடிமகன். நான் என்னுடைய 18ஆவது வயதில் இஸ்லாத்தைத் தழுவி இன்றுடன் 6 வருடம் பூர்த்தியாகிவிட்டன. நான் என்னுடைய வாழ்க்கை விபரங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விருப்பப்படுகிறேன். முஸ்லிம் அல்லாதவர்களும் இதைப் பார்த்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதும் என்னுடைய ஆசை. என்னுடைய வாழ்க்கைமுறையை இரண்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட போது அவர்கள் என்னுடைய தேர்வு மற்றும் முடிவு மிகச் சிறந்தது என்று உற்சாகப்படுத்தினார்கள்.
நான் நடுத்தர வகுப்பு ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னுடைய தந்தை இன்ஜினியாராகவும், தாய் ஆசிரியையாகவும் உள்ளனர். என் தாய் மாமன் வீட்டில் தங்கியிருந்துதான் மதச் சம்மந்தமான கல்வியை நான் கற்றேன். என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரின் கல்வியும் முஸ்லிம்களுக்கு எதிராகவே இருந்ததால் முஸ்லிம்களைப் பற்றிய ஒரு தவறான எண்ணம் என்னுடன் ஆணி அடித்தது போல் இருந்தது. சிலகாலம் RSS-ல் சேர்ந்திருந்ததால் நான் எப்பொழுதுமே முஸ்லிம்களை வெறுக்கின்றவனாகவே இருந்து வந்தேன். பள்ளிவாசலில் பாங்கு சொல்லும் போது நான் கேட்டுக் கொண்டிருக்கும் இசையின் சப்தத்தை அதிகப்படுத்தி அந்த பாங்கு சப்தம் என்னுடைய காதில் விழாதபடி செய்வேன். நகரத்தில் இருக்கும் எல்லா கோயில்களுக்கும் தினந்தோறும் சென்று வழிபாடு செய்பவனாக இருந்து வந்தேன், இதற்காக என் வீட்டினர் அனைவரும் என்னை உற்சாகப்படுத்துவார்கள்.
ஒரு கோடை விடுமுறையில் ஒரு முஸ்லிமின் வியாபார நிர்வாகத்தில் வேலை செய்யச் சொல்லி என் தாய் என்னை அழைத்தார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை, ஏனென்றால் குழந்தைப் பருவத்தில் இருந்தே முஸ்லிம்களை நான் வெறுத்து வந்தேன். என்னுடைய நிலையை அறிந்த என் தாய் மேற்கொண்டு என்னை வற்புறுத்தவில்லை. சில கோடை விடுமுறைகளில் முஸ்லிம் அல்லாத வியாபார நிர்வாகத்தில் நான் வேலை செய்து வந்தேன். ஆதலால் என்னுடைய தாய், தந்தை இருவரும் திருப்தி அடைந்தனர். சில காலம் கழிந்து அந்த பகுதி நேர வேலையை விட்டுவிட்டு என்னுடைய படிப்பில் கவனமானேன். மேற்கொண்டு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய தாய் மற்றும் தங்கைகள் ஒரு முஸ்லிம் நிறுவனத்தில் 2 மாதம் தற்காலிகமாக பணியாற்றினார்கள், அந்த 2 மாதத்தில் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள் எனது தாய் மற்றும் தங்கைகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
நான் வெறுக்கும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக யாராவது பேசினாலே எனக்கு கோபம் வந்துவிடும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து வந்த நான் எனது தாய் மற்றும் தங்கைகளின் நிர்பந்தத்தில் சில முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்து வேலை செய்யும் நிலைக்கு ஆளானேன். வேண்டா வெறுப்பாக அந்த கடையில் வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் முஸ்லிம்களின் மேல் உள்ள வெறுப்பு இன்னும் அதிகமானது. ஏனென்றால், அந்தக் கடையில் வேலை செய்யும் முஸ்லிம் அல்லாதவர் பல பேர் இஸ்லாத்தைத் தழுவியிருந்தார்கள். இஸ்லாத்திற்கு ஏன் அனைவரும் இப்படி முக்கியத்துவம் தருகிறார்கள் என்று எண்ணி என்னுடைய இந்து மதம் தான் சிறந்தது, உயர்ந்தது என்று அவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக, இந்து மதத்தையும், இஸ்லாத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தேன். அத்தருணத்திலிருந்து இஸ்லாத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதால் குர்ஆனின் ஆங்கில மொழியாக்கத்தை படிக்க ஆரம்பித்தேன். படித்து அதன் அர்த்தத்தை நல்லபடியாக தெரிந்து யோசிக்க ஆரம்பித்த என்னுடைய மாணவப் பருவ வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது. அதன் பிறகு நான் என்னென்ன தவறுகள் இதுவரை செய்துக் கொண்டு இருக்கின்றேன் என்பதைப்பற்றி கவலை மற்றும் பயம் வந்தது. என்னுடைய இந்து மதம் முழுவதும் கற்பனை மற்றும் புராணங்களாலும், கட்டுக் கதைகளாலும்தான் நிரம்பி உள்ளது என்று தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து பல கேள்விகளும் சந்தேகங்களும் என்னுள் எழுந்தது. என்னுடைய கடமை என்ன? நான் எப்படி இருக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? ஏன் இந்த உண்மையான கருத்து எங்களில் பல பேருக்கு வந்து சேரவில்லை? இதைப் போல பல கேள்விகளுக்கு உண்மை மற்றும் பதில் தெரிந்து கொள்வதில் என்னுடைய மீதி மாணவப் பருவத்தை செவழிக்க ஆரம்பித்தேன்.
முன்னாள் R.S.S காரரான உமர் ராவ் அவர்கள்,தான் எவ்வாறு இஸ்லாத்தை ஏற்றார் என்பதை ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.அதன் தமிழ் ஆக்கமே இது,மொழி பெயர்ப்பு :கோவை. பஷீர்
Adirai exp