இந்திய விடுதலைப் போராட்டம்: முஸ்லிம்கள் பங்கு!-1

தொகுப்பு:முஹம்மத் ஆஷிக்

ந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சா

இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர்

இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர்

ரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. – குஷ்வந்த்சிங், இல்லஸ்டிரேட் வீக்லி, 29-12-1975.

வடக்கில் சிந்திய முதல் ரத்தம்

வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு இந்த மண்ணின் வளத்தை நிரந்தரமாய் அனுபவிக்கும் எண்ணம் ஆசையாய்உருவானது. ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் பலர் அச்சத்துடன் அள்ளிக் கொடுத்தனர். அண்ட இடமும் கொடுத்தனர். தங்கள் ஆட்சிப்பரப்புக்குள் ஆங்கிலேயர் சுதந்திரமாய் பவனிவர பாதை அமைத்தனர். ஏனென்றால் பிரிட்டீஷாரின் துணை, தங்கள் பகை அரசுகளிடம் இருந்து தங்களைக் காக்கும் என்ற சுயநலத்தினால். நம் ஆட்சியாளர்களின் இச்சுயநலம் பிரிட்டீஷாருக்கு நிரந்தரமாய் இம்மண்ணை ஆள்வதற்கான எளிய வாய்ப்பாக அமைந்தது.

இந்த காலகட்டத்தில், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை முதலில் கணித்து,ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராய் இந்த மண்ணில் முதலில் நிமிரிந்து நின்றவர்தான் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தௌலா.
1757-ல் ஆங்கிலேயரை அவர் சந்தித்த பிளாசிப் போர்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் இந்திய சுதந்திரப்போர்…! இதுவே பெரிய யுத்தம்..! இப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது செய்து அடைத்த மாவீரர்தான் சிராஜ்-உத்-தௌலா. நமது வரலாற்றாசியர்களின் வாதப்படி ‘முதல்ல்ல்ல்ல் இந்திய சுதந்திரப்போர்’ எப்போதாம்..?
1857..? ஏன்..? ஏன்..? ஏன்..? ஏன்…?
ஏன்… இந்த வரலாற்று திரிபு..???

ஆங்கிலேயரின் நாடாளும் ஆசையை முளையில் கிள்ளும் தௌலாவின் முயற்சியை முறியடிக்க பிரிட்டனிலிருந்து கடல் மார்க்கமாக வந்த ஆங்கிலப்படை கல்கத்தா துறைமுகத்தில் மிகப்பெரிய எதிர் முற்றுகையைச் சந்தித்தது. கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயரை எதிர்கொண்ட தௌலாவுக்கு இயற்கை மட்டும் ஒத்துழைத்திருந்தால்… இந்திய சரித்திரமே மாறியிருக்கும். ஆனால் இயற்கை ஒத்துழைக்க மறுக்க, நான்கு மணி நேரம் பெய்த கடுமையான மழையினால் தௌலா படையின் வெடிமருந்துகள் நனைந்தன. அவரது முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

பிரிட்டிஷ் எதிர்ப்பில் சிந்திய முதல் இந்திய ரத்தம்.. வங்காளத்தில் சிராஜ்-உத்-தௌலா சிந்திய ரத்தம்தான். அதன் மீதுதான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் தன் முதல் கால் கோளை இந்திய மண்ணில் ஊன்றியது. ஆமாம் இந்தியாவில் பிரிட்டீஷாரின் ஆட்சி முதலில் வங்காளத்தில்தான் ஏற்பட்டது.

வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு இந்த மண்ணின் வளத்தை நிரந்தரமாய் அனுபவிக்கும் எண்ணம் ஆசையாய் உருவானது. ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் பலர் அச்சத்துடன் அள்ளிக் கொடுத்தனர். அண்ட இடமும் கொடுத்தனர். தங்கள் ஆட்சிப்பரப்புக்குள் ஆங்கிலேயர் சுதந்திரமாய் பவனிவர பாதை அமைத்தனர். ஏனென்றால் பிரிட்டீஷாரின் துணை, தங்கள் பகை அரசுகளிடம் இருந்து தங்களைக் காக்கும் என்ற சுயநலத்தினால்.

Related Post