அவளுக்கென்று ஒரு தினம்..! அவளுக்காக இல்லை ஒரு தினம்..!!

மார்ச் 8! சர்வதேச மகளிர் தினம்!

மார்ச் 8! சர்வதேச மகளிர் தினம்!

-மு.அ. அப்துல் முஸவ்விர்

மார்ச் 8! சர்வதேச மகளிர் தினம்! 1857 -இல் முதல் இந்திய விடுதலைப்போர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய மண்ணில் நடந்த அதே வேளை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குறைந்த ஊதியத்தினை எதிர்த்துப் பெண் தொழிலாளர்கள் போராட எழுந்து காவல்துறையினரின் தடியடிக்கு குருதி சிந்திய தினம் இது!

சற்று பின்னே பயணிப்போம்! 1996-ஆம் ஆண்டு தேவே கவுடா, பாரதப் பிரதமராக இருந்தபோது, முதன் முதலில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்டோருக்கான ஒதுக்கீடு இல்லாததால் நிறைவேற்ற முடியாமற் முடக்கப்ட்டது. பின்னர், 1998,1999,2002,2003,2008 என்று பல முறை முயன்றும் இதே காரணங்களால் நிறைவேற்றப்படவில்லை.

பெண்கள் மசோதா: அன்று முதல் இன்று வரை… :

1974: நாட்டில் பெண்களின் நிலை தொடர்பாக ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட கமிட்டி, மத்திய கல்வி மற்றும் சமூக நலத்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், பார்லிமென்டில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.

1993: பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி அமைப்புகளில், பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்க வகை செய்யும் 73 மற்றும் 74வது அரசியல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

1996 (செப்டம்பர் 12): தேவகவுடா தலைமையிலான அரசு பதவியில் இருந்த போது, 81வது அரசியல் சட்டத் திருத்தமாக பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின், கவுடா அரசு சிறுபான்மை அரசாகி விட்டதால், 11வது லோக்சபா கலைக்கப்பட்டது.

1998 (ஜூன் 26): 12வது லோக்சபாவில், 84வது அரசியல் சட்டத் திருத்த மசோதாவாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இந்த மசோதாவை தாக்கல் செய்தது. இந்த முறையும், வாஜ்பாய் அரசு சிறுபான்மை அரசாகி, லோக்சபா கலைக்கப்பட்டதால், மசோதா நிறைவேறாமல் போனது.

1999 (நவம்பர் 22): 13வது லோக்சபாவில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசால், இந்த மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை என்பதால், மசோதா நிறைவேற்றப்படவில்லை. 2002 மற்றும் 2003ல் இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டாலும், நிறைவேற்ற முடியவில்லை.

2008 (மே 6) : ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால், ராஜ்யசபாவில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டு, சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
டிசம்பர் 17): நிலைக்குழு தன் அறிக்கையை சமர்ப்பித்தது. பார்லிமென்டின் இரு சபைகளிலும் மசோதாவை தாக்கல் செய்யலாம் என, தெரிவித்தது.

2010 (பிப்ரவரி 22): பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.

2010 (பிப்ரவரி 25): பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

2010 (மார்ச் 8): ராஜ்யசபாவில் மீண்டும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வரலாறு காணாத அளவிலான ரகளை அரங்கேறியது.

2010 (மார்ச் 9): பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, ராஜ்யசபாவில் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.,க்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவையில் நிறைவேறிய மசோதா, மக்களவையில் இன்னும் நிறைவேற முடியவில்லை!

மகளிருக்கு ஒதுக்கீடு அவசியம் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை! ஆனால், எதன் அடிப்படையில் அது அமையும்? சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அது தீர்வாகி விடுமா? சமூகம்,கல்வி,பொருளாதாரம்,அரசியல் அகிய அனைத்து முக்கிய துறைகளிலும் முஸ்லிம்கள், தலித் மக்களைவிட பின் தங்கியே இருக்கின்றார்கள் என்று சச்சார் கமிட்டி கூறிய பின்னரும், இந்த மகளிர் மசோதாவில் முஸ்லிம் மகளிருக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகலும் பிற்படுத்தப்பட்ட மகளிருக்கும் உள் ஒதுக்கீடு இந்த மசோதாவில் இல்லலை. இதனால் முஸ்லிம்கள் மற்றும் உள்ஒதுக்கீடு வழங்கப்படாத பிற பிரிவினருக்கு என்ன பாதிப்பு?

ஒரு புள்ளி விபரத்தைப் பாருங்கள்:

1952 இல் பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் 15 விழுக்காடு. ஆனால் 543 உறுப்பினர்கள் கொண்ட இன்றைய இந்திய பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் 5.5 விழுக்காடு மட்டுமெ!அதில் பெண்கள் இருவர் மட்டுமே! இப்போது 33 சதவீத இடஒதுக்கீடு மகளிருக்கு வழங்கப்பட்டால் 3 விழுக்காடு முஸ்லிம் உறுப்பினர்கள்கூட தேறுவார்களா என்று சந்தேகமே. இதேநிலைதான் நாம் முன்னர் குறிப்பிட்ட பிற சமூகங்களுக்கும்!

மார்ச் 7-ஆம் தேதி இந்தியத் தலைநகர் தில்லியில் நடந்த மகளிர் நிகழ்ச்;சி! பாரதப் பிரதமர் உரையாற்றும் போது பாலின பாகுபாடு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் விட்டு வைக்கவில்லை என்று கவலைப்பட்டார்.ஆண்களில் இந்த பயன்பாடு 52 சவீதமும் பெண்களில் வெறும் 25.7 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டிருப்பதாகக் கவலைப்பட்டார். அதிலும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மகளிரின் பொருளாதார வளர்ச்சி விகிதம் தசமப்புள்ளிகளில்தான் இருக்கும் என்று சொல்லத் தேவை இல்லை! அரசியல் பங்கு குறித்தோ சொல்லவே தேவை இல்லை!

மகளிர் மதிப்பு இடஒதுக்கீடு மூலம் அனைத்து மகளிருக்கும் உரிய சமூக மதிப்பும் மரியாதயும் அழகாய் கிடைத்திடுமா? ஆணுக்கு பெண் சமம் எனும் இவர்களுடைய வாதம் 50 சதவீதம் இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தால்தானே முழுமையடையும். எனவே, வட்டம்,மாவட்டம்,மாநிலம்,தேசம்,சர்வதேசம் போன்ற எல்லைகளைத் தாண்டி, மனிதகுல மகளிர் அனைவரையும் கருத்திற்கொண்டு உண்மையான மகளிர் உரிமை எப்போது தரப்படும்?விழுக்காட்டு எண்ணிக்கைகளை மட்டும் கருத்திற்கொள்ளாமல், பெண்ணினத்தின் உடல்,உள,சமூக ரீதியிலான அனைத்து அம்சங்களையும் கருத்திற்கொண்டு ஆராய்ந்தால்தான் மகளிர்வாழ்வு அனைத்துத் துறைகளிலும் மேம்படும் அதற்கு பின்வரும் சத்தியநெறியின் சில ஏகஇறைவசன வரிகளை ஆழப் படித்து, ஆய்ந்துணர்ந்தால் தீர்வு சில வினாடிகளில் ஒட்டுமொத்த மகளிர் குலத்துக்கும்! அவ்வரிகள் இதோ!

பொதுவான நியதிப்படி ஆண்கள் மீது பெண்களுக்குச் சில உரிமைகள் உள்ளன, பெண்கள் மீது ஆண்களுக்கு உள்ள சில உரிமைகளைப் போல! ஆயினும் ஆண்களுக்குப் பெண்களைவிட ஒரு படி உயர்வு உண்டு! (திருக் குர்ஆன் 2:228)

ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம் இறைவன் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கின்hறன் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்த செலவு செய்கின்றார்கள் என்பதுமாகும்! (திருக் குர்ஆன் 4:34)

அல்லாஹ் ஆட்சியாளர்கள் அனைவரிலும் மாபெரும் ஆட்சியாளன்! (திருக் குர்ஆன் 95:8)

Related Post