தமிழில்: ஸினூஃபா அன்ஸார்
அழகிய பொன்மொழிகள்..!
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய பொன் மொழிகளுள் சில . . .!
‘அல்லாஹுத்தஆலா உங்களுடைய தோற்றங்களையோ, உருவங்களையோ பார்ப்பதில்லை, எனினும் உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவதானிக்கின்றான்’ என முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) அவர்கள்.
ஆதாரம் : முஸ்லிம்.
‘ மக்களே! நீங்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள்! நிச்சயமாக நான் தினமும் நூறு முறை பாவ மன்னிப்புக் கோருகின்றேன்’ என முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) அவர்கள்.
ஆதாரம் : முஸ்லிம்.
‘ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது இஸ்லாத்தின் இயற்கைத் தன்மையிலேயே பிறக்கின்றது. அதன் பெற்றோரே அதனை யூதனாகவோ அல்லது கிறிஸ்தவனாகவோ அல்லது மஜூஸியாகவோ மாற்றுகின்றனர்.’ என முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்.
‘பெற்றாருக்குத் தீங்கிழைப்பதையும், அவர்களைத் துன்புறுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹுத்தஆலா விலக்கியுள்ளான். (ஹராமாக்கியுள்ளான்) ‘ என முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : முகீரா (ரழி) அவர்கள்.
ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்.
‘அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர் பேசினால் நல்லதை, நன்மையானதைப் பேசட்டும், இன்றேல் வாய் மூடி அமைதியாக இருக்கட்டும்.’ என முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) அவர்கள்.
ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்.