Main Menu
أكاديمية سبيلي Sabeeli Academy

அல்-ஃபாத்திஹா

தொழும் முறை

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

1. கிப்லா என்னும் கஃபா ஆலயத்தை முன்னோக்கி நின்று கொண்டு, தொழவிரும்பும் தொழுகையை மனதில் நினைக்க வேண்டும்.
2. அல்லாஹு அக்பர் என்று கூறி இருகைகளையும் புஜங்களுக்கு நேராக உயர்த்தி, வலது கை மணிக்கட்டை இடது கை மணிக்கட்டின் மீது வைத்து நெஞ்சின் மீது கட்டிக்கொள்ள வேண்டும்.
3. பிறகு பின்வரும் பிராத்தனையை -துஆவை- ஓதவேண்டும்.
ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக்க வதபாரகஸ்முக வதஆலா ஜத்துக்க வலா இலாஹ கைருக்க.
4. பிறகு ஃபாத்திஹா சூராவை ஓதவேண்டும். அது:
அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹும்
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்
அர்ரஹ்மானிர் ரஹீம் – மாலிகி யவ்மித்தீன்
இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்த்தயீன்
இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்த்தகீம்
ஸிராத்தல்லதீன அன்அம்த்த் அலைஹிம்
கைரில் மஃ(க்)ளுபி அலைஹிம்
வலல் ளால்லீன்.- (ஆமீன்.)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன் மாபெருங் கருணையாளனாகவும், தனிப்பெருங்கிருபையாளனாகவும், இருக்கின்றான். இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான். உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். (இபாதத் செய்கிறோம்.) மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்.எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக!  (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி; உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி.

5. பிறகு குர்ஆனின் சில வசனங்களை ஓத வேண்டும்.
சிறிய அத்தியாயங்களில் சில:
(1) குல் ஹீவல்லாஹீ அஹது – அல்லாஹீஸ் ஸமது லம் யலிது, வலம் யூலது – வலம் ய(க்)குல்லஹீ (க்)குஃபுவன் அஹது.
(2) வல்அஸ்ர் – இன்னல் இன்ஸான லஃபீ ஹீஸ்ர் இல்லல்லதீன ஆமனு வஅமிலுஸ் ஸாலிஹாத்தி வதவாஸவ் பில்ஹக்கி வதவாஸவ் பிஸ்ஸப்ர்.
(3) இன்னா அஃத்தைநாக்கல் கவ்ஸர் ஃபஸல்லி லிரப்பிக்க வன்ஹர் இன்ன ஷானிஅக்க ஹீவல் அப்தர்.

6. பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி ருகூவு செய்யவேண்டும். முதுகை வளைத்துக் குனிந்து இரண்டு கைகளைக் கொண்டு -விரல்களை விரித்தவாறு- முட்டுக்கால்களைப் பிடிக்கவேண்டும். தலையை முதுகின் மட்டத்திற்கு சமமாக வைக்கவேண்டும். இதுவே ருகூவுச் செய்யும் முறையாகும்.
7. ருகூவில் ஸுப்ஹான ரப்பியல் அலீம் என்று மூன்று முறை கூற வேண்டும்.
8. ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறியவாறு ருகூவிலிருந்து எழவேண்டும். பிறகு இரு கைகளையும் புஜத்திற்கு நேராக உயர்த்தி கீழே தொங்கவிட்டவாறு ரப்பனா லகல்ஹம்து என்று கூறவேண்டும்.
9. பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி ஸுஜுது செய்ய வேண்டும். முகம் (மூக்கு,நெற்றி) இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டுக்கால்கள், இரண்டு கால் விரல்களின் உட்பகுதி ஆகிய ஏழு உறுப்புக்களும் பூமியில் படும் வகையில் ஸுஜுது அமைந்திட வேண்டும். மேலும் இரு கால்களின் பாதங்களும் நட்டியவாறு இருக்கவேண்டும். கைகளை விழாவோடு ஒட்டிவைப்பதோ, முழங்கைகளை தரையில்படுமாறு வைப்பதோ கூடாது.
10. ஸுஜுதில் ஸுப்ஹான ரப்பியல் அஃலா என்று மூன்று முறை கூறவேண்டும்.
11. பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு ஸுஜுதிலிருந்து தலையை உயர்த்த வேண்டும்.
12. ஸஜ்தாவிலிருந்து எழுந்து இடது கால்களின் மீது உட்கார்ந்து, வலது காலை நட்டி வைத்திருக்க வேண்டும். வலது தொடையின் மீது வலது கையையும் இடது தொடையின் மீது இடது கையையும் முட்டுக்கருகில் கைவிரல்களை விரிக்காமல் இணைத்தவாறு வைக்கவேண்டும்.
13. இந்த இருப்பில் ரப்பிஃ(க்)ஃபிர்லி என்று இரண்டு முறை கூறவேண்டும்.
14. பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி முதலில் செய்ததைப்போன்று மீண்டும் ஸஜ்தாச் செய்ய வேண்டும்.
(இதனுடன் ஒரு ரகஅத் முடிந்தது)

15. பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி எழுந்து, மீண்டும் நிலைக்கு வரவேண்டும். இரண்டாவது ரகஅத்தை முதல் ரகஅத்தைப் போன்றே தொழவேண்டும். எனினும் இதில் ஃபாத்திஹா சூராவிலிருந்து ஓதவேண்டும். அதற்கு முன்னுள்ள பிராத்தனையை மீண்டும் ஓதவேண்டியதில்லை.
16. இரண்டாவது ரகஅத்தின் இரண்டு ஸஜ்தாக்களையும் செய்த பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி இரண்டு ஸஜ்தாவிற்கும் இடையில் அமர்ந்திருந்தது போன்று அமரவேண்டும்.
17. இந்த அமர்வில் அத்தஹிய்யாத் எனும் பின் வரும் பிரார்த்தனையை கூறவேண்டும்.
அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மத் துல்லாஹி வபரகாத்துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு.
(அதனைத் தொடர்ந்து ஸலவாத்து ஓதவேண்டும்)
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹும வஅலா ஆலி இப்ராஹும இன்ன(க்)க ஹமீதுன் மஜீது – வபாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் – கமா பாரக்த அலா இப்ராஹும வஅலா ஆலி இப்ராஹும இன்ன(க்)க ஹமீதுன் மஜுது .
18. இதன் பிறகு தான் விரும்பிய பிராத்தனையைக் கேட்டுக் கொள்ளலாம்.
19. பிறகு வலது புறம் முகத்தைத் திருப்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று கூற வேண்டும். பிறகு இடது புறம் முகத்தைத் திருப்பி அது போன்றே ஸலாம் கூற வேண்டும்.
(இதனுடன் 2 ரகஅத் உடைய தொழுகை நிறைவடையும்.)
20. இரண்டு ரகஅத்களை விட அதிகமான ரகஅத் உள்ள தொழுகைகளைத் தொழும்போது இரண்டாம் ரகஅத்தின் அத்தஹிய்யாத்திற்குப் பின் ஸலாம் கொடுக்காமல் மூன்றாம் ரகஅத்திற்காக எழுந்து நிலைக்கு வந்துவிட வேண்டும். அதில் முதலாவது ரகஅத்தில் கைகளை உயர்த்தியது போன்று கைகளை உயர்த்தி பிறகு கட்டிக்கொள்ள வேண்டும். இரண்டு ரகஅத்திற்கு அதிகமான ரகஅத்களில் சூரத்துல் ஃபாத்திஹா மட்டும் ஓதவேண்டும். இறுதி இருப்பில் ஸலாம் கொடுத்து தொழுகையை முடிக்கவேண்டும்.

Related Post