Main Menu
أكاديمية سبيلي Sabeeli Academy

அல்லாஹ் அல்லாதவருக்காகப் பலியிடல்

 

அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யவேண்டிய தொழுகை போன்ற வழிபாடுகளில் பலியிடுதலும் ஒன்றாகும். அதனை பிறருக்காகச் செய்வது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும்.

அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யவேண்டிய தொழுகை போன்ற வழிபாடுகளில் பலியிடுதலும் ஒன்றாகும். அதனை பிறருக்காகச் செய்வது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும்.

ல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யவேண்டிய தொழுகை போன்ற வழிபாடுகளில் பலியிடுதலும் ஒன்றாகும். அதனை பிறருக்காகச் செய்வது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ

எனவே நீர் உமது இரட்சகனைத் தொழுது, (குர்பானியும் கொடுத்து அதனை அவனுக்காக) அறுப்பீராக! (அல்குர்ஆன் 108:2)

அதாவது: அல்லாஹ்வுக்காகவே பலியிடுவீராக! அல்லாஹ்வுடைய பெயர் கூறியே அறுப்பீராக!

 

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:

وَلَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ

அல்லாஹ் அல்லாதவர்களுக்காக பலியிடுபவனை அல்லாஹ் சபிப்பானாக! (அறிவிப்பவர்: அலீ -ரலி, நூல்: முஸ்லிம் 3657)

அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடுவதில் இரண்டு விதமான குற்றங்கள் உன்னள.

1) அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுப்பது
2) அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறி அறுப்பது.

இவ்விரண்டில் எந்த ஒன்று நிகழ்ந்தாலும் அதனை சாப்பிடுவது ஹராம் ஆகும். நமது நடைமுறையில் மலிந்து கிடக்கும் அறியாமைக் காலச் சடங்குகளில் ஷைத்தானுக்காக பலியிடும் வழக்கமும் ஒன்றாகும். வீடு வாங்கினாலோ, வீடு கட்டினாலோ, கிணறு தோண்டினாலோ ஷைத்தானின் துன்பத்திற்கு பயந்தவர்களாக அந்த இடத்திலோ, அல்லது அந்த மண் மீதோ அறுத்துப் பலியிடுகிறார்கள். இதுவும் தவறான பலியிடுதலேயாகும்.

Related Post