அறிவியலின் ஆத்திச்சூடி இஸ்லாம்!

தொகுப்பு: அப்மு

அறிவியல் என்பது மனித சிந்தனையின் உயரிய ஆய்வு.

அறிவியல் என்பது மனித சிந்தனையின் உயரிய ஆய்வு.

றிவியல் என்பது மனித சிந்தனையின் உயரிய ஆய்வு.ஆனால் அதற்குரிய எண்ண விடியல்கள் இறை தந்த அருளே என்பதை மனிதன் மறந்துவிடுகின்றான். இஸ்லாம் தனது ஆதிகாலத்திலிருந்தே எப்படி அறிவியலை அதற்குரிய மதிப்பில் இருத்தி பேசுகின்றது என்பதை வரலாறும் கண்டபிடிப்புக்களும் சான்று பகருகின்றன.

உலகம்ஆழ்ந்தமடைமைநித்திரையில்துயில்கொண்டிருந்தவேளைதட்டியெழுப்பியதுஇஸ்லாத்தின்கரங்களே..!

அல்குர்ஆனியவேதம்மனிதனைஅதன்ஆரம்பத்தில்விளித்ததுஅறிவைத்தேடுஎன்றேதான்…வலுமிக்கசான்றுகள்இதனைஆதாரப்படுத்தும்

உலகில் முதன் முதல் அறிவுக் கண்களைத் திறந்து வைத்தமா ர்க்கம் இஸ்லாம் என்றால் மிகையாகாது. மனித வரலாற்றில் முதன் முதல் பேனா பிடித்து எழுதியவர் இறைத்தூதர் இத்ரீஸ் (அலை) அவர்கள் ஆவார்கள் என வரலாறு கூறுகின்றது. இத்ரீஸ் என்னும்பெயர்’தர்ஸ்’ என்னும் மூலச் சொல்லிலிருந்து பிறந்ததாகும் தர்ஸ் என்றால் அறிவைக் கற்றல் எனப் பொருள்படும். அவர்கள் கல்வியறிவுடன் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தமையினாலேயே இப்பெயர் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது.

கல்வியறிவுடன்  ஈடுபாடுகொள்வதும் அதில் முன்னேறிச் செல்வதும் வணக்கமாகும் என்பது இந்த இறைத்தூதரின் வாழ்க்கை வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. கல்வித்துறையில் முன்னேறிச் செல்ல இஸ்லாம் காட்டும் கரிசனை எண்ணிலடங்காஒருவர்மார்க்கப்பற்றுடன்வாழ்வதுகல்வித்துறையில்; அவர்முன்னேறிச்செல்வதற்குதடையாகஇருக்கமுடியாது.

திருக்குர்ஆனும்அறிவியலும்

கல்வியறிவைத் தூண்டக்கூடிய ஏராளமான வசனங்களை திருக்குர்ஆனிலே காணமுடிகிறது.

‘இல்ம்’ (கல்வி) என்ற சொல் புனித திருக்குர்ஆனில் சுமார் என்பது இடங்களில் இடம் பெற்றுள்ளது. இது தவிர இந்த மூலச் சொல்லிலிருந்து பெறப்படும் சொற்கள் நூற்றுக்கணக்கில் அதில் பரவிக் காணப்படுகின்றன.

‘ஆதத்துக்கு பொருட்களின் பெயர்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தான்’ (அல்பகரா : 31) எனும் அல்குர்ஆன் வசனம் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு முதன் முதலில் அறிவு புகட்டப்பட்டது பற்றி பேசுகின்ற வசனமாகும்.

அவ்வாறே ‘இக்ரஃ’ (ஓதுவீராக!) என்பது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அல்குர்ஆனின் முதல் வாக்கியமாகும். இந்த வகையில் இறைத்தூதின் ஆரம்பமே கல்வியறிவைத் தூண்டக்கூடிய விதத்தில் அமைந்திருப்பதனை காண முடிகிறது.

மேலும் ‘உலுல்அல்பாப்’ (அறிவுடையவர்கள்) என்னும் சொல் திருக்குர்ஆனில் சு

அறிவியலின் ஆத்திச்சூடி இஸ்லாம்!

அறிவியலின் ஆத்திச்சூடி இஸ்லாம்!

மார் பதினாறு இடங்கனில் இடம் பெற்றுள்ளது.  ‘அல்அக்ல்'(புத்தி) எனும் மூலச் சொல்லிலிருந்து தோற்றம் பெறும் சொற்கள் சுமார் நாட்பத்தி ஒன்பது இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிந்தித்தல் என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்ட சொற்கள் பதினாறு முறை இடம் பெற்றுள்ளன. ‘ஹிக்மத்’ (ஞானம்) எனும் சொல் இருபது இடங்களிலும் ‘புர்ஹான்’ அத்தாட்சி என்னும் சொல் எட்டு இடங்களிலும் அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.

இன்னும் திருக்குர்ஆனில் சில அத்தியாயங்களின் ஆரம்பத்தில் அல்லாஹ் முக்கியமான பொருட்களின் மீது சத்தியமிட்டுக் கூறுவதை நாம்காணலாம். உதாரணமாக அத்தியாயம் அல்கலம்!  இதனைஆரம்பிக்கும்போது : ‘நூன்;, எழுதுகோலின் மீதும் அதன் மூலம் அவர்கள் எழுதியவற்றின் மீதும் சத்தியமாக’   (அத்68: 01  ) என குறிப்பிடப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது!

தொடரும், இறைநாடின்.,!

Related Post