– மவ்லானா ஸஃபீயுர் ரஹ்மான்
– தமிழில் : மு.அ. அப்துல் முஸவ்விர்
அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 4
அத்தியாயம் 1
திருப்புதல் வினாக்கள்
கோடிட்ட இடத்தை நிரப்புக
1. தனது தனித்துவமிக்க இருப்பிட அமைப்பால், அரபிய தீபகற்பம், வணிகம், கலை மற்றும் கலாச்சாரத்தின் -ஆக விளங்கியது.
2. மற்றும் குறித்த பொய்யானதொரு அச்சத்தின் காரணமாக, அரபியர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர்.
3. -இன் ஆட்சியாளர்கள் அரபியர்களின் மரியாதைக்குரியவர்களாகவும்,வழிபாட்டுத்தலத்தின் பணியாளர்களாகவும் கருதப்பட்டனர்
4. அஞ்ஞானக்கால அரபிய தீபகற்பத்தில் , மற்றும் போன்ற பெயருடைய சிலைகள் வணங்கப்பட்டு வந்தன.
5. அரபியர்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கியது .
வாக்கியத்தைப் பூர்த்தி செய்க:
1. அஞ்ஞானக்கால அரபியர்களிடத்தில்,
அ. ———————- அருந்துதல்
ஆ. ———————- உயிருடன் புதைத்தல்
இ. ———————– மீது நம்பிக்கை கொள்ளல் போன்ற தீயொழுக்கங்கள் விரவி இருப்பினும்,
2. அவர்களிடத்தில்,
அ. —————————————————————————
ஆ. —————————————————————————
இ. —————————————————————————-
போன்ற நல்ல பழக்கங்களும் இருந்தன.
சரியா, தவறா என குறிப்பிடுக:
1. அரபிய தீபகற்பத்தில் சிலைவணக்க வழிபாட்டை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவன் அம்ர்-பின்-லுஹை ஆவான்.
2. அரபியாவில் தொழிற்துறை பிரபலமடைந்திருந்தது.
3. அஞ்ஞானக்கால் அரபிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனைவியரையே கொண்டிருந்தனர்.
4. அரபிய தீபகற்பம், பெரும்பாலும் பாலை நிலமும், மண்பிரதேசமும் நிறைந்தது.
5. நாவன்மையிலும் சரளமாகப் பேசுவதிலும் அரபியர்கள் பிரபலமானவர்கள்.
சரியான விடையைத் தேர்வு செய்க!
1. அரபிய தீபகற்பத்தில் துணி நெய்தல், தோல் பதனிடுதல் போன்ற தொழில்களை மேற்கொண்டவர்கள்:
அ. எமன், ஹீரா மற்றும் ஷாம் (சிரியா) ஆகிய பகுதிகளிலிருந்து வந்த மக்கள்.
ஆ. மக்கா மற்றும் யத்ரிப் (மதீனா) ஆகிய பகுதிகளிலிருந்து வந்த மக்கள்.
2.அரபியர்கள் வாழ்வுடன் இணைந்த முக்கிய அம்சமாக நாம் காணுவது:
அ. குடும்பம் மற்றும் தமது குலத்துடன் இயைந்த அவர்களின் ஆழ்ந்த, உணர்வுப்பூர்வமான பந்தம்
ஆ. தமது குழந்தைகள் மீதான பொறுப்பற்ற, உணர்ச்சிகரமான ஒட்டுறவு.