-மவ்லானா ஸஃபீயுர் ரஹ்மான்
–தமிழில்:இளவேனில்
பார்வேந்தனின் பண்பாட்டுத் தளங்கள்
இஸ்லாத்துக்கு முந்தைய அஞ்ஞானக் கால அரபிய மக்களிடையே குடிப்பழக்கம், சூதாட்டம் உள்ளிட்ட தீயொழுக்கங்களும் ஒப்புக்கொள்ள இயலாத செயல்பாடுகளும் அருவருக்கத்தக்க இழிவான நடத்தைகளும் மலிந்து கிடந்தன என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும்.., வியக்கத்தக்க, போற்றுதலுக்குரிய சில அரிய பண்புகளும் அவர்களிடம் குடிகொண்டிருந்தன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்:-
1. விருந்தோம்பல்: கொடைத் தன்மையிலும் விருந்தினர்களை உபசரிப்பதிலும் அவர்களிடையில் குறை காண முடியாதவர்களாக இருந்தனர். தங்களுக்கு அதிபிரியமான உணவு வகைகளைக்கூட தாகித்த அல்லது பசியோடு வரும் விருந்தினருக்கு வழங்குவதில் ஒருவரையொருவர் போட்டியிட்டனர்.
2. ஒப்பந்தங்களை நிறைவேற்றல்: அரபியர்களைப் பொறுத்த வரை ஏற்றுக்கொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதும்,கொடுத்த வாக்குகளைக் காப்பாற்றுவதும் வாங்கிய கடன் போன்றதாகக் கருதி, அதனை நிறைவேற்றுவதில் மிக உறுதியாக இருந்தனர். அதுகுறித்து அவர்கள் அலட்சியமக இருந்ததில்லை. அதற்காக,தங்களது பிள்ளைகள் கொலை செய்யப்பட்டாலும் தங்களது வீடுகள் தகர்க்கப்பட்டாலும் சரியே..!
3. சுயகவுரவம் மற்றும் அநீதத்துக்கெதிராக மார்தட்டுதல்:சுயமரியாதைப் போக்கின் விளைவாக ஏற்பட்ட கட்டுக்கடங்கா வீரமும், அதிரடியான உணர்வுப் பிரவாகமும் அவர்களிடத்தில் இப்பண்புகள் நிலைத்திருக்க உதவின.
4. செயலில் உறுதி
5. அமைதி, நிதானப் போக்கு, சகிப்புத்தன்மை
நாவன்மையிலும் சரளமாகப் பேசுவதிலும் அரபியர்கள் பிரபலமானவர்கள்.இத்தகைய விலைமதிப்பற்ற அரிய பண்புகளுடன்,உலகின் ஏனைய பகுதிகளைவிடவும் அரபிய தீபகற்பத்துக்குப் பிரத்யேகமாக அமைந்த புவியியல் ரீதியான முக்கியத்துவமும் இணைந்தது. இதன் காரணமாகவே, இஸ்லாம் எனும் உலகுக்கான இறுதித்;தூதை சுமப்பதற்கும், அதனைக் கொண்டு மனிதகுலத்தை சீர்படுத்தி நேர்வழி நோக்கி அழைத்துச் செல்வதற்குமான ஒரு மாபெரும் பொறுப்புக்காக அரபியர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்ததன் சூட்சுமம் இருக்கின்றது என அறிய முடிகின்றது.