ஹிஜ்ரத் – புலம் பெயர்தல் – வரலாற்றுத் திருப்புமுனை!

– அகார் முஹம்மத்

வரலாற்றுத் தவறுகள் திருத்தப்பட வேண்டும். உண்மையில் வரலாறு என்பது மேற்கத்தேய வரலாறாக இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது

வரலாற்றுத் தவறுகள் திருத்தப்பட வேண்டும். உண்மையில் வரலாறு என்பது மேற்கத்தேய வரலாறாக இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது

வன் ஜிஹாத் செய்கின்றானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே அதனை செய்கின்றான். திண்ணமாக, உலக மக்களை விட்டு அல்லாஹ் தேவைகள் அற்றவன்.  மேலும், எவர்கள் நம் பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களைவிட்டு அவர்களின் தீமைகளை நாம் களைந்துவிடுவோம். மேலும், நாம் அவர்களுக்கு அவர்களின் அழகிய செயல்களுக்குரிய கூலியையும் வழங்குவோம்.29:6-7

பன்மைச் சமூகம்

ன்று பன்மைச் சமூகம் எனும் கருப்பொருள் குறித்து பரவலாகப் பேசப்படுகிறது. பல இனங்களைச் சார்ந்த ஒரு சமூகம் எவ்வாறு தமக்குள் விட்டுக் கொடுப்புடன் புரிந்துணர்வின் அடிப்படையில் நடந்து கொள்ள வேண் டும் என்று கலந்துரையாடப்படுகின்றது. இதற்கு மிகச் சிறந்த முன்னுதாரண சமூகமாக மதீனா சமூகம் விளங்கியது. மதீனாவில் வாழ்ந்த யூதர்களுடன் நபிய வர்கள் உடன்படிக்கை ஒன்றைச் செய்து அவர்களின் பரஸ்பர கடமைகள், உரிமைகளை வரையறுக்கின்ற ஒரு சாசனத்தை உருவாக்குகின்றார்கள். அதுதான் மதீனா சாசனம். இதுவே முஸ்லிம்களின் வரலாற்றில் முதலாவது எழுதப்பட்ட அரசியல் சாசனம். முஹாஜிர்கள், அன்ஸாரி களுக்கிடையிலான உறவு, குறிப்பாக யூதர்களுடனான உறவு எவ்வாறு அமைய வேண்டும், அவர்களின் மத சுதந்திரம், தனித்துவம் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் போன்ற சகல உரிமைகளையும் பேணி மதீனா சாசனம் உருவாக்கப்பட்டது.

கி.பி. 1789ம் ஆண்டு நடைபெற்ற பிரான்ஸியப் புரட்சியின் பின்னர்தான் மனித உரிமைகள் பற்றிய சிந்தனை பிறந்ததாகவும் அதனடியாகவே 1948ம் ஆண்டு ஐ.நா.வினால் மனித உரிமைகள் சாசனம் உருவாக்கப் பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால், உண்மை அதுவல்ல. உலகிலேயே முதலாவது எழுதப்பட்ட அரசியல், மனித உரிமைகள் சாசனமாக ஹிஜ்ரத்தைத் தொடர்ந்து கைச்சாத்திடப்பட்ட மதீனா சாசனமே விளங்குகின்றது என்பதை வரலாற்றை காய்தல் உவத்தலின்றிப் படிக்கும் ஆய்வாளர்கள் உணர்ந்துகொள்வர்.

எனவே, வரலாற்றுத் தவறுகள் திருத்தப்பட வேண்டும். உண்மையில் வரலாறு என்பது மேற்கத்தேய வரலாறாக இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. சுதந்திரம், சகிப்புத் தன்மை, மனிதனின் அடிப்படை உரிமைகள் பற்றிய கோட்பாடுகள் அண்மைக் காலத்தில்தான் தோன்றின என்பது போன்ற பிரஜைகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால், வரலாற்றைப் பொறுத்தவரையில் மனித உரிமை சாசனத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே. அன்னார் நிகழ்த்திய அரபா உரை, அன்னார் செய்து கொண்ட மதினா சாசனம், நஜ்ரான் சாசனம் ஆகிய மூன்றும் மனித இனப் பங்களிப்பிற்கு மகத்தான சான்று களாக விளங்குகின்றன.

நஜ்ரான் சாசனம்

வரலாற்றுத் தவறுகள் திருத்தப்பட வேண்டும். உண்மையில் வரலாறு என்பது மேற்கத்தேய வரலாறாக இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது

வரலாற்றுத் தவறுகள் திருத்தப்பட வேண்டும். உண்மையில் வரலாறு என்பது மேற்கத்தேய வரலாறாக இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது

நஜ்ரான் பிரதேச கிறிஸ்தவர்கள் நபியவர்களைச் சந்தித்து இஸ்லாத்தைப் பற்றி அறிந்துகொள்ள மதீனா வந்திருந்தார்கள். அவர்கள் சமுகமளித்திருந்த நேரம் அவர்களின் வணக்கத்துக்குரிய, நேரமாகவிருந்தது. அவர்களின் வணக்கத்தை நிறைவேற்றுவதற்கு மஸ்ஜிதுந் நபவியிலே நபியவர்கள் ஓரிடத்தை ஒதுக்கிக் கொடுத்தார்கள்.

அடுத்ததாக, வந்திருந்த கிறிஸ்தவர்களோடு ஓர் உடன்படிக்கையும் செய்து கொண்டார்கள். அவ்வுடன் படிக்கையின்படி, கிறிஸ்தவர்கள் தமது கழுத்தில் சிலுவை சின்னத்தை அணிந்து செல்வதற்கு உரிமை வழங்கப் பட்டது. அவ்வாறே சமூக, கலாசார, பண்பாட்டு, மத விவகாரங்களிலே பரிபூரண சுதந்திரத்தை வழங்கி ஷநஜ்ரான்| சாசனத்தையும் கைச்சாத்திட்டார்கள்.

இரண்டாவதாக, எவ்வாறு அன்ஸாரிகளும் முஹாஜிர் களும் ஈமானிய உறவினால் பிணைக்கப்பட்டிருந்தார்களோ அத்தகைய அத்தியந்த உறவு இன்றைய முஸ்லிம் சமூகத்துக்குள் நிலவுகின்றதா? மூன்றாவதாக முஸ்லிமல் லாதோருடன் அன்றைய மதினா சாசனத்துக்கூடாக ஆரோக்கியமான ஓர் உறவைக் கட்டியெழுப்பினார்கள். அப்படிப்பட்ட உறவை நாம் வளர்த்திருக்கின்றோமா என்ற இம் முப்பெரும் கேள்விகளுக்கும் பதில் காண வேண்டிய நேரம் இது.

இவ்வாறு அன்று முஸ்லிம் சமூகத்தின் உயிர்நாடியாக விளங்கிய மஸ்ஜித் இன்று எந்த நிலையை அடைந்திருக் கின்றது என்பதை சிந்தித்துப் பார்ப்பதற்குப் பொருத்தமான நேரம் இது.

சகோதரத்துவக் கட்டுமானம்

ஹிஜ்ரத்தின் பின் நடைபெற்ற நிகழ்வுகளை நோக்கு கின்றபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் கட்டி எழுப்ப விரும்பிய ஈமானிய சமூகத்துக்கு மிக முக்கியமான அடிப்படையாகக் கருதியது சகோதரத்துவம், ஒற்றுமை, ஐக்கியம் எனும் பண்புகளை யேயாகும். நபியவர்கள் சொன்னார்கள்

“ஒரு முஃமின் ஒரு கட்டடத்தைப் போன்றவன். அதன் ஒரு பகுதி அடுத்த பகுதிக்கு உரமூட்டும்.”

இந்த ஒற்றுமை அன்றைய முஸ்லிம்களின் வெற்றிக்கு எந்தளவு தூரம் துணைபுரிந்தது என்பதை வரலாற்றில் காணலாம். ஆனால், இத்தகைய ஒற்றுமையை இன்றைய முஸ்லிம் சமூகம் இழந்திருப்பதே அதன் பின்னடைவுக்கும் அவல நிலைக்கும் காரணமாக அமைந்திருக்கின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டியெழுப்பிய ஈமானிய சமுதாயத்தில் குறுகிய இன, வர்க்க, நிற வேறுபாடுகளோ தேசிய, பிரதேச வாதங்களோ காணப்படவில்லை. அபீசீனியாவிலிருந்து மதீனா வந்த பிலால் ரழியல் லாஹு அன்ஹு அவர்கள் அச்சமூகத்துடன் இரண்டறக் கலந்து எவ்வித வேறுபாடுமின்றி வாழ்கிறார்கள். பாரசீகத்திலிருந்து வந்த ஸல்மானுல் பாரிசி ரழியல்லாஹு அன்ஹு அச்சமூகத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கின் றார்கள். ரோம் நாட்டின் அடிமையாக வந்த ஸுஹைப் ரழியல்லாஹு அன்ஹு அச்சமூகத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறார்கள்.

எனவே, பாரசீகத்தின் ஸல்மானும் ரோமின் ஸுஹைபும் அபிசீனியாவின் பிலாலும் எத்தகைய  இன, நிற,தேசிய பேதமின்றி இஸ்லாம் எனும் கட்டுக்கோப்பில் தம்மை இணைத்துக் கொண்ட நிகழ்வை மதீனா சமூகத்தில் காணலாம். அன்ஸாரிகளும் முஹாஜிர்களும் தமது சொத்துக்களை பரஸ்பரம் தமக்கிடையில் பரிமாறிக் கொண்டு பொருளாதார நலன்களை விட்டுக்கொடுத்து அந்த சமூகத்தில் இணைகிறார்கள்.

ஆனால், இக்கால இஸ்லாமிய சாம்ராஜ்யத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் இஸ்லாத் தின் விரோதிகள் கையாண்ட முக்கியமான உத்திதான் முஸ்லிம்கள் மத்தியிலே இன, நிற, பிரதேச, தேசிய உணர்வுகளை ஏற்படுத்தியமை.

ஸ்பெய்னிலே சுமார் 800 வருடங்கள் ஆட்சி புரிந்த முஸ்லிம்களிடம் வட அராபியர்தென் அராபியர் எனும் பிரிவைத் தோற்றுவித்து இஸ்லாமிய ஆட்சியை சீர்குலைத் தார்கள். வளம் மிக்க உஸ்மானியப் பேரரசை அராபியர்துருக்கியர் என்ற இனவாதத்தைத் தூண்டி இஸ்லாமிய ஆட்சியை சீர்குலைத்தார்கள். இன்று பாகிஸ்தான் போன்ற நாடுகளில் சிந்திக்கள்பஞ்சாபிகள்உருது பேசுவோர் என்ற பேதங்கள் தோன்றியிருப்பதைப் பார்க்கிறோம். ஈராக்கில் குர்திகள் பாரசீகர்கள்ஈராக்கியர் என்ற பேதங்கள் தோன்றியிருக்கின்றன.

எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாமிய சகோதரத்துவம் எனும் உறுதியான கட்டமைப்பின் அடிப்படையில் கட்டியெழுப்பிய சமூகம் பிற்காலத்தில் சீர்குலைந்து முஸ்லிம் சமூகம் சின்னாபின் னமாக சிதறி ஆட்சியையும் ஆற்றலையும் இழந்து, பண்பாடும் நாகரிகமும் சீர்குலைந்து நிற்கும் சமூகமாக மாறியுள்ளது. இந்த நாட்டில் கூட முஸ்லிம்கள் மத்தியில் பிரதேசவாதம் காணப்படுகின்றது. இது பெரும் பிரச்சினை யாக சிலபோது படையெடுப்பதையும் பார்க்கின்றNhம்.

ஹிஜ்ரத் எங்களுக்கு உணர்த்துகின்ற பாடம் மதீனா சமூகத்தின் உறுதியான கட்டுக்கோப்பு ஆகும். அது உறுதிகுலையாது என்றுவரை பேணப்பட்டதோ அன்றுவரை இஸ்லாம் மாபெரும் சக்தியாக உலகில் தலைநிமிர்ந்து நின்றிருக்கிறது. எப்போது அந்த சகோதரத்துவ உணர்வு குறுகிய சிந்தனைகளால் தூண்டப்பட்டு சின்னாபின்னப்பட்டதோ அந்த நேரத்தில் முஸ்லிம்கள் ஆட்சியை இழந்திருக்கிறார்கள். கண்ணி யத்தை இழந்து பிளவுபட்டு சீர்குலைந்திருக்கின்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

வரலாற்றுத் தவறுகள் திருத்தப்பட வேண்டும். உண்மையில் வரலாறு என்பது மேற்கத்தேய வரலாறாக இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது

வரலாற்றுத் தவறுகள் திருத்தப்பட வேண்டும். உண்மையில் வரலாறு என்பது மேற்கத்தேய வரலாறாக இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது

“ஷைத்தான் அரபுத் தீபகற்பத்தில், இஸ்லாமிய உலகில் தொடர்ந்தும் தான் வணங்கப்படப் போவதில்லை| என்பதை உறுதியாக அறிந்து கொண்டான் அவ்விடயத்தில் அவன் நம்பிக்கை இழந்துவிட்டான். ஆனால், அவன் நம்பிக்கை இழக்காமல் செயற்படுகின்ற ஓர் அச்சம் தொடர்ந்தும் இருக்கிறது. அதனையிட்டு நான் உங்களை எச்சரிக்கிறேன். அதுதான் முஸ்லிம்கள் மத்தியில் உட்பூசலை ஏற்படுத்துவது. இவ்விடயத்தில் மாத்திரம் அவன் நம்பிக்கை இழக்கவில்லை.”

எனவே, நாம் வேற்றுமையில் ஒற்றுமை காண்போம். முரண்பாட்டில் உடன்பாடு காண்போம் என்ற கோஷத்தோடு இப்புத்தாண்டில் காலடி எடுத்து வைப்போம். உலகளாவிய முஸ்லிம் உம்மத் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் அனைத்தும் அகன்று சந்தோஷமான எதிர்காலம் கிட்ட அனைவரும் பிரார்த்திப்போம்.

Related Post