Main Menu
أكاديمية سبيلي Sabeeli Academy

வெள்ளிக் கிழமை சிறப்பு!–2

-அரபி மூலம்: அப்துல் மலிக்  அல் காஸிம்

வெள்ளிக் கிழமை சிறப்பு!வெள்ளிக் கிழமை என்பது ஒரு மாபெரும் சிறப்பு நாள்..! முஸ்லிம்களின் வணக்கத்துக்குரிய நாள்..!

வெள்ளிக் கிழமை சிறப்பு!வெள்ளிக் கிழமை என்பது ஒரு மாபெரும் சிறப்பு நாள்..! முஸ்லிம்களின் வணக்கத்துக்குரிய நாள்..!

வெள்ளிக் கிழமை சிறப்பு!வெள்ளிக் கிழமை என்பது ஒரு மாபெரும் சிறப்பு நாள்..! முஸ்லிம்களின் வணக்கத்துக்குரிய நாள்..!ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அவனது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

6) மறுமை நாள்  நிகழக்கூடிய நாள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வெள்ளிக்கிழமை நாளிலே மறுமை நிகழும்”(ஆதாரம்: முஸ்லிம்)

7) பாவங்கள் மன்னிக்கப்படும் நாள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் குழித்து சுத்தம் செய்துகொண்டு, தலையில் எண்ணை தெய்த்து,வாசனை திரவியங்களை தடவிக்கொண்டு பின்னர் பிரரை கடந்து செல்லாமல்  பள்ளியினுல் நுழைந்து தனக்கு கடமையான தொழுகையை தொழுகின்றாரோ அவரது  இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்கும் இடைப்பட்ட பாவங்கள்மன்னிக்கப்படும்” (ஆதாரம்:புகாரி)

8) ஜும்-ஆவுக்கு நடந்து செல்வதற்குறிய நன்மை: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் ஜும்-ஆதினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து, வாகனத்தில் ஏறாமல், ஜும்-ஆவுக்காக நடந்து சென்று, இமாமுக்கு அருகாமையில் அமர்ந்து, அவர் சொல்வதை செவிமெடுக்கின்றாரோ அவர் நடந்து சென்ற ஒவ்வொரு எட்டுக்கும், நின்று வணங்கிய, நோன்பு நோற்ற  நன்மை கிடைக்கும்” (ஆதாரம்: அபூதாவூத்)

9) இரண்டு வெள்ளிக்கிழமை மற்றும் மூன்று நாட்களுக்கு இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் குளித்து ஜும்ஆவுக்குச் சென்று தொழுதுவிட்டு, இமாம்  ஜும்ஆவை  முடிக்கும் வரை மெளனமாக இருந்துவிட்டு ,அவருடன் தொழுகின்றாரோ அவருக்கு இரண்டு ஜும்ஆவுக்கும் மேலதிகமாக மூன்று நாட்களுக்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்” (ஆதாரம்: முஸ்லிம்)

10) ஜும்ஆ தினத்தில் அல்லது  அன்று இரவில் மரணிப்பவரது மரணம் நல்ல மரணத்தின் அடையாளங்களில் நின்றும் ஒன்றாகும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் ஜும்ஆ தினத்தில் அல்லது அன்று இரவில் மரணிக்கின்றாரோ அவர் மண்ணறை வேதனையை விட்டும் காப்பாற்றப்டும்” (ஆதாரம்: அஹ்மத்)

11) இத்தினத்தில் தர்மம் செய்வது ஏனய நாற்களில் தர்மம் செய்வதனை விடவும் சிறந்ததாகும்: இமாம் இப்னு கையும் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “ரமலான் மாதத்தில் தர்மம் செய்வது எவ்வாறு ஏனைய மாதங்களில் தர்மம் செய்வதை விடவும் சிறபானதோ அதே போன்று வெள்ளிக்கிழமையன்று தர்மம் செய்வது ஏனைய நாட்களில் தர்மம் செய்வதைவிடவும் சிறந்ததாகும்” இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் வெள்ளியன்று பள்ளிவாசலுக்கு செல்லும் போது ரொட்டி அல்லது வேறு ஏதாவது உணவு  பண்டங்களை  கொண்டு சென்று இரகசியமாக தர்மம் செய்வார்கள்.

மேற்கூறப்பட்ட விஷயங்கள்  வெள்ளிக்கிழமைகுரிய சில சிறப்புக்களாகும்,

-அர்ஷத் ஸாலிஹ் மதனி

Related Post