மறுமை நாளின் ..!

மறுமை நாளின் ..!

– அப்துல்லாஹ்

நான் மறுமைநாளின் மீது சத்தியம் செய்கின்றேன்

நான் மறுமைநாளின் மீது சத்தியம் செய்கின்றேன்

ல்லை! நான் மறுமை நாளின் மீது சத்தியம் செய்கின்றேன். இல்லவே இல்லை; இடித்துரைக்கும் மனத்தின் மீது நான் சத்தியம் செய்கிறேன். அவனுடைய எலும்புகளை நம்மால் ஒன்றுதிரட்ட முடியாது என்று மனிதன் கருதிக் கொண்டிருக்கின்றானா?  ஏன் முடியாது? நாமோ அவனுடைய விரல்களின் நுனியைக்கூட மிகத் துல்லியமாக அமைப்பதற்கு ஆற்றல் பெற்றுள்ளோம். ஆனால், மனிதன் எதிர்காலத்திலும் தீமைகளைச் செய்துகொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகின்றான். “அந்த மறுமைநாள் எப்போது வரும்?” என்று அவன் கேட்கின்றான். பிறகு, பார்வை நிலைகுத்தி விடும்போது, மேலும், சந்திரன் ஒளி குன்றிப் போகும்போது, மேலும் சந்திரனும், சூரியனும் ஒன்றாக இணைக்கப்படும்போது; அந்நாளில் இதே மனிதன் “நான் எங்கே சென்று ஓடி ஒளிவது?” என்று கேட்பான். ஒருபோதுமில்லை! அங்கு எந்தப் புகலிடமும் இருக்காது.  அந்த நாளில் உன் அதிபதியின் முன்பே சென்றடைய வேண்டியிருக்கும். அந்த நாளில் மனிதனுக்கு, அவனுடைய முந்தைய, பிந்தைய செயல்கள் அனைத்தும் எடுத்துக் காண்பிக்கப்படும்.  ஏன், மனிதன் தன்னைப் பற்றி நன்கு அறிந்தவனாக இருப்பான்; அவன் எவ்வளவுதான் சாக்கு போக்குகளைக் கூறினாலும் சரியே!

இவ்வுலக வாழ்க்கைக்கு இன்றியமையாதது பொருளாதாரம். “அருளில்லார்க்கு அவ்வுலகில்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை” என்ற முதுமொழி இதை உணர்த்தும் படைத்த இறைவன் மனிதனுக்கென்று அருளிய அருள் மார்க்கம் இவ்வுலகில் மனிதனுக்குரிய பங்கையும் தெளிவுபடுத்தி கூறியுள்ளது. மறுஉலக பேருகளை இவ்வுலகிலேயே உழைத்துப்பெற வேண்டும் என்று விதித்திருக்கிறான் அல்லாஹ். உலக இன்பங்களை துறந்து காடு சென்று கடுந்தவம் செய்வது கொண்டே ‘முக்தி’ பெறமுடியும் என்ற கட்டாய விதியை இறைவன் விதிக்கவில்லை.

இவ்வுலக இன்பங்களை வரையறைக்குட்பட்டு முறையாக அனுபவித்துக்கொண்டே மறுமைப் பேறுகளையும் பெறும் வழியை இஸ்லாம் போதிக்கிறது. மறு உலகப் பேறுகளை நிறைவாகப் பெறுவதற்கு முறையான வழிகாட்டுதலையும் தெளிவாகத் தருகிறது இஸ்லாமிய மார்க்கம். இரண்டும் பின்னிப் பிணைந்த ஓர் உன்னத நிலையைத்தான் இஸ்லாம் போதிக்கிறது.

ஆனால் ஷைத்தான் அதற்கு மாறாக ஒன்று இவ்வுலக பேறுகளையே சதமாகக்கொண்டு மறு உலகத்திற்கு வேண்டிய சாதனங்களைத் தேடுவதில் குறை செய்யவைக்கிறான். அல்லது மறு உலகப் பேறுகளைத் தேடுவதையே முழுக் குறிக்கோளாகக் கொண்டிருப்பது போன்ற மயக்கத்தை உண்டாக்குகிறான். அல்லாஹ் விதிக்காததை (துறவறம்) மனிதர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவைக்கிறான். அதையும் முழுமையாக நிறைவேற்ற முடியாமல் தோல்வியுற்று இம்மை, மறுமை இரண்டையும் நஷ்டப்படுத்தி நரகில் விழ வழி வகுக்கிறான். இப்படி ஒன்றில் இம்மையை மட்டும், அல்லது மறுமையை மட்டும் தேர்ந்தெடுத்து அதனால் தோல்வியுற்று வழிகெட்டு நரகில் விழும் கூட்டம் ஏராளம்.

Related Post