Main Menu
أكاديمية سبيلي Sabeeli Academy

மறதிக்கு மருந்து.., இறைவணக்கத்தில்..!

மறதி என்பது மனிதனுள் ஏற்படுவதே.ஆனால், இறைவணக்கத்தில் மறதி என்பது கவனிக்கத்தக்க அம்சம்.குறிப்பாகத் தொழுகையில் ஏற்படம் இத்கைய மறதிக்குப் பகரமாக, சிரமமே இல்லாத வகையில் ஸஜ்தா ஸஹ்வு எனும் மறதிக்கான ஸஜ்தாவை வைத்திருக்கின்றான் இறைவன்.

மறதி என்பது மனிதனுள் ஏற்படுவதே.ஆனால், இறைவணக்கத்தில் மறதி என்பது கவனிக்கத்தக்க அம்சம்.குறிப்பாகத் தொழுகையில் ஏற்படம் இத்கைய மறதிக்குப் பகரமாக, சிரமமே இல்லாத வகையில் ஸஜ்தா ஸஹ்வு எனும் மறதிக்கான ஸஜ்தாவை வைத்திருக்கின்றான் இறைவன்.

– ஜன்னத்

றதி என்பது மனிதனுள் ஏற்படுவதே.ஆனால், இறைவணக்கத்தில் மறதி என்பது கவனிக்கத்தக்க அம்சம்.குறிப்பாகத் தொழுகையில் ஏற்படம் இத்கைய மறதிக்குப் பகரமாக, சிரமமே இல்லாத வகையில் ஸஜ்தா ஸஹ்வு எனும் மறதிக்கான ஸஜ்தாவை வைத்திருக்கின்றான் இறைவன்.

ஸுஜூதுஸ்ஸஹ்வு – என்றால் என்ன?

நாம் தொழும்போது, மறதியாக நிகழும் கூடுதல், குறையுதல் முதலியவற்றை நிவர்த்திச் செய்வதற்காக தொழுகையின் இறுதியில் செய்யப்படும் இரு ஸஜ்தாக்களாகும்.

”ஸுஜூதுஸ்ஸஹ்வு” எவ்வாறு செய்ய வேண்டும்?

ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்வதற்கு இரு முறைகள் உள்ளன.

1. தொழுகையின் இறுதியில் ஸலாம் கூறுவதற்கு முன் 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு பின்னர் ஸலாம் கூறுதல்.

2. தொழுகையின் இறுதியில் ஒரு ஸலாம் கூறிவிட்டு பின்னர் 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு மீண்டும் ஸலாம் கூறுதல்.இவ்விரு முறைகளில் எதனையும் எடுத்து அமல் செய்து கொள்ளலாம்.
”ஸுஜூதுஸ்ஸஹ்வு” செய்ய வேண்டிய சந்தர்ப்பங்கள்:

1. முதல் இருப்பில் (நடு இருப்பில்) உட்காராமல் எழுந்துவிட்டால் (ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்ய வேண்டும்)
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தாம் இரண்டாவது ரகாஅத்திலிருந்து உட்காரமல் எழுந்து விட்டார்கள். அவர்களுடன் (சேர்ந்து) மக்களும் எழும்பி விட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடிக்கும் தருவாயில், மக்கள் நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவர்கள் தாம் ஸலாம் கொடுப்பதற்கு முன் தக்பீர் சொல்லி, 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு பின்னர் ஸலாம் கூறினார்கள். (இப்னுபுனஹனா(ரழி), பாடம்: ஸுஜூதுஸ்ஸஹ்வு, புகாரீ, முஸ்லிம்)

2) தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டு விட்டால், எது சரியானது என்ற முடிவுக்கு வந்து, அதன்படி தொழுகையை நிறைவு செய்துவிட்டு பின்னர் அதற்காக ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்ய வேண்டும்.

உங்களில் ஒருவருக்கு தமது தொழுகையில் சந்தேகம் தோன்றிவிட்டால், எது சரியானது என்ற முடிவுக்கு வந்து, அதன்படி தொழுகையை நிறைவு செய்துவிட்டு, பின்னர் 2 ஸஜ்தாக்கள் செய்து கொள்வாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னுமஸ்ஊத்(ரழி), முஸ்லிம், அபூதவூத், நஸயீ, இப்னுமாஜா)

Related Post