-ஸினூஃபா அன்ஸார்
ஆம் மரண வாழ்வும் மறுமை வாழ்வும் உலகத்தின் கற்பனை சித்தரிப்புக்களுமல்ல. பிரட்ட பிரட்ட பிரமிக்கச் செய்யும் நாவல் கதையுமல்ல. வாழ்க்கைச் சுருங்கி, மரணப் புள்ளியில் சங்கமித்து, புதைகுழியில் தனிமையில் தள்ளப்பட்டு, இவ்வாறே , சத்திய குர்ஆனும் , சரிந்திடா இறைத்தூதர் இயம்பிச் சென்ற அடையாளங்களினூடாக அனைத்து உயிரினங்களும், ஏனைய பிற படைப்புக்களும் பூண்டோடு அழிக்கப்படும். அதன் பின் ஆரம்பிக்கும் இறைமை மிக்க இறைவனின் வீரியமிக்க விசாரணைகள்….!
ஆண்கள் எண்ணிக்கை குறைந்து பெண்கள் எண்ணிக்கை பெருகும்!
பிறப்புவிகிதங்கள்,விபத்துக்கள், போர்க்காலமரணம் இன்னபிற காரணிகளால், அண்கள்எ ண்ணிக்கைகுறைந்து, பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காண்கின்றோம். அண்ணலார் (ஸல்) அவர்களின்ஒருநபிமொழிப்படி, ஒரு ஆணை நாற்பத பெண்கள் வரை இச்சை கொண்டு பின்தொடர்வார்கள் என்பது இன்றும் நடப்பதைக் காண்கின்றோம். திரைப்பட மற்றும் விளையாட்டுத் துறைகளில் இவை சகஜமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
விபச்சாரமும் மதுப்பழக்கமும் பெருகும்!
இன்று அசாதாரணமாகிவிட்டன.
விளக்குப் பகுதிகளை ஏற்படுத்துகின்றன. மதுக்கடைகளை தம் சொந்த பொறுப்பில் நடத்தி அவற்றில் பார் வசதிகளும் தந்து நாகரிக பெயர்களில் காட்டுமிராண்டித்தனத்தகை; கட்டவிழ்த்து விடுவதைக் காண்கின்றோம்.
செல்வம் பெருகும்!
ஆம்!அன்று குடிசைவாசிகளாக இருந்தவர்கள் இன்று கோபுரங்களில் அமர்ந்து அன்னாந்து பார்க்கும் அளவுக்கு செல்வம் மக்களிடையே பெருகிவிட்டது. வணிகத்துக்காக வெற்றிடம் தேடி செல்லும் நிலையில் இருந்த அரபுமக்கள் இன்று தம்மிடத்துக்கே மக்களை அழைத்து வேலை தரும் அளவுக்கு அவர்களிடத்தில் செல்வம் பெருகி விட்டிருக்கின்றது.
Arabic
English
Spanish
Russian
Romanian
Hindi
Tagalog
Bengali
Sinhalese
Nepali


