மனத்தில் மட்டுமல்ல கறை..! உடையிலும் உள்ளது குறை..!!

Sara-Chaudhry-6டை மனித கற்புக்கு புறப்பாதுகாப்பு அம்சம்.,!அதனை கண்ணியப்படுத்துவது மனிதருக்கு அவசியம்..!!மனத்துக்கு என்றும் தேவை கட்டுப்பாட்டு கடிவாளம்..!அதனை முன்னெடுத்துச் செல்ல கண்ணிய ஆடை அத்தியாவசியம்..!!
ஆடை என்பது பல்வேறுவிதமான வியாக்கியானங்களைக் கொண்டுள்ள பிரதான தேவை! அது நாகரிகத்தின் வளர்ச்சிக்கான, மனிதப் பண்பாட்டை விளக்கும் அத்தியாவசிய குறியீடு! ஆனால், ‘அந்த ஆடையே ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கும், பலாத்காரத்துக்கும் ஆளாக்கிட காரணம்’ என்கிற கருத்து, படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களிடமும் இருக்கிறது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமும் புரையோடிப் போயிருக்கும் இந்த எண்ணத்துக்கும் எதார்த்த நிலைக்கும் உள்ள தொடர்பை காணின் குறை மனத்திலா.. ஆடையிலா என்பது விளங்கும்.
இன்று ஆபாசத்துக்கும் மகளிர் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கும் பிரதானமாகக் கொள்ளப்படும் திரைப்படத் துறையையே எடுத்துக்கொள்ளுங்கள். 1940-களில் வந்த படங்களைப் பார்த்தால்… தமிழ்நாட்டுப் பெண்கள்கூட தலையில் முக்காடு போட்டு இருப்பார்கள். அதற்காக அன்று பெண்கள் மேல் வன்முறை நிகழவே இல்லை என்று சொல்லிவிட முடியாது.
‘ஓர் ஆண்,தான் சிறு வயது முதலே வளரும் குடும்பச் சூழலும், சுற்றுப்புறமும், கல்விச் சாலையும், தொடர்பு சாதனங்களும் ஒரு பெண்ணைப் பற்றி ஏற்படுத்தும் மதிப்பீடுகள், பிற்காலத்தில் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது அவள் குறித்த நிலையை முடிவு செய்யும். எண்ணம்தான்

பாலியல் பலாத்காரத்துக்கும், வன்முறைக்கும் தூண்டுதல் என்பது சரிதான்..!ஆனால் அந்தத் தூண்டுதலுக்கு தூண்டில் போடுவது எது..?
தனிமனித ஒழுக்கம் சரியாக அமைந்துவிட்டால்.., எந்நிலையிலும் ஒருவன் தரம்தாழமாட்டான்.ஆனால், ஒழுக்கமாயிருப்பினும் அவனது இயல்பான உணர்வுகளை, கட்டுக்கு மீறிய ஒரு மிருக எண்ணத்தைக் கொண்டு வருவது எது என்பதை சிந்திக்க வேண்டும்.
”ஆள் பாதி ஆடை பாதி என்பது உண்மை. உடலின் பெரும்பகுதி தெரியும்படி ஒரு பெண் வரும்போது, அவளுடைய அந்த நடத்தையைக் காரணப்படுத்தி யாருமே துர்ச்சிந்தனையைக் கொணருவதில்லை.காரணம், ஆண்களுக்குள்ளும் ஒழுக்கம், சுயகட்டுப்பாடு உண்டு.ஆனால்,நிலைமை கட்டுக்கடங்காது போவது இயற்கையாக ஆணுள் இருக்கும் உணர்வுகளாலும், அந்த பெண்ணின் ஆடையினாலும்தானே..!
ஒரு பெண் தன் உடல் பாகங்கள் தெரியும்படி உடை உடுத்தி வரும்போது, ஒரு ஆண் கிளர்ச்சி அடைவான்” என்பது மனநல மருத்துவத்தின் கூற்று!’ஒரு பெண் கவர்ச்சியாக உடை உடுத்தி வரும்போது அதனைப் பார்க்கும் ஆணின் ‘லிம்பிக் சிஸ்டம்’ அவனுடைய உணர்ச்சியைத் தூண்டும்; இது இயற்கையான விஷயம்.
ஒரு பெண் தன் உடல் பாகங்கள் தெரியும்படி உடை உடுத்தி வரும்போது, ஒரு ஆண் கிளர்ச்சி அடைவது ஹார்மோன்களின் கைங்கர்யம்.மனதுக்கு ஆடை என்பது அதிமுக்கியம்.ஆனால், அது தனிமனித ஒழுக்கம்.உடலுக்கும் நல்ல ஆடை வேண்டும். இது சமூகம் சார்ந்த ஒழுக்கம்.
எவ்வளவு நாகரீகம் என்று கூறி கொண்டாலும், மகளிருக்கு உடை ஒரு கண்ணியத்தையும்,மரியாதையையும் கொடுக்க வேண்டும்,அதுதான் ஒரு பெண்ணுக்கு அழகு,கம்பீரம்,பெண்மை எல்லாமே..!தன் மகளோ அல்லது குடும்பத்தினரோ அரைகுறை ஆடையணியும் போது,குறைந்தபட்ச ஆட்சேபணையாவது செய்வார்கள் என்பது திண்ணம்.தனிமனித பாதுகாப்பு என்பது முதலில் அவனி(ளி)டமிருந்தே தொடங்குகிறது. அதற்கான ஏற்பாட்டில், அவர்கள் அணியும் உடையும் ஒரு பகுதி. ’60 வயதான பள்ளி ஆசிரியர், 6 வயது பெண் குழந்தையை பாலியல் வக்கிரத்துக்குள்ளாக்கி இருக்கிறார்’- இது மனம் சார்ந்தது.., அந்த குழந்தையின் ஆடை சார்ந்தது அல்ல என ஒருவர் வக்காலத்து வாங்கினால், அது பொருத்தமற்ற ஒப்பீடு!
எப்படிப்பட்ட சமூகத்திலும் வக்ர எண்ணம் கொண்டவர்கள் இருந்தே தீருவார்கள். அவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும். ஆனால் மற்றவர்களுக்கும் வக்ர எண்ணம் வராமலிருக்க உடையுடன் பழக்க வழக்கங்கள் உதவும். இது இருபாலருக்கும் பொருந்தும்.
ஆடைகளால் ஆண்களிடத்தில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று சப்பைக்கட்டு கட்டும் கூட்டத்தினருக்கு ஒரு யதார்த்த வினா..!வீட்டுப் பணியாட்கள் குனிந்து வேலை செய்யும்போதும், பெண்கள் உடற்பயிற்சி செய்யும்போதும், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்கள் விளையாடும்போதும்,ஆண்கள் வெறித்துப் பார்ப்பது போல திரைப்படங்கள் உள்ளிட்ட ஊடகங்களில் ஏன் காட்டுகிறார்கள்? இயக்குனர்களும் ஊடகப் பொறுப்பாளர்களும் பெரும்பாலும் ஆண்கள் தானே!அவர்கள் ஆண்களின் மனநிலையைத் தானே பிரதிலபலித்திருப்பார்கள்..? ஆபாச நடிகைகள் ஏன் பிரரபலமானார்கள்?சில்க் ஸ்மிதாவுக்கு ஏன் இத்தனை ஆண் விசிறிகள்? சானியா மிர்ஸவுக்கு ஏன் நிறைய கண்டனங்கள் வந்தன? பெண்களின் உடல் பாகங்கள் தெரியும்படி உடையணிந்தால் ஆண்கள் கிளர்ச்சி அடைவார்கள் என்பதையே இவை உணர்த்துகின்றன. மனக்கட்டுப்பாடு உள்ள ஆண்கள் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வார்கள் என்பதே நிஜம்.
அதனால்தான், முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒரு அந்நியப் பெண்ணைப் பார்க்கும்போது முதல் பார்வை உன்னுடையது, அடுத்த பார்வை சாத்தானுடையது!
இயற்கையாக எடுத்துக் கொண்டாலும்,மனித உடலமைப்பில் ஆணை விட பெண் அதிகமான அளவு உடை அணிய வேண்டும் என்பது யதார்த்தம். அனால் ஆண்கள் முழு கால் சட்டையும் முழுக்கை சட்டையும் அணியும் பொழுது பெண்கள் நாகரீகம் என்ற பெயரில் ஆடையில் மிச்சம் பிடிப்பது ஏன்?
பல திரைப்படங்களில்.,விளம்பரங்களில்…, பெண்களைப் பயன்படுத்திக் கொள்ளும்விதம் மற்றும் ஃபேஷன் ஷோக்களை பார்க்கும்போது பெண்கள், நாகரீகம் என்ற போர்வையில் கோமாளிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது அப்பட்டமாக புரிந்தாலும் அதனை எப்படி புரியவைப்பது என்பதுதான் சமூகத்தின் ன் உள்ள பெரிய குழப்பம்.
உண்மையில், ஆடைகளில் அலட்சியமாக இருக்கும் பெண்கள் கட்டுப்பாடுகளை விரும்பாதவர்களாகவும் கண்ணியமாக உடுத்தும் பெண்கள் சுயகட்டுப்பாடுடையவர்களாகவும் தெரிகிறார்கள். ஆடையும் நடத்தையும் அது ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி கண்ணியம் காக்கும்படி இருக்கவேண்டும் அதுதான் நாகரீகம்.
ஆண்களின் மனவக்கிரத்துக்கு தண்டனை இருக்கின்றது.வக்கிரத்தைத் தூண்டும் ஆடைகளை அணியும் பெண்கள்…?
ஆடைக் குறைப்புக்கும் காமப்பார்வைக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்வர்களைக் கண்டால் ஆச்சரியாமாயிருக்கிறது. காம உணர்வைத் தூண்டுவது கவர்ச்சியான அங்கங்கள் என்பது பெண்களுக்கே தெரிந்த விஷயம்தான் ஆனால் அவர்கள்தான் அதில் அங்கலாய்க்கின்றார்கள்.
ஒரு பெண் தாமாகவே வெளித் தெரியும் அங்கங்கள் பிரதானமாக தெரியும்படி உடை உடுத்தினால், அப்பெண்ணின் தனித்தன்மையை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள் என்று அர்த்தம். அதே சமயம், அங்கங்களை பிரகடனப் படுத்தி உடை உடுத்தி தன்னை வெளிப்படுத்துவாளேயானால், அதற்குரிய முக்கியத்துவம்தானே கிடைக்கும். ..!
சமூகம் எப்படி வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் இயற்கை என்று ஒன்று இருக்கிறது.
தாரணத்துக்கு உங்கள் ஊரில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துவிடுகின்றது. இது குறித்து காவல்துறை ‘திருடர்கள் எங்கும் எப்போதும் வராலாம்… எனவே நீங்களும் உங்கள் பங்குக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்… கூடுமானவரை அதிகமாக நகை அணிந்துதனியே செல்லாதீர்கள்’ என்கின்றார்கள்.
‘தவறு நகை அணியும் பெண்களிடம் இல்லை, திருடர்களிடமும், அவர்களை திருடர்களாக்கிய திருட்டு சமூகத்திடமும்தான் இருக்கிறது. எனவே அவர்களை திருந்த சொல்லுங்கள்… நாங்கள் நிறைய நகை அணிந்து தனியாகத்தான் செல்வோம்’ என்று நீங்கள் கூறினால்,நஷ்டம் யாருக்கு..?உங்களுக்குத்தானே..!
உடல் தெரிய உடையணிந்தால் ஆண்கள் கிளர்ச்சி அடைவார்கள் என்பது இயற்கை!”குடிபோதையில் இருக்கும் ஆணின் சிறுமூளை கட்டுப்பாட்டை இழந்து இருக்கும்’ அப்படிப்பட்ட ஆளிடம் போய் சட்டம் பேசிக்கொன்டிருப்பீர்களா, இல்லை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்ணியமாக உடை அணிவீர்களா?
இப்போது பாருங்கள்..!இஸ்லாமிய முறைப்படி உடை உடுத்தும் பெண்களை ஆண்கள் கண்ணியமாகப் பார்ப்பதை நம் நாட்டிலேயே கண்கூடாகக் காணலாம்!அதனால்தான் இஸ்லாமிய ஆடையை எவரும் கண்ணியக் குறைவாகக் கூறுவதில்லை..!மாறாக தடைதான் ஏற்படுத்துகின்றார்கள்..!

(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே, அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் நன்கு தெரிந்தவனாக இருக்கின்றான். மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக் கட்டும்; தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்; அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும்.4:31-32

பெண்களுக்கு ஆதரவளிக்க வேண்டியதுதான், அதற்காக பெண்களே வெறுக்கும்படி உடை உடுத்துவது சரியா என்ன..?எனவே மனதுக்கு ஆடை அவசியம்..!அந்த அவசியத்தை அழகாக்க கண்ணிய ஆடை அத்தியாவசியம்..!

Related Post