மதுவுடன் சல்லாபம்..!வாழ்வில் தள்ளாட்டம்.!!

மெல்ல தன் கால் பரப்பி, மதியிழக்கச் செய்து பல மாது மேல் அவாவுரச் செய்வது மது. மீளாத்துன்பம் தந்து மாச்சர்ய வதனம் தேடும் இலக்கணம் பெற்றது அது.தன்னிடம் உள்ள பராக்ரமதால், மாற்றான் குட்டிiயையும் தீண்டச் சொல்லும்,யார் சொல்லும் கேளா அது ஒரு செவிட்டுக் காது. அதன்பால் வீழ்ந்துவிட்ட நபருக்கு வாழ்வில் நிம்மதி ஏது..

மெல்ல தன் கால் பரப்பி, மதியிழக்கச் செய்து பல மாது மேல் அவாவுரச் செய்வது மது. மீளாத்துன்பம் தந்து மாச்சர்ய வதனம் தேடும் இலக்கணம் பெற்றது அது.தன்னிடம் உள்ள பராக்ரமதால், மாற்றான் குட்டிiயையும் தீண்டச் சொல்லும்,யார் சொல்லும் கேளா அது ஒரு செவிட்டுக் காது. அதன்பால் வீழ்ந்துவிட்ட நபருக்கு வாழ்வில் நிம்மதி ஏது..

மெல்ல தன் கால் பரப்பி, மதியிழக்கச் செய்து பல மாது மேல் அவாவுரச் செய்வது மது. மீளாத்துன்பம் தந்து மாச்சர்ய வதனம் தேடும் இலக்கணம் பெற்றது அது.தன்னிடம் உள்ள பராக்ரமதால், மாற்றான் குட்டிiயையும் தீண்டச் சொல்லும்,யார் சொல்லும் கேளா அது ஒரு செவிட்டுக் காது. அதன்பால் வீழ்ந்துவிட்ட நபருக்கு வாழ்வில் நிம்மதி ஏது..?
ஒழுக்கமும் வீரமும் நிறைந்த இளைஞன் ஒருவன் முக்கிய வேலையாகக் காட்டினூடே சென்றுகொண்டிருந்தான். அவனைப் பாதை மாற வைக்கவேண்டும், தவறு செய்யத் தூண்டவேண்டும் என்று விரும்பிய சாத்தான் காட்டில் அழகிய இளம்பெண் ஒருத்தி, ஒரு சிறு குழந்தை மற்றும் ஒரு புட்டி மதுவுடன் வழியில் காத்துக்கொண்டிருந்தது. அவனை வழிமறித்து, ‘நீ மேற்கொண்டு பயணம் செய்ய வேண்டுமானால், இந்தப் பெண்ணை பலாத்காரம் செய்யவேண்டும், அல்லது இந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டும். இந்த இரண்டும் செய்ய விரும்பவில்லை என்றால் குறைந்த பட்சம் இந்த மதுவையாவது அருந்த வேண்டும். இல்லையெனில், நான் உன்னை விடமாட்டேன்.’ என்று சொன்னது.
இளைஞன் கொஞ்சம் யோசித்தான். அவன் சென்று கொண்டிருக்கும் பணியோ அவசரமானது, முக்கியமானது. எனவே இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றை அவன் செய்துதான் ஆகவேண்டும். ஒழுக்கம் நிறைந்தவன் ஆதலால், அவன் பெண்ணை பலாத்காரம் செய்வதை அவன் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. ஒரு வீரனால் ஒன்றுமறியா ஒரு பச்சிளங்குழந்தையை எப்படிக் கொல்ல இயலும்? எனவே மதுவை அருந்திவிடுவதே கொடுக்கப்பட்ட மூன்றில் எளியது என்று அவனுக்குத் தோன்றியது. சாத்தானிடம் அவன் தன் முடிவைச் சொல்லிவிட்டு, மதுப்புட்டியை எடுத்து அருந்தினான். மது உள்ளே சென்றதும், புத்தி தடுமாறியது. போதையில் மோகவெறி ஏறவே அப்பெண்ணைப் பலாத்காரம் செய்தான். இடையில் குழந்தை அழுது, அவனைத் தொல்லை செய்தது. உடனே அவன் வாளால் அக்குழந்தையை வெட்டிக் கொன்றுவிட்டான். சாத்தான் தன் வேலை முடிந்த திருப்தியுடன் சென்றது.
மதுவின் தீமையை விளக்கக் கூறப்படும் கதை இது. மதுவின் பிடியில் சிக்கிய மனிதர்கள் தமது மனநலம், உடல் நலம் இரண்டையும் இழப்பதோடு, சமூகத்தில் தனக்குள்ள மதிப்பையும் இழக்கின்றனர்.
மது தோன்றிய வரலாறு
மதுவின் ஆரம்பம் குறித்து ஆதாரப்பூர்வ தகவல்கள் துல்லியமாக இல்லையென்றாலும், 8,00 ஆண்டுகளுக்கு முன்னர் ஜார்ஜியாவிலும்,6,100 ஆண்டுகளுக்கு முன்னர் அர்மீனியாவிலும், திராட்சை இரச மது தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.2006-ல் டாக்டர்.மைக் கவர்ன் என்பார் மேற்கொன்ட தொல்லியல் சார்ந்த வேளாண் ஆய்வில் ஏறக்குறைய 110 வகை திராட்சை சாகுபடியாளர்களுடனான தீவிர ஆராய்ந்துரையாடலில் மதுவின் பூர்வீகம் ; ஜார்ஜியாவின் ஷூலாவாரி எனும் இடத்தில் வைக்கப்ட்டிருந்த மது ஜாடிகளில் போண் முடிந்தது.
அதன் பின்னர் இதன் தொடர்ச்சி, பண்டைய எகிப்து,ஏதென்ஸ் கி.மு. 500-ஆம் ஆண்டின் இந்திய சிந்து சமவெளி நாகரிகம் ஆகியவற்றில் புகுந்து மதுவின் வரலாற்றைத் தெரிவிக்கின்றன.இந்தியாவைப் பொறுத்த வரையில், கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த சந்திரகுப்பத மவுரியரின் முதல் அமைச்ராக இருந்த சாணக்கியரின் எழுத்துக்களிலிருந்து மதுவுக்குரிய வரலாறு கிடைக்கப் பெறுகின்றது.
2003-ஆம் ஆண்டின் தொல்லியல் அகழ்வாராய்ச்சியின்படி, அரிசியுடன் கல்ந்த திராட்சை மதுவின் தோற்றிடமாக சீனா குறிப்பிடப்படுகின்றது.
ரோமனிய சாம்ராஜ்யமும் மது கரைபுரண்ட இராஜ்யமாக இருந்தது வரலாறு அறிந்ததே.
எனினும், மது தோன்றிய வரலாறு குறித்து ஒரு சுவாரஸ்ய கதையும் வரலாற்றில் உலா வருகின்றது. வழக்கம்போல்,இதன் மூலகர்த்தாவாக இருந்தது பெண் என்பது ஆச்சர்யமான வியப்பு
திராட்சைக்குப் பெயர் போன பண்டைய பாரசீக நாட்டில், வழக்கம்போல அதனைப் பதப்படுத்துவதற்காகக பெரும் பெரும் சாடிகளில் சேகரித்து வைத்திருந்தார்கள்.ஒரு நாள் அவை புளித்து,அழுகி காடி போன்ற திரவமாகிக் கசிந்தது.இது விஷமாக மாறிவிட்டதோ என எண்ணி அவற்றை அப்புறப்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.ஊழியர்கள் அதனை சாலையோரக் கழிவில் வீசியெறிந்தனர்.வாழ்வில் விரக்தியடைந்து தற்கொலை நெய்துகொள்ள நாடிய ஒரு மூதாட்டி,அது விஷம் என்பதால், உயிர் மாய்த்துக்கொள்ள அதனை அருந்தினாள்.ஆனால், உயிர் போவதற்குப் பதில், அவள் உடலில் உற்சாகமும்,தெம்பும் பிறந்தது.மீண்டும்..,மீண்டும் அதனை அருந்தியும் மரணத்க்குப் பதில் மயக்கம் வந்தது.மயக்கம் தெளிந்து அரசவைக்கு சென்று அவள் விஷயத்தை சொல்ல.., அரசவைப் பிரதானிகளும் அதனை அருந்து.., உற்சாகம் கரைபுரள.., பிறந்தது மது.., அதன் பொருளில் ஏற்பட்டது அதற்குப் பெயர் வைன்-மகிழ்ச்சி.
‘எனக்கு அலுவலகத்தில் பிரச்னை’, ‘வீட்டில் குழப்பம்’, ‘என் துயரத்தை மறக்கக் குடிக்கிறேன்’, ‘கடினமான உழைப்பு,உடல் அலுப்பை மறக்கக் குடிக்கிறேன்’ என்பன, மது அருந்துபவர்கள் சொல்லும் பொதுவான கவைக்குதவாத காரணங்கள்!ஆனால் உண்மையில் அவரது மனம் அந்தப் போதையின் பாதையில் செல்ல விரும்புகிறது.இதுவெல்லாம் அதற்கு ஒரு நொண்டிச் சாக்கு. இன்னும் சொல்லப்போனால், மதுவின் மயக்கத்தில் ஆழ்ந்திருக்கையில் அவர் மறந்திருக்கும் பிரச்னைகள்,நனவுலகிற்கு வந்தவுடன் இன்னும் அதிகமாகத் தாக்கச் செய்யும் என்பதே உண்மை. அவரை மேலும் தனிமையாய் உணரச் செய்யும். அதிகமாக மனச் சோர்வையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். மது கொஞ்சம் கொஞ்சமாக அவரது சிந்தனைத் திறனை, மூளையின் செயற்பாட்டை மழுங்கடிக்கும். உடலிலும் மனத்திலும் மதுவினால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்று தெரிந்துகொண்டால் நிச்சயம் அதன் பிடியிலிருந்து ஒருவர் விலகிக் கொள்ள முடியும். நமது நெருங்கிய உறவோ அல்லது மற்றும் நண்பர்களோ இதற்கு ஆட்பட்டிருந்தால் அவர்களுக்கும் எடுத்துரைத்து அவர்களை மீட்க முயலலாம்.
மது கிளர்ச்சி ஏற்படுத்தி உணர்வூட்டும் பொருள் அல்ல. மாறாக, உணர்வை, ஆன்ம பலத்தை, உடலை அழிக்கும் ஒரு நச்சுப் பொருள். மது அருந்துவதால் சுதந்தர உணர்வு தோன்றுகின்றது, அதிக ஆற்றல் கிடைக்கின்றது, களைப்பு நீங்கி உற்சாகம் பிறக்கின்றது என்று பலரும் தவறான நினைப்பில் திளைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இளமைப் பருவத்தில் மதுவால் ஏற்படும் பாதிப்பு அதிகம் தெரிவதில்லை என்றாலும் பிற்காலத்தில் மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். போதையூட்டும் மது நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுவதால் அதனைக் குடித்தவுடன், சிறிது நேரத்திற்கு உற்சாகம் பிறக்கச் செய்கின்றது. குதூகலிப்பையும் ஏற்படுத்தி மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் நாளடைவில் எல்லா நோய்களையும் கொடுத்து சிறிது சிறிதாக அவரை அழிக்கிறது.
மது உடல் நலத்தைக் கெடுப்பதோடு சமுதாயச் சீர்கேடுகளையும் ஏற்படுத்துகிறது.இதனால்தான்,மதுவின் தீமைகளை உணர்ந்த உலக சுகாதார நிறுவனம் ‘மது நீண்ட நாளைய நலக்கேடு என்றும், தீய செயல்’ என்றும் கூறுகிறது.
எவ்வித ஏற்றாழ்வுகளுமின்றி மதுவிற்கு அடிமையாகின்றவர்கள் சமூகத்தின் அனைத்துத் தரப்பிலும் இருக்கச் செய்கின்றார்கள்.ஏழைகள், கூலித் தொழிலாளர்கள், கடின உழைப்பாளிகள், கவலைப்படுகின்றவர்கள், மன நிம்மதி இழந்தவர்கள் போன்றவர்களே, அதிகம் மது அருந்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சந்தோசத்திற்காக குடிக்க ஆரம்பித்தவர்கள் பிறகு மதுவிற்கு அடிமையாகி விடுவதோடு குடும்பத்தையும் துயரத்தில் ஆழ்த்தி விடுகின்றார்கள். குடிப் பழக்கம் உள்ள வீட்டுக் குழந்தைகளும் நாளடைவில் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி கெட்டுப் போகும் நிலை ஏற்படுகிறது.

மது ஏற்படுத்தும் உடலியல் பாதிப்புக்கள்

உற்சாகம் தருவதாகத் தவறாகக் கணிக்கப்படும் மது உடல்-மனரீதியாக ஏற்படுத்தும் பாதிப்புக்கள் ஏராளம்.மது

மெல்ல தன் கால் பரப்பி, மதியிழக்கச் செய்து பல மாது மேல் அவாவுரச் செய்வது மது. மீளாத்துன்பம் தந்து மாச்சர்ய வதனம் தேடும் இலக்கணம் பெற்றது அது.தன்னிடம் உள்ள பராக்ரமதால், மாற்றான் குட்டிiயையும் தீண்டச் சொல்லும்,யார் சொல்லும் கேளா அது ஒரு செவிட்டுக் காது. அதன்பால் வீழ்ந்துவிட்ட நபருக்கு வாழ்வில் நிம்மதி ஏது..

மெல்ல தன் கால் பரப்பி, மதியிழக்கச் செய்து பல மாது மேல் அவாவுரச் செய்வது மது. மீளாத்துன்பம் தந்து மாச்சர்ய வதனம் தேடும் இலக்கணம் பெற்றது அது.தன்னிடம் உள்ள பராக்ரமதால், மாற்றான் குட்டிiயையும் தீண்டச் சொல்லும்,யார் சொல்லும் கேளா அது ஒரு செவிட்டுக் காது. அதன்பால் வீழ்ந்துவிட்ட நபருக்கு வாழ்வில் நிம்மதி ஏது..

மூளையையும், நரம்பு மண்டலத்தையும் பாதித்து உடல் நலத்தை சீர்குலைக்கிறது.
மதுவை அருந்தியவுடன் மது அருந்துபவர்களின் இரத்தத்தில் நேரடியாக ஆல்கஹால் கலந்துவிடுகிறது. மூளைக்கு ஆல்கஹால் கலந்த இரத்தம் செல்கையில் உடல் உறுப்புகளை இயக்கும் மூளை நரம்புகள் சரிவரச் செயல்படுவதில்லை. எனவே நடை தடுமாறுகிறது. நாக்குக் குழறுகிறது. கண்பார்வை விரிவடைவதால் பார்வை மசமசப்பாகிறது. உடல் இயக்கங்களை ஒருங்கிணைப்பதும், சிந்திப்பதும் கடினமாகின்றன.எனவே மறதி ஏற்படுகிறது.
தொடர்ந்து மது அருந்துகையில், மேலும் நிலைமை மேலும் மோசமாகிறது. இரத்தத்தில் கலந்திருக்கும் ஆல்கஹாலின் அளவு அதிகரிக்கிறது. அதிக அளவு ஆல்கஹாலை உடலால் உடனடியாக ஏற்றுச் சீரணித்துக்கொள்ள இயலுவதில்லை. இரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை டீடழழன யுடஉழாழட ஊழரவெ (டீயுஊ) என்று குறிக்கின்றனர். இது 0.10 அளவு வரை இருக்கும்பொழுது பெரிய ஆபத்து எதுவும் நேரிடாது. ஆனால், தொடர்ந்து மது அருந்துபவர்கள் உடலில் இது அதிகரித்துக் கொண்டே இருக்கும். இரத்தத்தில் மதுவின் அளவு மிக அதிகரிக்கையில் கோமா, மூச்சடைப்பு இவை ஏற்படும் வாய்ப்புகள் மிக உண்டு.
தொடர்ந்து மது அருந்துபவர்கள் உடம்பில் ஆல்கஹாலுக்கு எதிரான தாங்கும் சக்தி (வுழடநசயnஉந) அதிகரிக்கிறது. அதாவது குறைந்த அளவு ஆல்கஹால் போதையை ஏற்படுத்துவது இல்லை. எனவே மேலும், மேலும் குடிக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டுவிடுகிறது. அதிக அளவு மது உடல் உறுப்புகளுக்கு சேதம் ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்ல, போதையின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அதிக அளவில் விபத்துகளுக்கு உள்ளாகின்றனர். கீழே விழுதல், தீ விபத்து, நீரில் மூழ்கிவிடுதல், மோட்டார் வாகனங்களை ஓட்டும்பொழுதும், இயந்திரங்களை இயக்கும்பொழுதும் விபத்துக்குள்ளாகுதல் இவை எல்லாம் மது அருந்துபவர்களுக்கிடையேதான் அதிகம்.
உடலில் அதிகமாகும் ஆல்கஹாலின் அளவு நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்துவிடும். சிறு சிறு உடல் உபாதைகளுக்கு எதிராகப் போராடும் சக்தியைக் கூட உடல் இழந்துவிடுகிறது. சளித்தொல்லை அதிகமாகிறது. உணவில் இருந்து சத்துக்களை உறிஞ்சி உடலுக்குத் தரவேண்டிய உறுப்புகள் மெல்ல மெல்லச் செயல் இழக்கின்றன. இதன் காரணமாக உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. ஆனால், மதுவில் இருக்கும் கலோரிகள் உடனடியாக உடலில் கலந்துவிடுவதால், உடல் பருமன் நாளடைவில் மிகவும் அதிகரித்துவிடக் கூடும். உடலில் உள்ள நீர்ச்சத்தினை மது குறைக்கிறது. இதனால் தோல் சுருங்கியும் வறண்டும் போகத்தொடங்கும். அது மட்டுமின்றி, இரத்த நாளங்கள் சுருங்கவும், அவற்றில் வெடிப்புகள் உண்டாகவும் மது காரணமாகி விடுகிறது.
அதிக அளவு மது அருந்துவது, அல்லது தொடர்ந்து மது அருந்துவது, நீண்ட காலப் பாதிப்புகளை ஏற்படுத்தும். மூளையில் செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழியத்தொடங்கும். கல்லீரல் மற்றும் குடலில் புண் உண்டாகும். இதனால் செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிற்று வலி ஏற்படலாம். மஞ்சள் காமாலை நோயும் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இரத்தக்கொதிப்பு அதிகரிக்கும். நரம்பு மண்டலப் பாதிப்புகள், சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படலாம். மாரடைப்பு, புற்றுநோய் இவற்றின் தாக்குதலுக்கும் ஆளாக நேரிடலாம்.
மது குடிப்பதினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கல்லீரல் இறுக்க நோய் (ஊசைசாழளளை) ஏற்படுகிறது. பின்னர் கல்லீரல் புற்று நோய் ஏற்படுவதற்கும் காரணமாகிறது.மது வயிற்றுக்குள் செல்லும் போது குடல் பாதிக்கப்பட்டு இரைப்பை சுழற்சி (புயளவசவைளை) ஏற்பட்டு குடலில் புண் ஏற்படுகிறது.வாய், தொண்டை, உணவுக் குழாய்களில் புற்றுநோய் ஏற்பட வழி வகுக்கிறது.தோளிலும், காலிலும் தசை நார் இழப்பு ஏற்படுகிறது. உடலில் சர்க்கரை சத்தைச் சீர்படுத்தும் கணையம் பாதிக்கப்படுகிறது.
அடிக்கடி மறதி ஏற்பட்டு சோர்வு ஏற்படும்.கோர்ஸா காஃப்ஸ் சின்ட்ரோம் (முழசளயமழகக’ள ளுலனெசழஅந) என்ற மூளை பாதிப்பு நோய் ஏற்பட வழி வகுக்கிறது.உயிர்சத்து ஹபி’ குறைவால் வெர்னிக் சின்ட்ரோம் (றுநசnமைந’ள ளுலனெசழஅந) என்ற நோய் ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது.மது அருந்துபவர்களுக்கு மன நோய்கள் பல ஏற்பட்டு மன நோயாளிகளாகி விடும் வாய்ப்பு அதிகமுண்டு.மது அருந்துபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவதால் தொற்று நோய்கள் வந்தால் எளிதில் தீராது.
இன்னும் எத்தனையோ பிரச்சனைகள். அத்தனையும் மதுவினால் ஏற்படுவதே. மதுப்பிரியர்களே. முதலில் மதுவை குடிப்பீர்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மது மனிதனைக் குடிக்கும் என்பது மட்டுமே உங்க ள் நினைவில் நிற்கப்படும்.
மதுப்பழக்கம் ஏற்படுத்தும் நரம்புத் தளர்ச்சி, மன ரீதியான பிரச்சனைகள், குழப்பம், தூக்கமின்மை போன்றவைகளைக் குணப்படுத்த தரப்படும் மருந்துகள் எதுவும் நிரந்தர தீர்வை தருவதில்லை. எப்போதும் எரிச்சலுடன் கூடிய மனநிலையுடனும் தலைவலி, காலையில் எழுந்த உடன் தலைச்சுற்றல், கண்களில் கூச்சம் போன்ற தொல்லைகளுக்கு மருத்துவர்கள் தரும் மருந்துகள் மறுவாழ்வுக்கு வழிவகுத்தாலும் பாதிப்புக்களை பழைய நிலைக்கு இட்டுச் செல்வதில்லை.

Related Post