மகளிருக்கெதிரான வன்கொடுமையை அழிக்க …!

 -AM

மகளிருக்கெதிரான வன்கொடுமையை அழிக்க

மகளிருக்கெதிரான வன்கொடுமையை அழிக்க

களிருக்கெதிரான வன்கொடுமையை அழிக்க உலகம் பல்வேறு வழிமுறைகளை முன்வைக்கின்றது எனினும், அவை எதுவும் முழ பயன்தரத்தாக்கதாக அமையவில்லை. மாறாக, இஸ்லாம் அதற்கென காட்டம் வழிமுறைகள் மிக அழகிய திர்வுகளை முன்வைக்கின்றன.

ங்களுடைய பெண்களில் எவர்கள் மானக்கேடான செயல்புரிந்துவிடுகின்றார்களோ, அவர்களின் மீது குற்றத்தை நிரூபிக்க உங்களிலிருந்து நால்வரைச் சாட்சியாகக் கொண்டு வாருங்கள். அவர்கள் சாட்சியமளித்துவிட்டால், அப்பெண்களுக்கு மரணம் வரும் வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஏதேனுமொரு தீர்ப்பை வழங்கும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்! அதே செயலை உங்களில் இருவர் செய்துவிட்டால், அவ்விருவருக்கும் தண்டனை அளியுங்கள். பிறகு அவ்விருவரும் பாவ மன்னிப்புத் தேடித் தம்மைத் திருத்திக் கொண்டார்களாயின் அவர்களை விட்டுவிடுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் பாவ மன்னிப்புக் கோருதலை ஏற்றுக்கொள்ளக் கூடியவனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்.  நன்கு அறிந்து கொள்ளுங்கள்: அறியாமையின் காரணமாக, ஏதேனும் பாவச் செயலைச் செய்துவிட்டாலும் உடனடியாக எவர்கள் பாவமன்னிப்புக் கோருகின்றார்களோ அவர்களின் பாவ மன்னிப்பை ஏற்றுக்கொள்வதே அல்லாஹ்வின் பொறுப்பாகும். ஆகவே அத்தகையோரை நோக்கி அல்லாஹ் தன் கருணைப் பார்வையை மீண்டும் திருப்புகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவுடையவனாகவும் இருக்கின்றான். எவர்கள் தீய செயல்கள் புரிந்தவாறு இருந்து மரணம் நெருங்கும்போது ‘நான் இப்போது மன்னிப்புக் கோருகின்றேன்’ என்று கூறுகின்றார்களோ அவர்களுக்குப் பாவமன்னிப்புக் கிடையாது. மேலும் இறுதி மூச்சுவரை நிராகரிப்பிலேயே மூழ்கியிருப்பவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இத்தகையோருக்குத் துன்புறுத்தும் தண்டனையை நாம் தயார் செய்து வைத்துள்ளோம். இறைநம்பிக்கை கொண்டவர்களே! விதவைப் பெண்களுக்கு பலவந்தமான வாரிசுதாரர்களாய் நீங்கள் திகழ்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல! மேலும், அவர்களுக்கு நீங்கள் அளித்த மஹ்ரின் ஒரு பகுதியைப் பறித்துக் கொள்வதற்காக அவர்களைக் கஷ்டப்படுத்துவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல; அவர்கள் ஏதேனும் வெளிப்படையான இழிசெயலைச் செய்தாலேயன்றி! அவர்களோடு நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ நீங்கள் விரும்பாவிட்டாலும் பொறுமையைக் கைக்கொள்ளுங்கள். ஏனெனில், ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அல்லாஹ் அதில் பல நன்மைகளை வைத்திருக்கக் கூடும். நீங்கள் ஒரு மனைவிக்குப் பதிலாக வேறு ஒருத்தியை மனைவியாகக் கொண்டு வர நாடினால் நீங்கள் அவளுக்கு பணக்குவியலையே (மஹ்ராக) கொடுத்திருந்தாலும் கூட, அதிலிருந்து கொஞ்சம் கூட திரும்பப் பெறாதீர்கள். நீங்கள் அவதூறு கூறியும், வெளிப்படையாக கொடுமை இழைத்தும் அதனைத் திரும்பப் பெறுவீர்களா? சந்தேகமின்றி நீங்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து இன்பம் துய்த்திருக்கின்றீர்களே! மேலும் அந்த மனைவியர் உங்களிடமிருந்து உறுதியான ஒப்பந்தத்தையும் பெற்றிருக்கின்றார்களே! (அவ்வாறிருக்க) அப்பொருளை அவர்களிடமிருந்து எவ்வாறு திரும்பப் பெற முடியும்? மேலும், உங்கள் தந்தையர் மணமுடித்திருந்த பெண்களை நீங்கள் ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளாதீர்கள்! முன்னால் நடந்தது நடந்துவிட்டது. உண்மையில் இது ஒரு மானக்கேடான, வெறுக்கத்தக்க செயலாகும். கீழ்த்தரமான நடத்தையுமாகும்.

பெண்மைக்கு ‘மெடல்’ என்ற போதை ஊட்டப்பட்டு, அவளது அங்கங்களை அரைகுறை ஆடையில் ரசிக்கும் வித்தை தான் அரங்கேற்றப்படுகின்றது. ஜிம்னாஸ்டிக், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களில் பெண்களின் அங்கங்கள் ஆண்களின் கண்ணுக்கு விருந்தாகவே அமைகின்றன.

பெண் என்பவள் தாய்மையைச் சுமக்கும் ஒரு உன்னதமான படைப்பு. ஆண் என்னதான் விலை கொடுத்தாலும் அந்தப் பேற்றை அவனால் அடைந்து கொள்ள முடியாததொரு அற்புதப் படைப்பு. ஆனால்; அந்த தாய்மைப் பேற்றை உதறித் தள்ளி விட்டு, உலக நுகர்பொருள் பண்டமாக காட்சிப்படுத்தப் படுவதையும் ‘உரிமை’ என்று கூறப்படுகின்றது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த அழகிப் போட்டிகள் இப்பொழுது தெருவுக்குத் தெரு நடந்து வருவதைப் பார்க்க முடிகின்றது. முன்பு கன்னிப்பெண்?களுக்கு அழகிப் போட்டி நடந்தது. இப்பொழுது திருமணம் முடித்த பெண்களுக்கும் கூட அழகிப் போட்டி நடத்தப்படுகின்றது. இதுவும் உரிமை என்று கூறப்படுகின்றது.

இனி ஆட்சிப் பொறுப்பில் பெண்கள் அமர வேண்டும், ஆண்களுக்கு ஈடான சதவீதம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் குரல் கொடுக்கப்படுகின்றது. ஆட்சிப் பொறுப்பு, அதிகாரம் ஆகியவற்றில் பெண்கள் ஆண்களுக்கு இணையாக வலம் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஊட்டப்படுகின்றது. ஆனால், ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பெண்கள் ஆண் சீண்டலிலிருந்து எவ்வாறு பாதுகாப்புப் பெறுவது என்பது குறித்து அக்கறை காட்டப்படுவதில்லை.

மாண்புமிகு ஜெயலலிதா கூட இந்தப் பாலியல் சீண்டலில் இருந்து தவிர்ந்து கொள்ள முடியவில்லை. சட்டசபையிலேயே அவரது சேலை இழுக்கப்பட்டது என்று கவர்னரிடம் அவர் புகார் கொடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியது. ஒரு முதல்வருக்குத் தான் இந்த நிலைமை என்றில்லை.

ஒரு அதிகார வர்க்கத்தில் உயர்ந்ததொரு பதவியாகக் கருதப்படும் காவல் பணியில் உயர்அதிகாரியாகப் பணியாற்றியதொரு பெண் அதிகாரி, இன்னொரு ஆண் அதிகாரியின் பாலியல் சீண்டலினால் அவமானப்படுத்தப்பட்டார். நீதிமன்றப்படிகளில் அவர் ஏறியும் அவரால் அந்த அதிகாரியை எதுவும் செய்ய இயலவில்லை.

அரசியலில் பங்கெடுத்த ஒரு பெண் அதிகாரியின் முகத்தின் மீது திராவகம் ஊற்றி, அவரது முகத்தையே சிதைத்தனர்.

இது ஒருபுறமிருக்க ஆட்சியும், அதிகாரத்தில் உள்ளவர்கள் மட்டத்தில் தான் இந்தப் பிரச்னை என்றால், ஆன்மீக வட்டாரத்திலும் பாலியல் வல்லுறவுக்கு பெண்கள் உட்படுத்தப்படுகின்ற காட்சியை நாம் காண்கின்றோம். ஜெயேந்திரர் விவகாரத்தில் ஒரு பத்திரிக்கைத் துறையில் இருந்து கொண்டிருக்கின்ற பெண்மணியே அறிக்கை விடும் அளவுக்கு ஆன்மீகம் கூட பெண்களுக்குப் பாதுகாப்பாக இல்லை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு

இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு

இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு 25 வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கின்றன. நாள் ஒன்றிற்கு 59 குடும்பப் பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். ஒவ்வொரு மணிநேரத்திலும் 4 கொலைகள், 2 பாலியல் வன்முறைகள், 10 தற்கொலைகள், 1 வரதட்சணைச் சாவு நிகழ்கின்றன. தலைநகர் டெல்லியில் 24 சதவீத பாலியல் குற்றங்களும், 34 சதவீதம் பெண் கடத்தல் வழக்குகளும் பதிவாகியுள்ளன.

உலகின் உன்னதமான நாகரீகத்திற்குச் சொந்தக்காரர்கள் என்று தங்களை மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவில் ஆடைத் தயாரிப்பு ஆலைகளில் வேலை பார்த்து வருகின்ற 20 ஆயிரம் பெண்கள் தங்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் பலாத்காரங்களுக்கு நீதி வேண்டி வீதிக்கு வந்து போராடியிருக்கின்றார்கள்.

சீனாவில் இப்பொழுது தான் பெண்களுக்கு எந்தளவு உரிமைகள் வழங்கலாம் என்றதொரு ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது. அங்கு பணிக்குச் செல்லும் பெண்களில் 86 சதவீதத்தினர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதாகச் செய்திகள் கூறுகின்றன.

இரண்டாம் உலகப் போரின் பொழுது பிலிப்பைன்ஸ் பெண்கள் ஜப்பானியப் படைகளின் இச்சைகளைத் தீர்க்கும் கலங்களாக ஆக்கப்பட்டார்கள். அதற்கு நீதி கேட்டு இன்று வரை பிலிப்பைன்ஸ் பெண்கள் போராடி வருகின்றார்கள்.

இதுமட்டுமல்ல, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களது காலனி விரிவாக்கத் திட்டங்களை இன்றளவும் மூன்றாம் உலக நாடுகளின் மீது செயல்படுத்தி வருகின்றன.

போஸ்னியா, கொசோவோ போன்ற நாடுகளில் நடந்த உள்நாட்டுப் போரில் செர்பியர்களின் அட்டகாசங்களுக்குப் பலியானவர்களில் அதிகமானோர் பெண்களே. கிட்டத்தட்ட 80 ஆயிரம் முஸ்லிம் பெண்களை அவர்கள் கர்ப்பந்தரிக்கச் செய்தார்கள். கர்ப்பந்தரித்த அந்தப் பெண்களை சிறையில் வைத்து, உண்ண உணவு கொடுக்காமல் உயிருடனேயே சித்ரவதை செய்தார்கள்.

Related Post