பாவையின் பாதுகாப்பு..! பர்தாவின் அழகிய உவப்பு..!!

– மு.அ. அப்துல் முஸவ்விர்

மனம் போன போக்கில் வாழ்ந்து வந்த அஞ்ஞானக் கால மக்களிடம் இல்லாதிருந்தது ஒழுக்கநெறி.

மனம் போன போக்கில் வாழ்ந்து வந்த அஞ்ஞானக் கால மக்களிடம் இல்லாதிருந்தது ஒழுக்கநெறி.

னம் போன போக்கில் வாழ்ந்து வந்த அஞ்ஞானக் கால மக்களிடம் இல்லாதிருந்தது ஒழுக்கநெறி.ஆடவரை அநாயசமாய் ஈர்க்கும் கவர்ச்சிகர ஆபாச ஆடை ஆபரணங்களை அணிந்து, மதிமயக்கும் நறுமணம் பூசி வீதிகளிலும்,அங்காடிகளிலும் வந்தனர் பவனி. இதனால்  விளக்கம் காணா விபரீதங்கள் ஏற்பட்டு இருபாலாரின் கற்புக்கும் பூசப்பட்டது கரி.அதனால், அவர்கள் அடைந்தது அவமானத்துக்குப் பலி. இத்தகைய வழுக்கல்களுக்கு அணை போடும் வண்ணம் அழகிய பாதுகாப்பை அனங்கையருக்கு அளித்தது ஏகஇறைநெறி.அதுவே சலசலப்புக்களுக்கு அஞ்சா பர்தா எனும் விமோசன வழி.

இன்றைய சமூகத்தில்  யாருக்கும் பெண்ணடிமைத்தனத்திற்கும் பெண்ணுரிமைக்கும் வேறுபாட தெரியவில்லை என்பதல்ல விஷயம். கண்டிப்பாக அறிந்தே வைத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைநெறி கூறும் பெண்ணுரிமைகள் அனைத்தையும், பெண்ணடிமைத்தனம் என்று வருணிக்கும்  மோசமான போக்குதான் அந்நெறிக்கு எதிரான ஏதோ ஒரு வஞ்சக சூழ்ச்சியாக உருப்பெற்று நிற்கின்றது.

ஆம்.. உங்கள் யூகம் சரிதான்.

இஸ்லாம் வலியுறுத்தும் பர்தா எனும் ஹிஜாப் அணிய நினைக்கும் முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் எதிர்ப்பு காட்டப்படுகின்றது.ஆனால் அதேவேளை அரைகுறையாக  ஆடை அணியும் மற்றவர்களுக்கு பெண்ணுரிமை எனும் பெயரில் அங்கீகாரம்  தரப்படுகின்றது.

மகளிர் விடுதலை பேசும் பெண்ணியவாத சமூகம் சிறிது சிந்திக்கட்டும்.

பெண்களை விசாரணை என்ற பெயரில் காவல்நிலையம் அழைத்துச்சென்று மானபங்கம் செய்த சம்பவங்கள் அதிகமானதால்தானே ‘மகளிர் காவல்நிலையம்’ என்ற ஒன்று அவசியப்பட்டது.. எல்லா காவல்நிலையங்களிலுமா அக்குற்றம் நடந்தது.. இல்லையேஎனினும் மகளிர் காவல்நிலையம் உருவாக்கப்பட்டது.  ‘அது பெண்களுக்கு பாதுகாப்பு, பெண்விடுதலை-பெண்ணுரிமை பேணல்’ என்று எல்லா தரப்பாலும் புகழப்பட்டது. ஏனைய எண்ணற்ற ஒழுக்க சிகாமணிகளான மற்ற நல்ல காவலர்கள், ‘இத்தகைய மகளிர் காவல் நிலையங்கள் அமைப்பது எங்களை அவமானப்படுத்துகிறது’ என்றோ, மற்ற துறைகளில் சர்கோசிகளாகக் கோலோச்சுவோரும்கூட ‘இது ஆண் பெண் சமத்துவத்துக்கு எதிரானது’ என்று முணுமுணுக்கக்கூட இல்லையே..ஏன்..

கூட்டம் நிறைந்த நகரப்பெருந்துகளில்  நாளுக்குநாள் சில விஷமிகளின் பெண்களுக்கெதிரான சில்மிஷங்கள் அதிகரித்ததன் விளைவுதானே ‘மகளிர்மட்டும்’ பேருந்து.. அதேபோல் தோற்றுவிக்கப்பட்டதுதானே புறநகர் இரயில்களில்  மகளிர் மட்டும் பெட்டிகள். இவற்றையெல்லாம் ‘ஆண்-பெண் சமத்துவத்துக்கு எதிரானது ‘ என்று கூப்பாடு போட்ட எந்த பெண்ணியவாதியாவது இருப்பாரா.. மாறாக ‘அவை பெண்களுக்கு தக்க பாதுகாப்பு என்றும் பெண்ணுரிமை பேணப்படுகிறது’ என்றல்லாவா வாழ்த்தினர்..

ஆனால், பெண்களுக்காகவேன்றே தனியாக மகளிர் கல்லூரி, மகளிர் மேல்ஃஉயர்ஃநடு நிலைப்பள்ளிகள் தோற்றுவிக்கப்ப்படும்போது மட்டும்  தவறாமல், இருபாலார் கல்வி –ஊழ-நனரஉயவழைn நிலையங்கள்தான் சிறந்தது’, ‘தனித்தனியே படித்தால் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு பக்குவம் வளராமல் போய்விடும்’, ‘ஒரு சமூக புரிந்துணர்வு ளுழஉயைட நுஒpழளரசந இருக்காது’, ‘மாணவர் மனதில் ஆண் பெண் சமத்துவ எண்ணம்  வளராது’ என்றெல்லாம் சப்பைக்கட்டியல்லவா  எதிர்க்கின்றனர், அதுவும், ஈவ்-டீசிங் பயங்கரங்கள் எல்லாம் நாளுக்குநாள் பெருகிக்கொண்டு இருக்கும் இந்நாளில

மிகுதியான விருந்தினர் வருகையால், வீடு நிறைந்துவிட, இரவு தங்க வைப்பதில் வீட்டினுள் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டால், அந்தக்காலத்தில் தோட்டம், திண்ணை அப்புறம் பக்கத்துவீடு…(இப்போது லாட்ஜ்…) என இங்கெல்லாம் இரவு தங்கி தூங்க, விருந்தினரில் யாரை அனுப்பி வைப்பர்..ஆண்களையா.. பெண்களையா.. உலகம் முழுதும் இன மத மொழி வேறுபாடின்றி ஆண்களைத்தானே அனுப்புவர்..  இது பெண்களைக்காக்கும் கண்ணியம் கலந்த பாதுகாப்புத்தானே.. அதை எல்லாரும் செய்தாலும், அதையே ஒரு முஸ்லிம் வீட்டினர் செய்தால் மட்டும்  பெண்ணடிமைத்தம் என்று ஒரு  அரைவேக்காட்டுத்தனம்  தொனிக்கவல்லவா பேசுகின்றனர்.

மனம் போன போக்கில் வாழ்ந்து வந்த அஞ்ஞானக் கால மக்களிடம் இல்லாதிருந்தது ஒழுக்கநெறி.

மனம் போன போக்கில் வாழ்ந்து வந்த அஞ்ஞானக் கால மக்களிடம் இல்லாதிருந்தது ஒழுக்கநெறி.

மாறாக, இஸ்லாமிய ஹிஜாபை ஒருபுறம் ‘பெண்ணடிமைத்தனம்’ என்று எதிர்த்துக்கொண்டிருப்பது.மறுபுறம்  நவீனத்துவ பன்னாட்டு முற்போக்கு முதலாளித்துவத்தின்  கவர்ச்சியால், அரைகுறை ஆடைகளுடன் காதலர்தினம், டிஸ்கோத்தே, நைட் பார்ட்டி போன்றவற்றில் கலந்து கொள்ளும் பெண்களை அவமரியாதை செய்து நையப்புடைப்பது  என்பதுதானே இன்றைய நிலவரம்.

இஸ்லாம் என்றதும் ஏனிந்த இரட்டை நிலை..

இன்னும் சொல்லப் பொனால் பர்தாவை வலியுறுத்தி பைபிள் போன்ற இறைவேதங்களேகூட பேசுகின்றன.

நாகரிக உடையணிந்த வலம் வந்த பலரும்கூட இன்று கண்ணியம் பேணும் உடையணிவதில்லையா..திபை;படத்துறையைச் சேர்ந்த  செல்விஜெயலலிதா, அவர்கள்,தமிழக முதலமைச்சர் ஆனதும், புருகா வடிவ போன்ற புதுவித ஆடை உடுத்த ஆரம்பித்தார். அதேபோல்  முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா  காந்தி, இன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் போன்றவர்கள் தாம் பதவிக்கு வந்ததும், புடவையால் முக்காடு போட்டுக்கொள்ள ஆரம்பித்தனரே.. இத்தாலியில் பிறந்து இந்திய மருமகளாய் ஆகி,இன்று காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்றத் தலைவராக இருக்கும் திருமதி சோனியா காந்தி அவர்களும் முக்கிhடிட்ட புடவை உடுத்துகின்றாரே.

என்ன காரணம். அதுதான் தமக்கும் தம் பதவிக்கும் மரியாதையை சேர்க்கும் என்றுதானே. தாங்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படத்தானே.. இதை என்றேனும்… எவரேனும்… ‘பெண்ணடிமைத்தனம்’ என்று கூவி இருக்கிறார்களா..

இராசபுத்திர வம்ச பெண்கள் இன்றும்கூட முகத்தில்  முக்காடு இட்டுக் கொண்டல்லவா வலம் வருகின்றனர்.இந்து பெண் துறவிகள் அல்லது பெண் கிறித்தவ பெண் பாதிரிகளின் உடையை எவரேனும் இதுவரை கண்டித்திருக்கின்றார்களா..

மற்ற சாதாரண கிறித்துவ பெண்களுக்கு இல்லாமல்  ஏன் அவர்களுக்கு மட்டும் அந்த ஹிஜாப் தோற்ற  ஆடை. கடவுளுக்கு சேவகம் புரிபவர்கள்.. தூய்மையானவர்கள் மற்றும் கண்ணியமானவர்கள் என்று அறியப்படத்தானே.. இதை என்றேனும் எவரேனும் ‘பெண்ணடிமைத்தனம்’ என்று கூவி இருக்கிறார்களா..

இன்னும் சொல்லப் போனால் உலகின் பெரும்பான்மை மதங்களில் பர்தா குறித்து பெரிதும் வலியுறுத்தப்படுகின்றது.

யூத மதப் புனித நூலான தவ்ராத் ஹிஸாபை வலியுறுத்திப் பேசுகின்றது.(தவ்ராத்,உபாகமம் 22:11 னுநரவநசழழெஅல 22:11 ஆடீஏ)

தான் மணமுடிக்க இருக்கும் ஈசாக்-கை சந்திக்க அவருடைய ஊழியக்காரன் தன்னை அழைத்துச் செல்லும்போது , அவரை வழியில் கண்ட ரெபெக்கா ஒட்டகத்தை விட்டிறங்கிமுக்காடிட்டுக் கொண்டதாக விவிலியம் கூறுகின்றது.

ஊழியக்காரனை நோக்கிஅ ங்கே வெளியிலே நமக்கு எதிராக நடந்து வருகின்ற அந்த மனிதன் யார் என்று கேட்டான்.அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான்.அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக் கொண்டாள். ஆதியாகமம் 25:65

ஆக…. உயர்ந்த அந்தஸ்து, பெரிய பதவி, இறைச்சேவை  இவற்றில் இருக்கும் பெண்களின் கண்ணியத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல்,  உலகின் ஒட்டுமொத்த  அனைத்து இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அதேபோன்ற  மதிப்பையும் கண்ணியத்தையும் கொடுக்க இஸ்லாம் நாடுவது, எப்படி பெண்ணடிமைத்தனம் ஆகும்..

‘குட்டை நிலைவாசப்படியில் முட்டி மோதி புடைத்து, பிறகு அனுபவத்தால் புரிந்துகொண்டு  குனிந்து போவதற்கு’ பதிலாக, பெண்கள் விஷயத்தில் நிரம்பவே அக்கறையாக  பர்தா (ஹிஜாப்) பற்றி ஆரம்பத்திலேயே எச்சரித்து ‘முட்டிக்கொள்ளாமல் குனிந்து போக வைத்து’ பெண்களை கண்ணியமானவர்கள் என்று அறியவைத்தது இஸ்லாம். அவர்களின் மதிப்பை உயர்த்தி பாதுகாத்து,கவுரவப்படுத்திக்கொண்டிருக்கும்…  இஸ்லாம் கூறும் ஹிஜாப் எப்படி பெண்ணடிமைத்தனமாகும்..

இது பெண்ணடிமைத்தனமா  அல்லது பெண்ணுரிமையா

ஆக இவ்வுலகில் பெண்களுக்கான உரிமைகளாக நடைமுறையில் உள்ள…

‘மகளிர் காவல்நிலையம்’,  ‘மகளிர்மட்டும்’ பேருந்து  மற்றும்  ரயில்பெட்டி, மகளிர் கல்லூரி, மேல்,உயர்,நடு நிலைப்பள்ளிகள், முன்னாள் தமிழக முதல்வரின் அங்கி போன்ற மேலாடை,

இந்நாள் ஜனாதிபதி அவர்களின் முக்காடு, ஹிந்து பெண் துறவிகள் ஆடை,பெண் கிறித்துவப்பாதிரிகளின் உடை  மற்றும் எண்ணற்ற பெண்களுக்கான  உரிமைகள் போலவே….. நிச்சயமாக  இஸ்லாமிய ஹிஜாபும் ஒரு பெண்ணுரிமையே..!

இதை எதிர்ப்பவர்கள்  அல்லது பறிக்க நினைப்பவர்கள்தான்  நிச்சயம் பெண்ணுரிமைக்கு எதிரானவர்கள்.. அவர்களை ஒட்டுமொத்தமாய் பகிஷ்கரிப்பதில்தான் உண்மை பெண்விடுதலை இருக்கின்றது என்பதை சமூகம் புரிந்துகொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.

Related Post