கடன் – ஒரு பார்வை

– அகார் முஹம்மத்

கடன் என்பதன் உண்மையான பொருள் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.

கடன் என்பதன் உண்மையான பொருள் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.

டன் என்பதன் உண்மையான பொருள் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. ஆதாலால் அதன் மாயையலை; வீழ்ந்து விடுகின்றார்கள். அல்லது அதன் உண்மை சட்டங்களைக் குறித்துப் பாராமுகமாக இருக்கின்றார்கள்..!

உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் யாரெனில், அல்லாஹ்வின் பெயர் கூறப்படும்போது, அவர்களுடைய உள்ளங்கள் அஞ்சி நடுங்கும்! மேலும், அவனுடைய வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை அதிகமாகிவிடும். மேலும், அவர்கள் தங்களுடைய இறைவனையே முழுவதும் சார்ந்திருப்பார்கள்.

கடன் – ஒரு பார்வை.கடன் என்பது மனிதர்கள் சர்வ சாதாரணமாக பணமாகவோ பொருளாகவோ என்று ஒருவர் மற்றவரிடம் வாங்கக் கூடிய ஒரு சூழலில் என்றென்றும் இருந்து வந்துள்ளது. இதற்கு விதிவிலக்காக ஒரு சிலர் என்றுமே கடன் வாங்காதவராகவும் இருக்கலாம்; ஆனால் கடன் என்பது தனி மனிதன் முதல் நாடுகள் மற்ற நாடுகளிடமிருந்து அரசுகள் மற்ற அரசுகளிடம் இருந்து இன்று வங்கிகள் மற்ற வங்கிகளில் என்று பலவிதமாக தற்போது புழக்கத்தில் உள்ளது.

சில நேரங்களில் இது மிகவும் அவசியமான உணவு, உடை, இருப்பிடம், வைத்தியம் போன்ற தேவைகளுக்காக வசதி இல்லாத ஒரு நிலையில் வாங்கப்படுகிறது, இன்னும் சில சந்தர்ப்பங்களில் பொருள் வியாபாரம் கல்வி வாகனம் வசதிவாய்ப்பு சாதனங்கள் , திருமணம் போன்ற இதர காரியங்கள் விருந்துகள் இதுபோல பிறவற்றிற்கு சில நேரங்களில் விபத்து, மருத்துவம் போன்ற அவசரமான இக்கட்டான சூழ்நிலைகளுக்காகவும் வாங்கப்படுகிறது.

எந்த ஒரு நோக்கத்திற்கு இது வாங்கப்பட்டாலும் இது பிறருடைய உரிமை அது அவருக்கு நிறைவேற்றப் படவேண்டிய ஒன்று அதில் எந்த ஒரு குறையும் வைப்பது கடன் வழங்கியவரின் தனி மனித உரிமையில் பாதிப்பும், இழப்பும் ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்பதனைக் கடன் வாங்கியவர் கவனத்தில் கொள்ளவேண்டும். அதைத் திருப்பியளிப்பதில் மிகவும் கவனத்துடன் முன்னுரிமையளிக்க வேண்டும் என்பதைப் பின்வரும் ஹதீஸ் மூலம் நபி(ஸல்) அவர்கள் மிகவும் தெளிவாகவிளக்கியுள்ளார்கள்.

நாங்கள் (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்த போது ஒரு ஜனாஸா(பிரேதம்) கொண்டுவரப்பட்டது. நபித்தோழர்கள் இவருக்கு நீங்கள் தொழுகை நடத்துங்கள் என்று கூறினார்கள். இவர் எதையேனும் விட்டு சென்றிருக்கிறாரா என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது இல்லை என்றனர்,இவர் கடனாளியா என்று நபி(ஸல்) அவர்கள் (வழமையாக கேட்பது போல்) கேட்ட போது மூன்று தங்க காசுகள் கடன் வைத்திருக்கிறார் என்று நபித்தோழர்கள் கூறினார்கள்.நபி(ஸல்) அவர்கள் உங்கள் தோழருக்கு நீங்களே (ஜனாஸா)தொழுகை நடத்துங்கள் என்று கூறினார்கள்.அப்போது அபு கதாதா(ரலி)(எனும் நபித்தோழர்)அவர்கள், அவர் கடனுக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன், அல்லாஹ்வின் தூதரே நீங்கள் தொழுகை நடத்துங்கள் என்று கூறியதும் நபி(ஸல்) அவர்கள் அவருக்குத்(ஜனாஸா தொழுகை எனும் மரணித்தவருக்காகானபிராத்தினை)தொழுகையை நடத்தினார்கள்.

(நீண்ட ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பாளர்: சலமா பின் அக்வஃ (ரலி) நூல் புகாரி: 2289

இந்த ஹதீஸ் மூலம் கடன் வாங்குவதை சர்வசாதாரண ஒரு செயலாக அலட்சியமாக கருதி செயல்படுவதை மக்கள் கைவிடவேண்டும், கடன் வழங்கியவர் அவர் செய்த கடனுதவிக்குப் பகரமாக இழப்பையும் நஷ்டத்தையும் அடையக் கூடாது என்பதை ஒருவர் மரண நேரத்தில் தொழுகை நடத்த மறுத்து நபி(ஸல்) அவர்கள் உணர்த்தியுள்ளார்கள் என்பது எந்த அளவு இஸ்லாம் தனி மனித உரிமைகளில் கவனம் செலுத்துகின்றது என்பதற்கு ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாகும்.

Related Post