படைப்பாளன் அவன் மட்டுமே..!

படைப்பாளன் அவன் மட்டுமே..!

படைப்பாளன் அவன் மட்டுமே..!

-மு.அ.அப்துல் முஸவ்விர் – சுவனத்தென்றல்

னைத்தும் படைத்து பரிபாலிப்பவன் இறைவன் ஒருவன் மட்டுமே. இந்த நம்பிக்கை என்பது. அல்லாஹ்வைக் குறித்த மூன்று அடிப்படை அம்சங்களில் ஒன்றாகும். அல்லாஹ்வை நம்புவது என்பது படைத்தவன் எனும் அந்தஸ்தில் அவனை ஒருமைப்படுத்தி நம்புவதாகும். அனைத்துப் படைப்புக்களின் மூலகர்த்தா அவனே..!

1. தவ்ஹீதுர் ருபூபிய்யா (படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனாகிய அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது)

தவ்ஹீது ருபூபிய்யா என்பது: –

  • அனைத்துப் பொருட்களையும் அவைகள் ஒன்றுமே இல்லாமலிருந்தபோது உருவாக்கியவன் அல்லாஹ்வே
  • அவனே அனைத்துப் படைப்புகளுக்கும் அவைகளிடமிருந்து எந்தவித தேவைகளுமில்லாமல் உணவளித்து பாதுகாத்து வருபவன்
  • அவனே இந்தப் பேரண்டத்திற்கும் மற்றும் அதிலுள்ள அனைவருக்கும் ஒரே இறைவன்
  • அவனுடைய ஆட்சியதிகாரத்தில் யாருக்கும் எவ்வித பங்குமில்லை
  • அனைத்துப் பொருட்களுமே அல்லாஹ்வின் வல்லமையைக் கொண்டே இயங்குகிறது
  • அவன் அனுமதியில்லாமல் எதுவும் நடக்காது.

என்பன போன்ற அடிப்படைக் கொள்கையைக் கொண்டதாகும். அரபியில் படைத்துப் பரிபாலிக்கும் தன்மைக்கு ருபூபிய்யாஎனப்படும். இது ரப் என்ற மூலச் சொல்லில் இருந்து உருவானது.

தவ்ஹீது ருபூபிய்யாவுக்கான குர்ஆன் ஆதாரங்கள்: –

“அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான்” (அல்குர்ஆன் 39:62)

“உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்” (அல்குர்ஆன் 37:96)

“(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல – அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்” (அல்குர்ஆன் 8:17)

நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை; மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் – அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 64:11)

Related Post