தூய்மையும் தொழுகையும் – 15

– நாதியா
தமிழில்:மு.அ. அப்துல் முஸவ்விர்

தூய்மையும் தொழுகையும் – 15

அவனே உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான். அவனே மேலிருந்து மழையைப் பொழியச் செய்து அதைக் கொண்டு உங்கள் உணவுக்காக விளைபொருள்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிறான்.

அவனே உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான். அவனே மேலிருந்து மழையைப் பொழியச் செய்து அதைக் கொண்டு உங்கள் உணவுக்காக விளைபொருள்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிறான்.

அவனே உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான். அவனே மேலிருந்து மழையைப் பொழியச் செய்து அதைக் கொண்டு உங்கள் உணவுக்காக விளைபொருள்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிறான். எனவே, (இவற்றை எல்லாம்) நீங்கள் அறிந்திருந்தும் அல்லாஹ்விற்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.  நாம் நம் அடியார் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தைப் பற்றி (இது நம்மால் அருளப்பட்டதா, இல்லையா எனும்) சந்தேகத்தில் நீங்கள் இருப்பீர்களானால், இதைப் போன்ற ஒரே ஓர் அத்தியாயத்தையேனும் (உருவாக்கிக்) கொண்டு வாருங்கள்! (இதற்காக) அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குத் துணை புரிபவர்கள் அனைவரையும் அழைத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் உண்மையானவர்களாய் இருப்பின் (இதனைச் செய்து காட்டுங்கள்)! நீங்கள் அப்படிச் செய்யாவிட்டால், நிச்சயமாக உங்களால் ஒருபோதும் அவ்வாறு செய்ய முடியாது; மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்டதும், (சத்தியத்தை) நிராகரிப்பவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டதுமான நரக நெருப்புக்கு அஞ்சுங்கள்! மேலும், (நபியே! இவ்வேதத்தில்) நம்பிக்கை கொண்டு (அதன் அறிவுரைகளுக்கேற்ப) நற்செயல்கள் புரிவோர்க்கு, கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்கள் நிச்சயமாக உண்டு எனும் நற்செய்தியைக் கூறுவீராக! அந்தச் சுவனங்களில் ஏதேனும் ஒரு கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் அக்கனிகள் பூமியிலுள்ள கனிகளைப் போல் தோற்றத்தில் ஒத்திருப்பதால், “இத்தகைய கனிதான் முன்பு (உலகில்) நமக்கு உணவாக வழங்கப்பட்டது” என அவர்கள் கூறுவார்கள். இன்னும் அங்கு அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உண்டு. மேலும், அங்கு அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள்.

2.4 பாத்திரங்கள் மற்றும் கொள்கலன்கள்

எல்லா வகைகளிலும் தங்கம் மற்றும் வெள்ளியினாலான பாத்திரங்களைப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அதனை வெறும் ஒரு கொள்கலனாக மட்டும் பயன்படுத்தலாம்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- பட்டாடைகள் மற்றும் ஆடைகளை உடுத்தாதீர்.தங்கம் மற்றும் வெள்ளியினாலான பாத்திரங்களிப் பருகாதீர்.அந்த உலோகங்களினாலான பாத்திரங்களில் உண்ணாதீர்.அந்த வகைப் பொருட்கள் நிராகரிப்பாளர்களுக்கு இம்மையிலும்,இறைநம்பிக்கையாளர்களுக்கு மறுமையிலும் (மட்டுமே) ஆகுமாக்கப்பட்டிருக்கின்றன.
அறிவிப்பாளர்:ஹ_தைஃபா (ரலி) ஆதாரம்: புகாரி

அதேபோன்று, அவைகளை உண்ண,பருக பாத்திரங்களாகப் பயன்படுத்தவும்,அழகுக்காக வடிவமைத்துப் பயன்படுத்தவும் தடுக்கப்பட்டுள்ளது.

2.4.1 தங்கம் மற்றும் வெள்ளி கொண்டு சூட்டினால் இணைக்கப்பட்ட கொள்கலன்கள்

அவனே உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான். அவனே மேலிருந்து மழையைப் பொழியச் செய்து அதைக் கொண்டு உங்கள் உணவுக்காக விளைபொருள்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிறான்.

அவனே உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான். அவனே மேலிருந்து மழையைப் பொழியச் செய்து அதைக் கொண்டு உங்கள் உணவுக்காக விளைபொருள்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிறான்.

தங்கம் மற்றும் வெள்ளி(யின் வெட்டப்பட்ட துண்டுப்பகுதி) கொண்டு சூட்டினால் இணைக்கப்டட கொள்கலன்கள் எல்லா நிலைகளிலும் தடுக்கப்பட்டிருக்கின்றது.ஆனால், வெள்ளி கொண்டு சூட்டினால் இணைக்கப்பட்ட கொள்கலன்களைப் பயன்படுத்துவது என்பது அந்தப் பாத்திரத்தில் இணைக்கப் பயன்படுத்தப்பட்ட வெள்ளியின் அளவைப் பொறுத்தது:-

– அலங்காரத்துக்காக அதிக அளவு வெள்ளி அதில் பயன்படுத்தப்படடிருப்பின் அது தடுக்கப்பட்டது.
– அலங்காரத்துக்காக குறைந்த அளவு வெள்ளி அதில் பயன்படுத்தப்படடிருப்பின் அதனைப் பயன்படுத்துவது (தடுக்கப்பட்டதல்ல எனினும்) விரும்பத்தகுந்ததல்ல.
– தேவையான குறைந்த அளவு வெள்ளி அதில் பயன்படுத்தப்பட்டிருப்பின் அதனை பயன்படுத்த அனுமதி உண்டு
– தேவையான அதிக அளவு வெள்ளி அதில் பயன்படுத்தப்பட்டிருப்பின் அதனைப் பயன்படுத்துவது (தடுக்கப்பட்டதல்ல எனினும்) விரும்பத்தகுந்ததல்ல.
நான் அண்ணலார் (ஸல்) அவர்கள் (பயன்படுத்திய) குவளை ஒன்றை, அனஸ் (ரலி) அவர்களிடத்தில் கண்டேன்.அது உடைந்திருந்தது.அவர் அதனை வெள்ளிச் சூட்டினால் இணைத்திருந்தார்.அந்த நீர்க்குவளை சற்று அகலமானதாகவவும், நதார் கடடையினால் செய்யப்பட்டதாகவும் இருந்தது.அனஸ் கூறினார்: “நான் இந்த குவளையில் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இவ்வளவு.. காலகட்டம் வரை தண்ணீர் வழங்கிக் கொண்டிருந்தேன்” அறிவிப்பாளர்: அஸிம்-அல்-அஹ்வல் (ரலி) அதாரம்: புகாரி
2.4.2 விலை மதிப்பு மிக்க கற்களால் ஆன கொள்கலன்களைப் பயன்படுத்துதல்:

விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட கொள்கலன்களைப் பயன்படுத்துவது குறித்த விஷயத்தில் எந்தவொரு இஸ்லாமிய வழிகாட்டுதல் ஷரத்து இல்லை என்பதால், அதனைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்றே கருத்தாகின்றது.

2.4.3 முஸ்லிமல்லாதவர்கள் (பயன்படுத்தும்) பாத்திரங்களைப் பயன்படுத்துல்:

பின்வரும் நபிமொழியின் அடிப்படையில் முஸ்லிமல்லாதார் பயன்படுத்தும் பாத்திரங்களை உபயோகப்படுத்துவது கூடும்:-
முஸ்லிம் அல்லாதவர்(கள் பயன்படுத்தும் பாத்திரங்)களின் பயன்பாடு குறித்து அண்ணலார் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டபோது, “அதனைக் கழுவுங்கள்,பின்னர் உண்ணச் சயெ;யுங்கள்!” என்றார்கள். ஆதாரம்: புகாரி
ஆதனைக் கழுவி பயன்படுத்தச் சொல்வதன் நோக்கம் இதுவே: தடுக்கப்பட்டவைகளான மது அல்லது பன்றி இறைச்சிக்காக அது பயன்னடுத்தப்பட்டிருக்கலாம்.
ஆவர்களுடைய ஆடைகளைப் பயன்படுத்துவதற்கும் இதே சட்டம் பொருந்தும்.

Related Post