தீவிரவாத வேரா இஸ்லாம்..?-ஒரு பார்வை

இஸ்மாயில் ஸலஃபி

முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?

முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?

தீவிரவாத வேரா இஸ்லாம்..? (போரின் போது) அவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் வெட்டி வீழ்த்துங்கள்! மேலும் எங்கிருந்து உங்களை அவர்கள் வெளியேற்றினார்களோ அங்கிருந்து அவர்களை நீங்களும் வெளியேற்றுங்கள். (கொலை கொடியதுதான் என்றாலும்) ‘ஃபித்னா’(அராஜகத்தைத்) தோற்றுவிப்பது கொலையைக் காட்டிலும் மிகக் கொடியதாகும். மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகே அவர்கள் உங்களுடன் போர் தொடுக்காதவரை நீங்களும் அதன் அருகே அவர்களுடன் போர் புரிய வேண்டாம். ஆயினும் (அங்கே) அவர்கள் உங்களோடு போர் செய்தால் நீங்களும் (தயக்கமின்றி) அவர்களோடு போர் புரியுங்கள். இத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு இதுவே தண்டனையாகும். (2:191)

அவர்களைக் கொல்லுங்கள் என குர்ஆன் கூறுவதை சிலர் வேண்டுமென்றே தவறாகச் சித்தரிக்கின்றனர். முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாம் கொல்லச் சொல்கின்றது என்று கூறி இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிப்பதாக நிலைநாட்ட முற்படுகின்றனர். இந்த வசனம் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொலை செய்யுமாறு கூறவில்லை.

போர்க்களத்தில் முஸ்லிம்களுடன் போர் செய்பவர்களைப் பற்றிப் பேசும் வசனமே இதுவாகும். இந்த வசனத்திற்கு முந்திய, பிந்திய வசனங்களைப் பார்த்தால் முஸ்லிம்களுடன் போர் செய்பவர்களுடன் போர் செய்ய ஏவப்படுவதுடன் அதில் கூட வரம்பு மீறிச் செல்லலாகாது என்ற போர் தர்மமும் போதிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியலாம். 2:191 இது முன்னைய வசனமாகும்.

‘எனினும் அவர்கள் (போரிடாது) விலகிக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன்.’

‘குழப்பம் நீங்கி அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரித்தாகும் வரை அவர்களுடன் போரிடுங்கள். ஆனால், அவர்கள் (போரிலிருந்து) விலகிக் கொள்வார்களானால் அநியாயக்காரர்கள் மீதே தவிர எந்த வரம்பு மீறுதலும் கூடாது.’ (2:192-193)

தீவிரவாத வேரா இஸ்லாம்..?-ஒரு பார்வை

போர் செய்தவர்கள் போரில் இருந்து விலகிவிட்டால் அவர்கள் மீது வரம்பு மீறக் கூடாது என இந்த வசனம் கண்டிக்கின்றது. பொதுவாக போரில் தோல்வியுற்றவர்கள் மீது அக்கிரமங்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதே வழமையாகும். இஸ்லாம் இதைத் தடுக்கின்றது. நபியவர்கள் மக்கா வெற்றியின் போது தமது உறுப்பினர்களைக் கொலை செய்தவர்கள், தம்மை ஊரை விட்டும் விரட்டியவர்கள், தமது சொத்துக்களைச் சூறையாடியவர்கள் என அனைவருக்கும் பொது மன்னிப்பளித்து இந்தப் போர் நெறியை நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளார்கள். முஸ்லிம் அல்லாதவர்களைக் கொலை செய்யுமாறு குர்ஆன் கூறுவதாக இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களே கூறி வருகின்றனர்.

தீவிரவாத வேரா இஸ்லாம்..?-ஒரு பார்வை

2:189 (நபியே! தேய்ந்து வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; கூறுவீராக: “அவை மக்களுக்குக் காலங்காட்டியாகவும், ஹஜ்ஜுடைய நாட்களை அறிவிப்பவையாகவும் இருக்கின்றன.” மேலும், (அவர்களிடம் கூறும்:) “நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்குள் அவற்றின் பின்புறமாக வருவது புண்ணியமானதல்ல. மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவனே (உண்மையில்) புண்ணியவான் ஆவான். எனவே வீடுகளுக்குள் அவற்றின் வாயில்கள் வழியாகவே வாருங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் வெற்றி பெறக்கூடும்.” 2:190 மேலும், உங்களோடு போர்புரிபவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போர்புரியுங்கள். ஆனால், நீங்கள் வரம்பு மீறாதீர்கள். ஏனெனில், வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. 2:191 (போரின் போது) அவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் வெட்டி வீழ்த்துங்கள்! மேலும் எங்கிருந்து உங்களை அவர்கள் வெளியேற்றினார்களோ அங்கிருந்து அவர்களை நீங்களும் வெளியேற்றுங்கள். (கொலை கொடியதுதான் என்றாலும்) ‘ஃபித்னா’(அராஜகத்தைத்) தோற்றுவிப்பது கொலையைக் காட்டிலும் மிகக் கொடியதாகும். மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகே அவர்கள் உங்களுடன் போர் தொடுக்காதவரை நீங்களும் அதன் அருகே அவர்களுடன் போர் புரிய வேண்டாம். ஆயினும் (அங்கே) அவர்கள் உங்களோடு போர் செய்தால் நீங்களும் (தயக்கமின்றி) அவர்களோடு போர் புரியுங்கள். இத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு இதுவே தண்டனையாகும். 2:192 ஆயினும் அவர்கள் (போரிலிருந்து) விலகிக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ், மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான் (என்பதை அறிந்து கொள்ளுங்கள்). 2:193 ‘ஃபித்னா’ இல்லாதொழிந்து, தீன் (வாழ்க்கை நெறி) அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும் வரை நீங்கள் அவர்களோடு தொடர்ந்து போர்புரியுங்கள். ஆனால், அவர்கள் (இத்தகைய ஃபித்னாவிலிருந்து) விலகிக் கொண்டால் அக்கிரமக்காரர்களைத் தவிர வேறு எவரையும் துன்புறுத்துவது அனுமதிக்கப்பட்டதல்ல. 2:194 போர் தடை செய்யப்பட்ட சங்கைக்குரிய மாதத்திற்கு சங்கைக்குரிய மாதமே ஈடாகும். மேலும் சங்கைக்குரிய அனைத்திற்கும் (அவற்றின் கண்ணியம் மீறப்பட்டால்) சமமான அளவில் ஈடு செய்யப்படும். எனவே உங்களிடம் எவரேனும் வரம்பு மீறினால், அவர் எந்த அளவிற்கு உங்களிடம் வரம்பு மீறினாரோ அந்த அளவிற்கே நீங்களும் அவருக்குப் பதிலடி கொடுங்கள். ஆயினும் அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழுங்கள். வரம்புகளை முறிப்பதிலிருந்து விலகி இருப்பவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். 2:195 அல்லாஹ்வுடைய வழியில் செலவு செய்யுங்கள். மேலும், உங்களுடைய கைகளால் உங்களுக்கு அழிவைத் தேடிக்கொள்ளாதீர்கள். ‘இஹ்ஸான்’ எனும் வழிமுறையைக் கடைப்பிடியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை* நேசிக்கின்றான். 2:196 அல்லாஹ்வின் உவப்பைப் பெற ஹஜ்ஜையும் உம்ராவையும் (நிறைவேற்றிட நீங்கள் நாடினால் அவற்றை) நிறைவேற்றுங்கள். ஆனால் (வழியில் எங்காவது) நீங்கள் முற்றுகையிடப்பட்டால், (அதற்குப் பரிகாரமாக) பலி (குர்பானி) பிராணிகளில் உங்களுக்குச் சாத்தியமானதை (அல்லாஹ்வின் திருமுன் சமர்ப்பியுங்கள்) பலிப் பிராணி தனக்குரிய இடத்தை அடையும் வரை உங்கள் தலைமுடியை மழிக்காதீர்கள்! ஆனால் உங்களில் யாரேனும் நோயாளியாக அல்லது தன் தலையில் ஏதேனும் பிணி உள்ளவராக இருந்தால், (அதன் காரணமாக தலைமுடியை மழிக்கும் கட்டாயம் ஏற்பட்டிருந்தால்) அதற்குப் பரிகாரமாக அவர் நோன்புகள் நோற்கவோ, தர்மம் செய்யவோ, குர்பானி கொடுக்கவோ வேண்டும். மேலும், உங்களுக்கு அமைதி கிட்டிவிட்டால், (இன்னும் ஹஜ் உடைய காலம் வருமுன், நீங்கள் மக்காவை அடைந்துவிட்டால், அவ்வாறு அடைந்தவர்களில்) எவரேனும் ஹஜ் காலம் வருமுன் உம்ரா செய்ய நாடினால் அவர், பலிப்பிராணிகளில் தனக்கு சாத்தியமானதை குர்பானி கொடுக்க வேண்டும். பலிப்பிராணி கிடைக்கப் பெறாதவர் ஹஜ் காலத்தில் மூன்று நாட்களும் (வீடு) திரும்பி விட்டபின் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். இப்படி முழுமையாகப் பத்து நாட்கள் நோன்பிருத்தல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவர் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகில் குடியிருக்கவில்லையோ அவர்களுக்கேயாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனது கட்டளைகளுக்கு மாறு செய்யாமல் வாழுங்கள். திண்ணமாக, அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

Related Post