சினிமாவிலிருந்து சத்தியத்துக்கு….!

தாஸீன். இவை குர்ஆன் மற்றும் தெளிவான வேதத்தின் வசனங்களாகும். இந்த வேதம் நம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டியும் நற்செய்தியுமாகும். அவர்கள் எத்தகையவர்களெனில், தொழுகையை நிலை நாட்டுகின்றார்கள்; ஜகாத் கொடுக்கின்றார்கள். மேலும், மறுமையின் மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்.

“சசி விஜேந்திர” இது இவரது சினிமாப் பெயர்.

இப்பாதையில் பயணித்த ஒருவர்தான் இந்த ஷஷி விஜேந்திர. இலங்கையின் கமலஹாசன் என்று அழைக்கப்பட்டவர்

இப்பாதையில் பயணித்த ஒருவர்தான் இந்த ஷஷி விஜேந்திர. இலங்கையின் கமலஹாசன் என்று அழைக்கப்பட்டவர்

சினிமா மக்கள் மத்தியில் புரையோடிப்போயிருக்கின்ற ஒன்று. பலரும் பிரபல்யமாவதற்கு பயன்படுத்துகின்ற ஒரு முக்கிய ஊடகமே இந்த சினிமா. பணம் செழிக்கும் ஒரு முக்கிய வர்த்தகம் என்றுகூட சொல்லலாம். இப்பாதையில் பயணித்த ஒருவர்தான் இந்த ஷஷி விஜேந்திர. இலங்கையின் கமலஹாசன் என்று அழைக்கப்பட்டவர். முஸ்லிமாக இருந்தாலும் உலகவாழ்க்கையின் சினிமா சுகபோகத்துக்குள் நுழைந்தார். அழகு, நல்ல சாந்தமான குணம். தொடர் வெற்றிகள். தேசிய விருதும் கிடைத்தது. ஆனால், இந்த புகழின் உச்சியில் இருக்கும் போதுதான் சுமார் பதினேழு வருடங்களுக்கு முன்னர் தனது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டார். கைப்பிடித்தது ஒரு கிறிஸ்தவ பெண். இப்போது ஒரு இஸ்லாமிய பெண். நான்கு மகன்கள். ஒரு பெண் பிள்ளை. மூத்த மகன் ஒரு “ஹாபில்”.

மிக நீண்ட இடைவேளைக்குப் பின்னர் மீடியா இவரைத் தேடிப்பிடித்திருக்கிறது. சுமார் 17 வருடங்கள் கழித்து ஒரு பேட்டி. பேட்டியின் போது சிறு வயதில் பார்த்த அந்த நடிகரா இவர் என்று யோசித்தே விட்டேன். பேட்டியின் போது பேட்டி காண்பவர் இது திரும்பவும் சினிமாவுக்குள் நுழைவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று சொல்கிறார். ஆனால், இஸ்லாமிய வாழ்வை விட்டு வெளியே திரும்பவும் வருவதற்கு விருப்பமில்லை என்கிறார். அவர் நடித்த சில படங்களின் பாடல் காட்சிகளை ஒளிபரப்பி இவற்றைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது என்று கேட்கப்படுகின்றது. அதற்கு அவருடைய பதில் “அக்காலத்தில் தனது பங்களிப்பை (சினிமாவில்) ஒழுங்காக செய்திருக்கின்றேன் என்று சொன்னாலும் நபிவழியை விட்டு விலகி இருந்தேனே என்று மனம் கவலைப்படுகிறது” என்று சொல்கிறார். ஸுப்ஹானல்லாஹ். மேலும், இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தி பல வெற்றிகளை பெற்றுக்கொண்ட இயக்குனர், இவருடன் நடித்த நடிகை மீண்டும் இவர் சினிமா உலகுக்குள் சங்கமிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்கள். அவை எல்லாவற்றுக்கும் சிரித்த முகத்துடனேயே எனது வாழ்க்கை நபிவழியாகவே இருக்கும், அதற்கு மாற்றமாக நடக்க மாட்டேன் என்று உறுதியாகச் சொல்கிறார்.

இப்போது தப்லீக் ஜமாத்தின் தான் சார்ந்திருக்கும் ஊரின் அமீராக செயல்படுகிறார்.

படிப்பினைகள்:

# முஸ்லிமாக இருந்தும் வாழ்வை ஜாஹிளிய்யத்துக்குள் நடைபயின்ற இவர் திரும்பவும் இஸ்லாமிய வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டார்.

# தொடர் வெற்றிகள், தேசிய விருது என்ற புகழின் உச்சியில் இருக்கின்ற போதே சினிமாவின் சுகபோக வாழ்வில் இருந்து விடுபடுகிறார்.

# திரும்பவும் ஜாஹிளிய்யத்துக்கான அழைப்புக்கள். அறிமுகப்படுத்திய இயக்குனர் மூலம் அழைப்பு. ஆனால், தவறுக்குள் நுழைய விருப்பமில்லை என்று மறுப்பு.

மாஷா அல்லாஹ்..அல்லாஹ் அண்ணாரின் கடந்த கால தவறுகளை மன்னித்து நல்லாடியார்களுள் ஒருவராக பொருந்திக் கொள்வாயாக…!

 

Related Post