கிறித்துவத்திலிருந்து இஸ்லாத்துக்கு ஏன்..? – 2

– தொகுப்பு: மு.அ.அப்துல் முஸவ்விர்

 

 மேலும் (நபியே!) மர்யத்தைப் பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் விவரித்துக் கூறுவீராக!

மேலும் (நபியே!) மர்யத்தைப் பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் விவரித்துக் கூறுவீராக!

மேலும் (நபியே!) மர்யத்தைப் பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் விவரித்துக் கூறுவீராக! அவர் தம்முடைய குடும்பத்தாரை விட்டு விலகி கிழக்குப் பக்கமாக ஒதுங்கியிருந்த நேரத்தில் அவர் ஒரு திரையிட்டு அவர்களிலிருந்து மறைந்திருந்தார். (அப்போது) நாம் அவரிடம் நம்முடைய ரூஹை (வானவரை) அனுப்பினோம். அவர் மர்யத்தின் முன்னிலையில் முழு மனித உருவில் தோன்றினார். உடனே மர்யம் கூறினார்: “உம்மை விட்டுக் கருணைமிக்க இறைவனிடம் நான் பாதுகாவல் கோருகின்றேன், நீர் இறையச்சம் உள்ளவராயின்!” அதற்கு அவர் கூறினார்: “நான் உம் இறைவனின் தூதராவேன்; தூய்மையான ஓர் ஆண் குழந்தையை உமக்கு வழங்குவதற்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன்.”  மர்யம் கூறினார்: “எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என்னை எந்த மனிதனும் தீண்டவில்லையே; நான் தீய நடத்தையுடையவளும் அல்லவே!” அதற்கு வானவர் கூறினார்: “அவ்வாறே நிகழும்.” உம் இறைவன் கூறுகின்றான்: “அவ்வாறு செய்வது எனக்கு மிகவும் எளிதானது; மேலும், நாம் அக்குழந்தையை மக்களுக்கு ஒரு சான்றாகவும் நம்மிடமிருந்து ஒரு கருணையாகவும் ஆக்குவதற்காகவே இவ்வாறு செய்கின்றோம். மேலும், அது நடந்தே தீரும்!” பின்னர், மர்யம் அக்குழந்தையைக் கர்ப்பம் தரித்தார். கர்ப்பத்தோடு அவர் தொலைவான ஓர் இடத்திற்கு ஒதுங்கிச் சென்றார். பிரசவ வேதனை அவரை ஒரு பேரீச்சை மரத்தடியின் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது. அப்போது அவர், “அந்தோ! நான் இதற்கு முன்னரே மரணமடைந்து முற்றிலும் மறக்கடிக்கப்பட்டுப் போயிருந்திருக்கக் கூடாதா?” என்று கூறலானார். அப்பொழுது கீழே இருந்து ஒரு வானவர் அவரை அழைத்துக் கூறினார்: “நீர் கவலைப்படாதீர்; உம் இறைவன் உமக்குக் கீழே ஒரு நீரூற்றை அமைத்துள்ளான். மேலும், பேரீச்சை மரத்தின் அடிப்பகுதியைப் பிடித்துச் சற்று உலுக்கும். அது உம்மீது புத்தம் புதிய பேரீச்சம் பழங்களை உதிர்க்கும்; ஆக, நீர் புசித்தும் பருகியும் கண் குளிர்ந்திருப்பீராக! பிறகு, மனிதரில் எவரையேனும் நீர் கண்டால் (அவரிடம்) கூறிவிடும்: “கருணைமிக்க இறைவனுக்காக நோன்பு நோற்க வேண்டுமென நான் நேர்ந்திருக்கின்றேன். ஆதலால், இன்று நான் எவரிடமும் பேசமாட்டேன்.”

தேவாலயத்திற்கு செல்ல இயலாததால் நிம்மதியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது நானாகவே செல்ல வேண்டிய அவசியம் உணர்ந்தேன். எனக்கு பதினாறு வயதாக இருக்கும் போது என்னுடைய நன்பரின் தந்தை பாதிரியாராக இருக்கும் தேவாலயத்திற்கு செல்ல ஆரம்பித்தேன். அது மிகச் சிறிய கட்டிடமாக இருந்தது. அதில் என்னுடைய நன்பரின் குடும்பத்தினர், நான் மற்றும் என்னுடைய மற்றொரு பள்ளி நன்பன் ஆகியோர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தோம். இது அந்த தேவாலயம் மூடப்படும் வரை பல மாதங்கள் நீடித்தது. பிறகு நான் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பல்கலைகழகத்தில் சேர்ந்த போது நான் என்னுடைய மார்க்கத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகளை மீண்டும் உணர ஆரம்பித்தேன். ஆகவே பெந்தகோஸ்தே போதனைகளின் பால் நான் என்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டேன். எனக்கு ‘ஞானஸ்நானம்’ செய்விக்கப்பட்டு ‘பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டதாக’ கூறப்பட்டேன். ஒரு கல்லூரி மானவன் என்ற முறையில் தேவாலயத்தைக் கொண்டு பெருமிதம் அடைந்தேன். ஒவ்வொருவரிடமும் என்னிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது. எனவே நான் ‘பாவமீட்சிக்கான பாதையில்’ இருப்பதாக உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

நான் தேவாலயத்திற்குச் செல்லும் போதெல்லாம் அதன் கதவுகள் எனக்காகத் திறக்கப்பட்டது. நான் நாள் கணக்காக, வாரக்கணக்காக பைபிளை இடைவிடாது படித்துக் கொண்டிருப்பேன். அப்போது கிறிஸ்தவ அறிஞர்களின் பேச்சுக்களைக் கேட்டு என்னுடைய 20 வயதில் மினிஸ்ட்ரியோடு என்னை இணைத்துக் கொண்டேன். அதன் பிறகு நான் மார்க்க பிரசங்கம் செய்ய ஆரம்பித்து அதன் மூலம் மக்களிடைய நன்றாக அறிமுகம் ஆனேன். நான் இருக்கும் தேவாலயத்தைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தவிர மற்ற எவரும் பாவமீட்சி அடையமுடியாது என்று நான் உறுதியாக நம்பினேன். நான் கடவுளை எப்படி நம்பினேனோ அவ்வாறு கடவுளை நம்பாதவர்களை எல்லாம் கடுமையாக விமர்சித்தேன்.

மேலும் ‘இயேசு நாதரும் இறைவனும் ஒன்று தான்’ என்று நினைத்திருந்தேன். நம்முடைய தேவாலயம் திரித்துவத்தில் நம்பிக்கையில்லாதது என்றும், ஆனால் இயேசு நாதரே (அலை) பிதாவும், மகனும் பரிசுத்த ஆவியுமாவார் என்றும் நான் பயிற்றுவிக்கப்பட்டேன். நான் எனக்குள் அவற்றைப் புரிந்துக் கொள்வதற்கு முயற்சி செய்தேன். ஆனால் நான் உண்மையைக் கூற வேண்டும், என்னால் அதை முழுவதுமாக புரிந்துக் கொள்ள இயலவில்லை. என்னைப் பொறுத்தவரை அதன் சித்தாந்தம் எனக்கு அறிவுப்பூர்வமாகப்பட்டது. பெண்களின் புனித ஆடைகளுக்கும் ஆண்களின் இறை பக்திக்கும் நான் மரியாதை அளித்தேன். தங்களை முழுமையாக மறைத்துக் கொண்டு, முகங்களில் மேக்அப் சாதனங்களை போடாமல், தங்களை இயேசு கிறிஸ்துவின் தூதர்களாக கருதுகின்ற பெண்களையுடைய கிறிஸ்த சித்தாந்தத்தை நான் போதிக்கிறேன் என்று எனக்குள் மகிழ்ந்து பெருமிதம் அடைந்தேன். பரலோக வெற்றிக்கான உண்மையான வழியை நான் கண்டு கொண்டாதாக சிறிது கூட சந்தேக நிழலில்லாமல் என்னில் நானே திருப்தியடைந்துக் கொண்டேன். மற்ற தேவாலயங்களில் இருப்பவர்களுடனும் மற்ற கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களுடனும் எனக்கிருக்கும் பைபிளின் அறிவைக் கொண்டு விவாதம் செய்து அவர்களை மௌனமாக்குவேன். நூற்றுக் கணக்கான பைபிளின் வசனங்களை மனனம் செய்திருந்தேன். இதுவே என்னுடைய மத போதனைகளுக்கு ஒரு முக்கிய விளம்பரமாக இருந்தது. ஆயினும், நான் சரியான பாதையில் இருப்பதாக எனக்குள் உணர்ந்தாலும் என்னுடைய மற்றொரு பகுதி உண்மையைத் தேடிக் கொண்டிருந்தது. இதைத் தவிர உயர்வான உண்மை வேறெங்காவது இருக்க வேண்டும் என நான் உணர்ந்தேன்.

நான் தனிமையில் இருக்கும் போது தியானத்தில் ஈடுபட்டு, ‘நான் தவறான செயல்களைச் செய்து கொண்டிருந்தால் என்னை மன்னித்து எனக்கு சரியான பாதையைக் காட்டுமாறு இறைவனிடம் வேண்டிக் கொண்டிருப்பேன். அந்த சமயங்களில் நான் ஒரு முஸ்லிமைக் கூட சந்தித்ததில்லை. நான் அறிந்தவரையில், எலிஜா முஹம்மது என்பவரைப் பின்பற்றுபவர்கள் தான் ‘நாங்கள் இஸ்லாமியர்கள்’ என்று கூறிக்கொண்டிருந்தனர். அவர்கள் ‘கறுப்பு முஸ்லிம்கள்’ என்றும் அழைக்கப்படுவதுண்டு. எழுபதுகளின் பிற்பகுதியில் அமைச்சர் லூயிஸ் ஃபராக்கான் ‘நேசன் ஆஃப் இஸ்லாம்’ என்ற அமைப்பிற்குப் புத்துயிர் அளித்து புதுப்பித்துக் கொண்டிருக்கின்ற வேளை அது! ஒருமுறை நான் என்னுடைய சக ஊழியரின் அழைப்பின் பேரில் அமைச்சர் ஃபராக்கானின் பேச்சைக் கேட்பதற்காக சென்றேன். அந்தப் பேச்சு என் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவல்ல ஒரு அனுபவமாக உணர்ந்தேன். இதற்கு முன்பு வேறு எந்த கறுப்பு இன மனிதரும் இவர் பேசியது போன்று பேசி நான் கேட்டதில்லை. உடனே அவருடனான ஒரு சந்திப்பை ஏற்படுத்தி அவரை என்னுடைய மத நம்பிக்கைக்கு மாற்றலாம் என விரும்பினேன். வழிதவறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பைபிளை போதித்து மதமாற்றம் செய்வதில் மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன்.

கல்லூரி படிப்பை முடித்த பிறகு நான் முழு நேரப் பணியில் ஈடுபட்டேன். நான் மினிஸ்ட்ரிக்கு தகுதியான பொழுது எலிஜா முஹம்மதுவை பின்பற்றுபவர்களின் தொடர்பு எனக்கு அதிகமானது. கறுப்பு இனத்தவர்களின் தீமைகளைக் களைவதற்குப் பாடுபடும் அவர்களுடைய முயற்சியை நான் பாராட்டினேன். அவர்களுடைய ஆக்கங்களை நான் வாங்குவது அவர்களுடனான கலந்துரையாடல் போன்றவற்றின் மூலம் அவர்களுக்கு நான் ஆதரவு அளித்தேன். அவர்கள் எதைத் தான் நம்புகிறார்கள் என்று அறிந்துக் கொள்வதற்காக அவர்கள் கல்வி கற்கும் இடங்களுக்கே சென்று பயில ஆரம்பித்தேன். அவர்களுடைய சில கொள்கைகளை நிலை நிறுத்துவதற்காக பைபிளின் ஆதாரங்களை பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. நான் பைபிளைப் பற்றி நன்றாக அறிந்திருந்ததால் அவர்கள் பைபிளை தவறாக புரிந்து அதற்கு வேறு அர்த்தம் கொடுக்கிறார்கள் என்பது என்னை வருத்தத்திற்குள்ளாக்கியது. மேலும் நான் அங்கேயுள்ள பைபிளின் போதனை வகுப்புகளுக்குச் சென்று பைபிளின் பாடம் பயின்று பைபிளின் பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றேன்.

Related Post