கல்வியே சிறந்த சொத்து..! – 2

– அப்துல்லாஹ்

இறைவனே மனிதனுக்குக் கல்வி அளித்து அவனது அறியாமையை அகற்றினான். குர்ஆனில் முதன்முதலாக இறக்கியருளப்பட்ட வசனத்தொடரில் வருகிறது:

இறைவனே மனிதனுக்குக் கல்வி அளித்து அவனது அறியாமையை அகற்றினான். குர்ஆனில் முதன்முதலாக இறக்கியருளப்பட்ட வசனத்தொடரில் வருகிறது:

துவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு!  (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக! மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்; மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

கற்பித்தல்

இறைவனே மனிதனுக்குக் கல்வி அளித்து அவனது அறியாமையை அகற்றினான். குர்ஆனில் முதன்முதலாக இறக்கியருளப்பட்ட வசனத்தொடரில் வருகிறது: மேலும் உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்’ (96 : 3-4-5)
இறைவன் கற்றுக்கொடுத்த அறிவு ஞானத்தின் ஊற்றுக் கண் குர்ஆன் தான்! இதையே’கருணைமிக்க (இறை)வனே குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான்’ (55 :1 – 2) எனும் வசனம் குறிப்பிடுகிறது.
இறைவனிடம் இருந்து பெற்ற திருவேதத்தை இவ்வுல மாந்தர்களுக்குக் கற்றுக்கொடுத்து வழிகாட்;டவே நபியர்கள் வருகை தந்தார்கள். குர்ஆன் கூறுகிறது: திண்ணமாக அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களுக்கு பேருதவி புரிந்துள்ளான். அதாவது அவர்களிடையே அவர்களிலிருந்தே ஒரு தூதரை தோற்றுவித்தான். அவர், அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்., அவர்களது வாழ்க்கையைத் தூய்மைப் படுத்துகிறார்., மேலும் சட்டங்களையும் நுட்பங்களையும் அவர்களுக்குப் போதிக்கிறார். ஆனால் அவர்களோ இதற்கு முன்னர் அப்பட்டமான வழிகேட்டில்; இருந்தர்கள்’ (3: 164)
நபி(ஸல்) அவர்கள் கற்பித்தலின் மூலமே இத்தகைய பணிகளை ஆற்றினார்கள். ஆம்! அறியாமை இருள் அகற்றி அவன் எங்கும் அறிவொளி பரப்பினார்கள். இதயங்கள் தெளிவடைந்தன. செயல்பாடுகள் தூய்மையடைந்தன! ‘நான் ஒரு போதகனாகவே அனுப்பப்பட்டுள்ளேன்’ என்று நபி(ஸல்) அவர்களும் கூறினார்கள்.
இஸ்லாத்தின் இலட்சியம் அறியாமைக் காலத்து மூடக் கொள்கைகளையும் தீய நடைமுறைகளையும் மதிப்பீடுகளையும் தகர்க்க வேண்டும்., உயர்ந்த கொள்கைககள், குண நலன்கள், இறையச்சம், தூய்மை, சுத்தம் ஆகியவற்றின் அடிப்படையிலான் சமூக அமைப்பைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பது தான்! அதில் இறைவனை மட்டுமே வணங்கி வழிபடும் நிலை இருக்கும்., இணைவைப்பின் எந்த ஒரு சாயலும் அதில் கலந்;திருக்காது. இத்தகைய இலட்சியம் நிறைவேறுவது பிரச்சாரத்தின் மூலமும் மக்களுக்கு நேர்வழி காட்டி நெறிப்படுத்துவதன் மூலமும் தான் சாத்தியமாகும்.
இஸ்லாமியப் பிரச்சாரம் என்பது அதாவது, இஸ்லாமிய அழைப்புப் பணி என்பது உண்மையில் கற்பித்தலின் ஒரு வடிவமே! ஏனெனில் கற்பித்தல் என்பது பின்வரும் மூன்றில் ஓர் அம்சமாக இருக்கும். 1) விஷயங்களை முறைப்படுத்தி அறியக் கொடுப்பது 2) தவறான விஷயங்களைக் களைவது 3) அல்லது அவற்றைச் சீர்படுத்துவது.
ஓர் இஸ்லாமிய அழைப்பாளன் செய்வதும் இதுவே! இறைவேதத்தின் அறிவுரைகளையும் இறைத்தூதரின் வழிகாட்டுதல்களையும் மக்களிடம் கொண்டு சேர்கிறார், அல்லது இஸ்லாத்திற்குப் புறம்பான வழிகேடான கொள்கைளையும் அவற்றின் கேடுபாடுகளையும் களைந்து அவர்களின் வாழ்க்கைத் தூய்மைப்படுத்துகிறார்!
இந்த வகையில் தான் நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் தொடர்பு கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்கள். தம்மைச் சந்திக்க வருவோர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தால் அவர்களுடன் முறையான அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்வார்கள். அவர்கள் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து இஸ்லாத்தின் அடிப்படைகளையும் வழிபாட்டு முறைகளையும் நெறிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கும் எற்பாடு செய்வார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கற்பித்தலின் மூலமே

நபி(ஸல்) அவர்கள் கற்பித்தலின் மூலமே

மாலிக் பின் ஹுவைரிஸ்(ரலி) என்பார் அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தோம். நாங்கள் வயது ஒத்த இளைஞர்களாக இருந்தோம். இருபது நாட்கள் வரை நபியர்களிடம் தங்கியிருந்தோம். நபியவர்கள் கிருபைமிக்கவர்களாயும் இளகிய மனம் கொண்டவர்களாயும் இருந்தார்கள். நாங்கள் எங்களின் குடும்பத்தினரின்பால் ஆசை கொண்டதை நபியவர்கள் அறிந்த பொழுது எங்களிடம் கேட்டார்கள்: வீட்டில் யார் யாரை எல்லாம் விட்டு வந்துள்ளீர்கள் என்று! அது பற்றி நாங்கள் அறிவித்தோம். அப்பொழுது சொன்னார்கள்: உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் செல்லுங்கள். அவர்களுடன் தங்கியிருங்கள். நீங்கள் கற்றதை அவர்களுக்குக் கற்றக்கொடுங்கள். அவர்களுக்கு உபகாரம் செய்யுங்கள். நான் எவ்வாறு தொழுதிடக்கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகைக்கான நேரம் வந்துவிட்டால் உங்களில் ஒருவர் உங்களுக்காக பாங்கு சொல்லட்டும்., உங்களில் வயதில் மூத்தவர் உங்களுக்குத் தொழுகை நடத்தட்டும்’ (நூல்: புகாரி, முஸ்லிம், தாரமி, முஸ்னத் அஹ்மத்)
நபி(ஸல்) அவர்கள் கல்வி கற்றுக் கொடுக்கும் அவைகளில் கலந்து கொள்ளுமாறு தோழர்களுக்கு அதிகம் ஆர்வம் ஊட்டினார்கள், அந்த அவைகளைச் சுவனத் தோட்டங்களின் அந்தஸ்துக்கு நிகராகச் சுட்டிக்காட்டிச் சிறப்பித்தார்கள். ஒருமுறை தம் தோழர்களிடம் கூறினார்கள்: நீங்கள் சுவனத் தோட்டங்களுக்கு அருகில் கடந்து சென்றால் அங்கே மேய்ந்து கொள்ளுங்கள். தோழர்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! சுவனத்தோட்டங்கள் என்றால் யாவை? அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்: அவை தாம் கல்வி கற்பிக்கும் அவைகள்’ (நூல்: அத்தர்ஃகீப் வத் தர்ஹீப்)
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் தமது பள்ளிவாசலில் குழுமி இருந்த இரண்டு மஜ்லிஸ்களின் அருகில் சென்றார்கள். ஒன்றில் மக்கள், அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டும் அவனுடைய அருள் கொடைகளில் ஆர்வம் வெளிப்படுத்திக் கொண்டும் இருந்தார்கள். மற்றொன்றில் மக்கள், சட்ட விஷயங்களைக் கற்றுக் கொண்டும் கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருந்தர்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த இரு அவைகளுமே நன்மையில் தான் உள்ளன. ஆயினும் ஒன்று மற்றொன்றை விடச் சிறந்தது. இந்த மஜ்லிஸில் உள்ளவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டும் அவனுடைய அருள்கொடைகளில் ஆர்வம் வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள். அல்லாஹ் நாடினால் அவர்களுக்குக் கொடுப்பான்., நாடவில்லையெனில் கொடுக்கமாட்டான்! இந்த மஜ்லிஸில் உள்ளவர்கள் கற்றுக் கொண்டும் அறியாதாருக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள். நான் ஓர் ஆசானாகவே அனுப்பப்பட்டுள்ளேன்! இவ்வாறு கூறியவாறு நேராக அவர்களிடம் சென்று அமர்ந்தார்கள் நபி(ஸல்) அவர்கள்’ (நூல்: தாரமி)
கண்காணித்தல்
கல்விப் பணி வெற்றி பெறுவதற்குக் கண்காணித்தல் மிகவும் முக்கியமாகும். இன்று என்ன நடக்கிறது? பெற்றோர்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைத்து விட்டு பிறகு அலட்சியமாக இருப்பதைப் பார்க்கிறோம். நம் பிள்ளைகள் படிக்கத் தான் சென்றிருக்கிறார்களா? என்ன படிக்கிறார்கள் என்று பெரும்பாலும் கவனிப்பதில்லை! படிப்பில் ஆர்வம் குன்றுவதற்கும் அல்லது இடையிலேயே தடைபட்டுப் போவதற்கும் பிள்ளைகள் தறுதலைகளாக வளர்வதற்கும் இதுவே காரணம்.
இது விஷயத்தில் சமுதாயத் தலைவர்களும் பொறுப்பாளர்களும் அலட்சியமாக இருக்கக்கூடாது. முதலில் கல்விப் பணியில் நம் சமுதாய மக்களைக் கல்வித் துறையில் முன்னேற்றுவதில் நாம் எந்த நிலையில் நிற்கிறோம்., பிறகு எதிர்காலத்தில் சென்றடைய வேண்டிய இலக்கு என்ன என்பதைச் சீர்தூக்கிப் பார்த்து திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்த வேண்டும்.
அதிலும் குறிப்பாக தீன் இறைமார்க்கம் தொடர்பான கல்வியை குர்ஆன், நபிமொழிகளின் வழிகாட்டுதல்களை மக்களுக்கு அளிப்பதில் கண்காணிப்பு மிகவும் அவசியம்! அதில் அலட்சியம் செய்வதன் பின் விளைவுகளைக் கணக்கிடவே முடியாது! குறிப்பிட்ட காலத்துடன் அவை முடிந்து விடாமல் காலாகாலம் தொடர்வதையும் காணலாம்! இன்று உலகளாவிய முறையில் நம் சமுதாயத்தில் ஏற்பட்ட சீரழிவுகளும் சமுதாயத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளும் அந்த அலட்சியத்தினால் ஏற்பட்ட விளைவுகளே என்பதை எவரும் மறுக்க முடியது!
இதோ! பாருங்கள்! வஹி எனும் இறைவேதச் செய்தி மனிதர்களிடம் கூடுதல் குறைவின்றி போய்ச் சேரவேண்டும் என்பதே இலட்சியம்! அந்தப் பணியை நபியவர்கள் எவ்வாறு மேற்கொள்கிறார்கள் என்பதை அல்லாஹ் கண்காணித்தான் என்றும் அது நபியவர்களின் இளமைப் பருவம் முதலே இருந்து வந்தது என்றும் குர்ஆன் எடுத்துரைக்கிறது! அதில் நமக்குத் தக்க படிப்பினையும் உள்ளது!
ஆம்! நபியவர்கள் அநாதையாகப் பிறந்தார்கள். ஏழையாகவே வளர்ந்தார்கள்! ஆனால் ஏழ்மை மற்றும் ஆதரற்ற நிலையின் தீய தாக்கங்களிலிருந்தும் தாழ்வு மனப்பான்மையிலிருந்தும் நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பாதுகாப்பு அளித்தான்!
குர்ஆன் ஓரிடத்தில் இதனை அழகாகக் குறிப்பிடுகிறது: அவன் உம்மை அநாதையாகக் காணவில்லையா? பிறகு (உமக்குப்) புகலிடம் அளித்தான் அல்லவா? மேலும் அவன், உம்மை வழியறியாதவராய்க் கண்டான்., பிறகு நேர்வழி காண்பித்தான்! மேலும் அவன் உம்மை ஏழையாகக் கண்டான்., பிறகு செல்வத்தை அளித்தான். (93: 6-8)
நபி(ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்படுவதற்கு முன்பும் நல்லொழுக்கத்தைப் பேணுபவர்களாகவே இருந்தார்கள். ஆயினும் தீனை -இறைமார்க்கத்தை மக்களிடம் சேர்ப்பிப்பதில் எத்தகைய உயர்ந்த பண்பட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நபியவர்களைக் கண்காணித்து நெறிப்படுத்திய வரலாற்றைக் குர்ஆனில் காணலாம்!
ஒரு தடைவை நபி(ஸல்) அவர்கள் குறைஷி குலத் தலைவர்களிடம் இஸ்லாத்தின் அழைப்பை எடுத்து வைத்து விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கிடையில் இப்னு உம்மி மக்தூம்(ரலி) என்கிற ஒருமனிதர் அவர் கண்பார்வை இழந்தவர் நபியவர்களைத் தேடி வந்தார். அல்லாஹ் வழங்கிய அறிவுஞானத்தில் தனக்கும் சிறிது கற்றுத்தருமாறு கோரிக்கை வைத்தார். அதையை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருந்தார்! அவர் பார்வை இல்லாதவர் என்பதால் நபி(ஸல்) அவர்கள் அழைப்புப் பணியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது அவருக்குத் தெரியவில்லை! அவ்வாறே தொடர்ந்து அவர் சொல்லிக்கொண்டிருந்தது நபியவர்களின் பணிக்கு இடையூராக இருந்தது. எனவே அவரது விஷயத்தில் நபியவர்கள் கடுகடுப்பு அடைந்தர்கள்! அப்பொழுது பின்வரும் வசனங்களை இறக்கியருளி அந்தப் போக்கு கூடாது என்று அல்லாஹ் அறிவுறுத்தினான்:
அவர் முகம் சுளித்தார்., புறக்கணித்துவிட்டார்,. அந்தப் பார்வையிழந்தவர் அவரிடம் வந்ததற்காக! அவருக்குத் தெரியுமா, என்ன? அந்தப் பார்வையிழந்தவர் சீர்திருந்தக் கூடும்! அல்லது அறிவுரைக்குச் செவிசாய்க்கக்கூடும் என்பது! அந்த அறிவுரை அவருக்குப் பயனளிக்கலாம்; என்பது (அவருக்குத் தெரியுமா, என்ன?)’ (80 : 104)
– இந்தக் கண்காணிப்பு, அழைப்புப் பணியின் விஷயத் தில் மிகச் சிறந்த முன்மாதிரியை நபி(ஸல்) அவர்களிடம் தோற்றுவித்தது. ஆம்! இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்களைக் காணும் பொழுதெல்லாம் நபி(ஸல்) அவர்கள் எவரது விஷயத்தில் என் இரட்சகன் என்னைக் கண்டித்தானோ அத்தகைய தோழரோ வருக என்று சொல்லி அவர்களை வரவேற்பார்கள்!

கல்விப் பணி வெற்றி பெறுவதற்குக் கண்காணித்தல் மிகவும் முக்கியமாகும்.

கல்விப் பணி வெற்றி பெறுவதற்குக் கண்காணித்தல் மிகவும் முக்கியமாகும்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: என் இறைவன் எனக்கு மிக அழகிய நல்லொழுக்கப் பயிற்சி அளித்தான். எவ்வாறு எனில், (குர்ஆன் வசனத்தின் மூலம்) அருளினான்: (நபியே!) மென்மையை மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! நன்மை புரியுமாறு ஏவீராக! மேலும் அறிவீனர்களை விட்டும் விலகியிருப்பீராக! (7 : 199)
இதேபோல் நபி(ஸல்) அவர்களும் தம் தோழர்களைக் கண் காணித்தார்கள், இஸ்லாத்தின் போதனையை அழைப்புப் பணியை எவ்வாறு அவர்கள் மேற்கொள்கிறார்கள்? தீனின் பணிகளை ஆற்றும் தகுதியை எப்படி வளர்த்துக் கொள்கிறார்கள்? என்று! அதனால் தான் நபியவர்களின் போதனைகள் அவற்றை மக்கள் சரியாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் மனத்தில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்ளும் வகையிலும் முழுத் தெளிவுடன் அமைந்திருந்தன!
மக்களுக்கு மத்தியில் எழும் பிரச்னைகளுக்குத் தீர்ப்பு அளிப்பதில் தோழர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் நபியவர்கள் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு தடவை இரு மனிதர்கள் தகராறு செய்து கொண்டு நபியவர்களிடம் வந்தார்கள். அப்பொழுது அவர்களிடையே தீர்ப்பு அளிக்குமாறு நபியவர்கள் என்னிடம் சொன்னார் கள். நான் சென்னேன்: அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இருக்கும் பொழுதா?,, நபியவர்கள், ‘ஆம்’ என்றார்கள். அதற்கு நான் எதன் அடிப்படையில் நான் தீர்ப்பு அளிக்க வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்: நீ நன்கு ஆராய்ந்து, அதன்படி சரியாகவே தீர்ப்பளித்து விட்டீராயின் உமக்கு பத்து மடங்கு கூலிகள் கிடைக்கும். நீர் நன்கு ஆராய்ந்தே தீர்ப் பளித்தீர்., ஆயினும் அது தவறாகிவிட்டதெனில் உமக்கு ஒரு கூலி உண்டு!,, (நூல் : தாரகுத்னி)
மற்றொரு நிகழ்ச்சி: உக்பா பின் ஆமிர்(ரலி) அவர்களும் ஒரு நிகழ்ச்சியை அறிவித்துள்ளார்கள்: ஒரு தடவை தகராறு செய்து கொண்டு இரு மனிதர்கள் வந்தபொழுது என்னிடம் நபியவர்கள் சொன்னார்கள்: உக்பாவே! இவ்விருவரிடையே தீர்ப்பு வழங்குவீராக (நூல்: தாரகுத்னி)
ஏனெனில் இவ்வுலகத்தில் இறைமார்க்கத்தை நிலை நாட்டும் திறனும் தகுதியும் உள்ள செயற்துடிப்புள்ள தோழர்களை அடுத்து வரும் சந்ததிகளுக்கு அதில் ஒரு முன்மாதிரியாய் விளங்கும் உயிர்த்துடிப்புள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்பதே நபி(ஸல்) அவர்களது இலட்சியமாக இருந்தது. அப்படிப்பட்ட வகையில் தம் தோழர்களைத் தயார் செய்து அதில் நபியவர்களுக்கு முழுமன நிறைவு வந்த பொழுது நேர்வழிபெற்ற என்னுடைய பிரதிநிகளைப் பின்பற்றுங்கள் என்பதாக மக்களுக்குக் கட்டளையிட்டார்கள், நபியவர்கள்! இது எதைச் சுட்டிக்காட்டுகிறது? இத்தகைய கல்விப் பணிகள் வாழையடிவாழையாக இந்தச் சமுதாயத்தில் தொடர வேண்டும் என்பதைத்தானே! எனவே நாமும் இறை வழிகாட்டலின் அடிப்படையில் கல்விப் பணிகளைத் தொடர்வோம்., அதனைக் கடமையென ஏற்று நிறைவாய்ச் செய்வோம்.. நிறையருள் பெறுவோம்!

Related Post