கல்வியே சிறந்த சொத்து..!

– அப்துல்லாஹ்

உணவு, உடை, இடம், மருந்து ஆகியவை எவ்வாறு ஒரு மனிதனுக்கு இன்றியமையாத் தேவைகளோ அவ்வாறே கல்வி

உணவு, உடை, இடம், மருந்து ஆகியவை எவ்வாறு ஒரு மனிதனுக்கு இன்றியமையாத் தேவைகளோ அவ்வாறே கல்வி

துவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு!  (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக! மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்; மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

உணவு, உடை, இடம், மருந்து ஆகியவை எவ்வாறு ஒரு மனிதனுக்கு இன்றியமையாத் தேவைகளோ அவ்வாறே கல்வி கற்பதன் தேவையும் எந்தவித்திலும் முக்கியத்துவம் குறைந்ததல்ல! ஏனெனில் தீன் – இறைமார்க்கமும் உலக வாழ்வும் செம்மையாய் அமைவது கல்விப் பணியில் நாம் மேற்கொள்ளும் தொய்வில்லாத ஈடுபாட்டைப் பொறுத்ததேயாகும்.
ஏனெனில் தீய கொள்கைவாதிகளும் தீமை விரும்பிகளும் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தியே தங்களுடைய நச்சுக் கருத்துக்களைப் பரப்புகின்றனர். இதே போன்றே நம் சமுதாய மக்களிடையே பல்வேறு அநாச்சாரங்களும் அதனால் ஏற்பட்ட மோதல்களும் பிரிவுகளும் பின்னடைவுகளும் சீரான கல்வி அறிவின்மையால் விளைந்த தீய விளைவுகளே என்பதையும் யாரும் மறுக்க முடியாது!
இதேபோல் இன்றைய நவீன கண்டுபிடிப்புகளாலும் தகவல் தொடர்பின் முன்னேற்றங்களாலும் ஒரு குக்கிராமமாகச் சுருங்கி வரும் இன்றைய அவசர உலகில் பிறருடன் ஈடுகொடுத்து நாமும் வாழ வேண்டுமானால் சீரான சிறப்பான கல்விப் பணியின் மூலம் தான் அது சாத்தியமாகும்.
இங்கு நாம் கல்விப்பணிக்கு இஸ்லாம் வழங்கும் வழிகாட்டுதல்களை மூன்று கூறுகளாகப் பரித்து விரிவாகப் பார்ப்போம்.
கற்றல்
கல்வி தேடுவதே மனிதனின் முதல் கடமையென இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஓதுவீராக, படிப்பீராக எனும் கட்டளை கொண்ட வசனம் தான் குர்ஆனில் முதன் முதலில் இறங்கியது! மேலும் நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான்: ‘என் இறைவனே! எனக்கு அதிக ஞானத்தை வழங்குவாயாக என்று இறைஞ்சுவீராக ‘ (20:114) மேலும் நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும்;,, (இப்னு மாஜா)
மட்டுமல்ல இஸ்லாத்தின் பார்வையில் கல்வி கற்பது மிக உயர்ந்ததோர் இறைவழிபாடாக உள்ளது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கற்றறிந்தவர், வணக்கசாலியைக் காட்டிலும் பெற்றிருக்கும் சிறப்பு, ஏனையக் கோளங்களைக் காட்டிலும் முழு நிலா பெற்றுள்ள சிறப்புப் போன்றதாகும். மேலும் கற்றறிந்தவர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர். திண்ணமாக நபிமார்கள், தங்க,வெள்ளி நாணயங்களை அனந்தரச் சொத்தாக விட்டுச் செல்லவில்லை! அவர்கள் விட்டுச் சென்றதே கல்வி ஞானத்தைதான்! எனவே எவர் அந்தக் கல்வியைக் கற்றெடுத்தாரோ அவர் நிறைவான பாக்கியத்தைப் பெற்றவர் ஆவார் ‘ (நூல்: திர்மிதி)
இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் அவையில் அமர்ந்து கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவர் வஹ்ப் என்பார் திடீரென எழுது கோலையும் பலகையையும் மூலையில் வைத்து விட்டு இரண்டு ரக்அத் தொழுவதற்காக எழுந்து நின்றார். இதனைக் கண்ணுற்ற இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: ‘அன்பு மாணவரே! இதுவரையில் எந்த ஈடுபாட்டில் இருந்தீரோ அதுதான் சிறந்தது., இப்பொழுது நீர் நிறைவேற்றப் போகும் தொழுகையைக் காட்டிலும்!’
கல்வி கற்பது அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது போன்றதாகும். அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: எவர் கல்வியைத் தேடிப்புறப்பட்டாரோ அவர் அல்லாஹ்வின் பாதையில் உள்ளவர் ஆவார்., திரும்பி வரும் வரையில்!, (நூல்: திர்மிதி)
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எவர் நமது இந்த மஸ்ஜிதுக்கு வந்து கல்வி கற்கிறாரோ அல்லது கற்றுக் கொடுக்கிறாரோ அவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவர் போன்றாவார். மேலும் கல்வி ஈடுபாடல்லாத வேறு நோக்கத்திற்காக வருபவருக்கு உவமை யாதெனில், ஒரு மனிதரைப் போன்றது., அவருக்கு ஒரு பொருள் பிடித்தமாக இருக்கிறது., ஆனால் அதை அடையும் பாக்கியம் அவருக்குக் கிடைக்கப் பெறவில்லை. (ஹாகிம்)
ஒரு மனிதன் கல்வி கற்பதற்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் கஷ்டமும் சுவனத்தை நோக்கிச் செல்லும் பாதையை அவன் முன்னால் திறந்து வைக்கிறது! நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ஒருவர் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடந்து சென்றால், சுவனத்தை நோக்கிச் செல்லும் பாதையை அல்லாஹ் அவருக்கு இலகுவாக்கிக் கொடுக்கிறான்,, (நூல்: புகாரி: முஸ்லிம்)

இஸ்லாத்தின் பார்வையில் கல்வி கற்பது மிக உயர்ந்ததோர் இறைவழிபாடாக உள்ளது

இஸ்லாத்தின் பார்வையில் கல்வி கற்பது மிக உயர்ந்ததோர் இறைவழிபாடாக உள்ளது

கல்வி கற்பிக்கும் அவைகளில் ஆர்வத்துடன் வந்து அமர்ந்து பயன் பெறுமாறு நபியவர்கள் ஆர்வமூட்டுகிறார்கள். வாகித் பின் ஹாரிஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் தோழர்களுடன் அமர்ந்திருந்த பொழுது மூன்று பேர் மஸ்ஜிதை நோக்கி வந்தார்கள். இருவர் நபியவர்களின் அவைக்கு வந்தார்கள். இருவரில் ஒருவர் அவையில் காலியாக உள்ள இடத்தைக் கண்டு அதில் அமர்ந்தார். மற்றொருவர் கடைசி வரிசையில் அமர்ந்தார். மூன்றாமவர் திரும்பிச் சென்று விட்டார். போதனை முடிந்த பிறகு நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்: மூன்று பேரைக் குறித்து நான் உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? அவர்களில் ஒருவர் அடைக்கலம் தேடினார்., அல்லாஹ் அவருக்கு அடைக்கலம் அளித்தான். மற்றொருவர் வெட்கப்பட்டார். அல்லாஹ்வும் அவருக்கு வெட்கத்தையே பதிலாக அளித்தான். மூன்றாமவர் புறக்கணித்துச் சென்றார். அல்லாஹ்வும் அவரைப் புறக்கணித்தான்’ (நூல்: புகாரி, முஸ்லிம்)
கல்வி போதிக்கும் அவையில், வருவோருக்கு இடமளித்து உதவ வேண்டும்., இது அந்தஸ்துகள் உயரவும் முன்னேற்றம் காணவும் வழி அமைத்துக் கொடுக்குமென குர்ஆன் குறிப்பிடுகிறது!
இறைநம்பிக்கை கொண்டவர்களே! அவைகளில் நகர்ந்து இடம் ஏற்படுத்திக் கொடுங்கள் என்று உங்களிடம் கூறப்பட்டால் இடம் ஏற்படுத்திக் கொடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு இடம் ஏற்படுத்தித் தருவான். மேலும் எழுந்து செல்லுங்கள் என்று உங்களிடம் சொல்லப்பட்டால் எழுந்து செல்லுங்கள். உங்களில் நம்பிக்கையாளர்களுக்கும் ஞானம் வழங்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் உயர்ந்த பதவிகளை வழங்குவான். மேலும் நீங்கள் செய்பவை அனைத்தையும் அல்லாஹ் அறியக்கூடியவனாக இருக்கிறான்'(58 :11) இந்த வசனத்தின் கருத்தில் கல்விக் கூடங்களில் மாணவர்களுக்கு இடம் கிடைக்க ஏற்பாடு செய்வது, பாடநூல்கள் வழங்குவது போன்ற எல்லா உதவிகளும் அடங்கும்.
ஹஸன் பின் அலீ(ரலி) அவர்கள் கூறினார்கள்: கல்வி கற்றுக் கொள்ளுங்கள். சமுதாயத்தில் நீங்கள் சிறியவர்களாக இருந்தாலும் நாளை பெரியவர்களாய் ஆகிவிடுவீர்கள்! மனப்பாடம் செய்ய இயலாதவர் எழுதி வைத்துக் கொள்ளட்டும்’ (நூல்: ஸுனனுல் குப்ரா)
உர்வா பின் ஸுபைர்(ரலி) அவர்கள் தம் பிள்ளைகளுக்குக் கூறினார்கள்: என்னிடத்தில் வந்தமர்ந்து கல்வி கற்றுக் கொள்ளுங்கள். திண்ணமாக நீங்கள் நாளைய சமுதாயத்தில் பெரியவர்களாய் ஆகிவிடுவீர்கள். நான் சிறுவனாக இருந்த பொழுது என்னை யாரும் பார்க்கவில்லை. இப்பொழுது நான் பெரியவயதை அடைந்தn பாழுது மக்கள் என்னிடம் வந்து மார்க்க விஷயங்களைக் கேட்ட ஆரம்பித்து விட்டனர். ஒரு மனிதனிடம் தீன்-இறைமார்க்க விஷயங்களைக் குறித்து கேட்கப்படும்பொழுது அவற்றை அவன் அறியாதிருந்தான் எனில் அதை விடவும் கடினமான நிலை வேறு ஒன்றும் இல்லை ‘ (நூல்: இப்னு அப்துல் பர் (ரஹ்) அவர்களின் கல்விச் சிறப்பு)
அறிஞர் லுக்மான் தம் பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்: என் அருமைப் பிள்ளைகளே! கற்றறிந்தவர்களுடன் அமர்ந்திருங்கள். அவர்கள் முன்னிலையில் மண்டிக்காலிட்டுப் பணிவுடனே இருங்கள். திண்ணமாக அல்லாஹ், வான் மழையின் மூலம் தரிசு நிலங்களை உயிர்ப்பிப்பது போன்று கல்வி ஞானத்தின் மூலம் இதங்களை உயிர்ப்பிக்கிறான்’ (ஸுனனுல் குப்ரா)

Related Post