கல்விக்கான தேடலில்..!

கட்டுரையாளர் மற்றும் கட்டுரை பற்றி..!

சகோதரர் ஆபீதீன் ( Dr.  Captain.   S.ABIDEEN ) இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியராக பணி புரிகிறார். ( Assistant Professor  of Zoolgoy, Dr.Zakir u;usain College , Ilayangudi)  . கல்லூரி விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு  இஸ்லாமிய பகுதிகளில் உள்ள   பள்ளி கல்லூரிகளில்  உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சிகள், தன்நம்பிக்கை மேம்பாட்டு பயிற்சிகள்  குறித்த சிறப்பு நிகழ்சிகளை நடத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் 250 க்கும் மேற்பட்ட  நிகழ்சிகள் மூலம்  ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களை அல்லாஹ்வின் உதவியால் சந்தித்து  கல்வி விழிப்புணர்வு பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். . தனது கல்விப் பயணத்தில் அவர் கண்ட அனுபவங்களும் ஆதங்கங்களுமே இந்த கட்டுரை வரிகள்.

கல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா?

கல்விக்கான தேடலில்..!

கல்விக்கான தேடலில்..!

 

 என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெண்மணியும் -டீக்கடை பேஸ்புக் குழுமமும் நடத்திய கட்டுரைப்போட்டியில் முதல் இடம் பெற்ற சகோதரர் ஆபிதீன் அவர்களின் கட்டுரை இது. 

(நபியே ! யாவற்றையும்)  படைத்த உமது இறைவனின் திருநாமத்தால் நீர் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து  படைத்தான். ஓதுவீராக! உமது  இறைவன் மாபெரும் கொடையாளன் அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக்கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாததையெல்லாம் கற்றுக்கொடுத்தான்.(அல்குர்ஆன்96:1:5 )

இஸ்லாம் என்பது இன்றைக்கு உலகம் முழுவதும் பரவி பலகோடி மக்களின் இதயங்களில் நீக்கமற வாழுகின்ற வழிமுறையாக, வாழ்க்கை நெறியாக உள்ள ஓர் அற்புத மார்க்கம். அதே வேளையில், இந்த மார்க்கத்தை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள்;, வேண்டுமென்றே  புனித இஸ்லாத்தைப்பற்றியும் அதன் உண்மைகளைப்பற்றியும் திரித்தும் சிதைத்தும் கூறிக்கொண்டும் இஸ்லாத்திற்கு இல்லாத முகங்களையும், நிறங்களையும் இருப்பதாகக் கூறிக்கொண்டும் அதன் புனிதத்தை குறைப்பதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஓரிரு நூற்றாண்டுகளாக இஸ்லாத்தை நோக்கி திட்டமிட்டு எறியப்படும் அம்புகளை எதிர்கொள்ளும் விவேகத்தையும் இஸ்லாமியர்கள் இழந்து வருவதும் கசப்பான உண்மை. காரணம்…  இஸ்லாமியர்கள், கல்வி ஞானத்தைப் புறக்கணித்தது.

எனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானம் இல்லாமல் தன்மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள். (அல் குர்ஆன்: 30 -29 ) இறைவனால் அருளப்பெற்ற திருமறை இந்த உலகிற்கு அறிவைத் தந்தது, அறிவியலை தந்தது. ஒழுக்கத்தையும் உண்மையையும் கற்றுக் கொடுத்தது. சட்டத்தையும், நீதியையும் போதித்தது. திருமறை வழியில் இந்த உலகத்தை ஆளக்கூடிய தகுதிபடைத்த இஸ்லாமிய சமுதாயம். திருக்குர்ஆன் அழுத்திச் சொன்ன ஆக்கப்பூர்வமான கல்வியை

அலட்சியப்படுத்திய காரணத்தினால் வீறுகொண்டு நிற்கவேண்டிய நாம் வீரியம் இழந்து நிற்கிறோம்..

கல்விக்கு கண்தந்த இஸ்லாம்:

உலகில் உள்ள எந்த சமூகமும் இஸ்லாம் மார்க்கம் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது போன்று வலியுறுத்தியது கிடையாது. கல்வி என்றால் என்னவென்றே புரியாத அந்தக் காலத்தில் கல்வியைக் கடமையாக்கியது இஸ்லாம். ஆண்களுக்கே கல்வி

இல்லாதிருந்த  நிலையில் , அன்று வெறும் போகப்பொருளாகக் கருதப்பட்ட பெண்களுக்குக்கும் கல்வியை கட்டாயமாக்கியது இஸ்லாம். இறைவன் அருளிய திருக்குர்ஆனில் சுமார் 750 வசனங்கள் கற்றுக்கொள்ளவதைப் பற்றி கூறுகிறது.  கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் கல்வியின் மாண்புகளையும் மகத்துவத்தையும் தனது வாழ்நாட்களில் பலமுறை வலியுறுத்திச் சென்றுள்ளார்கள்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஒருமுறை, நபியே..! திருமறையை ஓதுவதைவிட- கற்றுக்கொள்வது சிறந்ததா? என்று தோழர்கள் கேட்டபோது அதற்கு, அறிவின் மூலமாக அன்றி வேறு எப்படி திருமறையால் உங்களுக்கு நன்மை செய்ய முடியும்? என்று கேட்டார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள் ‘யார் கல்வியின் பாதையை தேடிச்செல்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் பாதையை  லேசாக்குகிறான் ‘ என்றார்கள் (நூல்: முஸ்லிம்)

நான் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் (எனது கனவில); ஒரு பால்கோப்பை என்னிடம் கொண்டுவரப்பட்டது .உடனே நான் (அதிலிருந்த பாலை ) தாகம் தீருமளவு குடித்துவிட்டேன். அது என் நகக்கண்கள் வழியாக வெளியேறுவதைப் பார்த்தேன். பின்னர் மீதியிருந்ததை  உமர்(ரலி) அவர்களுக்கு கொடுத்தேன். அப்போது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ! அந்தப் பாலுக்கு தாங்கள் என்ன விளக்கம் தருகிறீர்கள் ? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘கல்வி’ என்று கூறினார்கள்.  (நபி மொழி –புகாரி.)

கல்வி கற்பது என்பது அனைத்து முஸ்லீம்கள் மீதும் கடமையாகும் என நபி(ஸல்) அறிவிப்பதாக அனஸ்(ரலி) கூறியதை நூல் பைஹகியில் காணமுடிகிறது. சீனம் சென்றும் சேர்க்க நல்லறிவை, போராளி சிந்தும்  இரத்தத் துளிகளைக் காட்டிலும் ஒரு அறிஞனின் பேனா மை புனிதமானது. போன்ற  கல்வியின் மாண்புகள் மற்றும் மகத்துவங்கள் பற்றி நூற்றுக்கணக்கான ஆதாரப்பூர்வ ஹதீதுகள் நாம் அறிந்திருக்கிறோம். இஸ்லாம் மதித்த கல்வியை இஸ்லாமியர்களாகிய நாம் எந்தளவு மதித்திருக்கிறோம் என்பது தான் இந்தக்கட்டுரையின் சாரம்.

தமிழக முஸ்லிம்களின் கல்விப்பாதை  அன்று முதல் இன்று வரை

தான் நாடியவர்களுக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கிறான். (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ ,அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயம் ஆகிவிடுகிறார். எனினும், நல்லறிவுடையோர் தவிர வேறுயாரும் இதை சிந்தித்துப்பார்பதில்லை.   (அல்குர்ஆன் – 2 :269)

ஒரு காலத்தில் கல்வியை கையில் வைத்துக் கொண்டு பல்வேறு சாதனைகளையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் இந்த உலகத்திற்கு இஸ்லாமிய மேதைகள் அள்ளித் தந்தனர். ஆனால் தொடர்ந்து வந்த தலைமுறையினர் கடந்த நானூறு ஆண்டுகளாக கல்வியில் அலட்சியம் காட்டியதனால், இஸ்லாமியர்களின் இன்றைய அவலநிலையை நமக்கு நாமே விளக்க தேவையில்லை. உலகக்கல்வியிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கி நின்ற சமுதாயம், கடந்த நூற்றாண்டுகளில் நவீன கல்விச் சாலைகளில் எப்படி நடக்க ஆரம்பித்தது என்பதை புரிந்து கொள்வது அவசியம்.

அன்றைய காலங்களில் அரசாங்கம் கல்விக்கூடங்கள் பல தொடங்கி அதில் பல்வேறு சமுதாயத்தினர் கல்வி கற்று வந்தாலும், முஸ்லீம் சமுதாயத்தினர் மட்டும் நவீன கல்வியை ஏற்றுக்கொள்ள மிகப்பெரிய கருத்துப்போராட்டம் நடத்தி வந்தனர். நாளடைவில் தங்களின் சொந்த முயற்சியிலும் அரசின் உதவியாலும் முஸ்லீம்கள் தாங்களாகவே நடத்தும் ஒரு சில கல்வி நிறுவனங்களை தொடங்க முன் வந்தனர். தமிழக அளவில் கி.பி.1850 முதல் இன்று வரை முஸ்லிம்களின் கல்வி ஆர்வத்தையும் வளர்ச்சியையும் தெரிவதன் மூலம் நமக்கு ஒரு புரிதல் கிடைக்கும்.

ஆங்கிலேயர்கள் காலத்தில் முஸ்லீம்கள் ‘மக்தப்’ மற்றும் ‘மத்ரஸா’க்களில் கல்வி பயின்றனர். எழுதுதல் மற்றும் கணிதப்பாடங்கள் மக்தப்களிலும், இலக்கணமும் புவியியலும் மதரஸாக்களிலும் பாடமாகச் சொல்லித்தரப்பட்டது. அன்றைய ‘மக்தப்’ ‘லெப்பை பள்ளிகள்’ என்றும் ஆசிரியர்கள் ‘லெப்பை’ என்றும் பெயர் பெற்றிருந்தனர்.

சென்னையில் 1851 அக்டோபர் 28-ம் நாள் நவாப் குலாம் கவுஸ்கான் பகதூர், ‘மதர்ஸா-இ-ஆஸம்’ என்னும் மதரஸாவை தொடங்கினார். பிறகு 1959-ல் உயர்நிலைப் பள்ளிக் கூடமாக மாற்றப்பட்டு தமிழகத்தின் முதல் நவீன பள்ளிக்கூடம் ‘மதர்ஸா-இ-ஆஸம’ இன்று வரை செயல்பட்டு வருகிறது. அன்றைய ஆங்கிலேய ஆட்சியில் பெரிதும் அதிருப்தியடைந்த முஸ்லீம்களின் அதிருப்தியை குறைப்பதற்காக கிழக்கிந்திய நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அரபிக் மதரஸா ஒன்றை தொடங்கினர். மேலும் அன்றைய மதராஸ் ஆளுநர் ‘சர்.இராபர்ட் ஹோபர்ட’ முஸ்லீம்களின் கோரிக்கையை ஏற்று 1873-ல் இராயப்பேட்டை அஞ்சல் நிலையத்திற்கு அருகே உயர்நிலைப்பள்ளிக்கூடம் துவக்க உதவி செய்தார். பிறகு அது உட்ஸ் சாலைக்கு மாற்றப்பட்டது.

1857ல் சென்னை பல்கலைக்கழகம் உருவானது. அதில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்தனர் ஆனால், 1871-ல் தான் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்து முதல் முஸ்லீம் மாணவர் பட்டம் பெற்றார். அவர் தான் சென்னை மாகாணத்தின் முதல் முஸ்லீம் பட்டதாரி. 1885-ல் நவீன கல்வியை வளர்ப்பதற்காக ‘அஞ்சுமன்-இ-இஸ்லாமியா’ என்ற அமைப்பு துவங்கப்பட்டது. அந்த அமைப்பு ‘அஞ்சுமன்-இ-முஃபித்-இ-இஸ்லாம்’ என்ற பெயரில் ஒரு தொழிற்பள்ளியை முஸ்லீம்களுக்காக அமைத்தது.

1901-02-ம் கல்வியாண்டின் நிலவரப்படி தமிழகத்தில் ஆரம்ப பள்ளிகளில் பயின்ற முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை 44,705. இன்னொரு ஆச்சரியமூட்டும் மற்றொரு விபரம், தமிழக அரசின் புள்ளி விபரப்படி 1902-03-ம் கல்வியாண்டில் தமிழக கல்லூரிகளில் படித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 10 மாத்திரமே. அன்றைய காலகட்ட இஸ்லாமிய சமுதாய ஆர்வலர்கள் முஸ்லிம்களின் கல்வி பின்னடைவை கண்டு, முஸ்லீம்களின் கல்விநிலையை அதிகரிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினர். இது குறித்து சர்.சையது கான் துவங்கிய ‘முகம்மதின் கல்வி கூட்டமைப்பு’ தனது உறுப்பினர்கள் கூட்டத்தை 1901-டிசம்பர் 28-ம் தேதி சென்னை தேனாம் பேட்டையில் கூட்டியது.

அதே காலகட்டத்தில் 1902-ல் துவங்கப்பட்ட தென்னிந்திய ‘முகம்மதன் கல்வி சங்கம்’ (ஆநுயுளுஐ) தனது கல்வி சேவையை முஸ்லீம்களுக்காக செய்து வந்தது. பிறகு அது 1946-ல் பெயர் மாற்றப்பட்டு ‘தென்னிந்திய முஸ்லீம் கல்விச் சங்கம்’  (ஆநுயுளுஐ) என்ற பெயரில் இன்றும் செயல்பட்டு வருகிறது. 1915 ஏப்ரல் 12-ல் சென்னை ஜார்ஜ் டவுனில் ‘பெண்டு லாண்டு’ பிரபு ஒரு முஸ்லீம் விடுதியை துவங்கி வைத்தார். அது 1918-ல் அரசு மற்றும்  ஆநுயுளுஐ அமைப்பின் நிதி உதவியால் செயல்பட துவங்கியது. தென்னிந்திய கல்விச் சங்கம் பெண்களின் கல்வியிலும் ஆர்வம் காட்ட துவங்கியது. அதன் பயனாக கட்டாய தொடக்க நிலை பள்ளித்திட்டத்தில் புர்கா வசதியுடன் முஸ்லீம் மாணவிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அரசிடம் தொடர்ந்து முறையிட்டது. அதன் அடிப்படையில், 1943-ல் ஜார்ஜ் டவுனில் பெண்களுக்காகவும் கல்விச்சாலை ஒன்றை அரசு துவங்கியது. அதைத் தொடர்ந்து ஆநுயுளுஐ சங்கத்தின் தொடர்முயற்சியால் சென்னையில் 1951-ல் புதுக்கல்லூரி துவங்கப்பட்டது. அதே 1951-ம் ஆண்டில் தான் ‘தென்னிந்தியாவின் அலிகார் பல்கலைக்கழகம் என்று கருதப்படும் திருச்சி ஜமால் முகமது கல்லூரி’யும் உருவானது.

அதேபோல 1903-ம் ஆண்டு ‘வாணியம்பாடி முஸ்லீம்கள், முஸ்லீம் கல்விச் சங்கத்தை’ தோற்றுவித்து பிறகு 1916-ல் வாணியம்பாடி கல்விச் சங்கமாக உருவாகி 1919-ல் வாணியம்பாடியில் இஸ்லாமியா கல்லூரி துவங்கப்பட்டது.

தென்னிந்திய முஸ்லீம் கல்விச் சங்கத்தின் அன்றைய நிர்வாகிகளின் தொடர் வற்புறுத்தலின் பேரில் 1946-ம் ஆண்டு முஸ்லீம் மகளிருக்கென ஒரு தனிக்கல்லூரியை ‘ஹோபார்ட்’ பள்ளியின் வளாகத்தில் அரசு துவக்கியது. ஆனால் அன்றைய தமிழக காங்கிரஸ் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார், முஸ்லீம்களுக்கென பிரத்யோகக் கல்லூரி இயங்குவது சரியல்ல என்று கூறி அது 1948-ல் எத்திராஜ் என்பவருக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டது. முஸ்லீம் நிர்வாகம் மாற்றப்பட்டதோடு முஹம்மதன் கல்லூரிக்கு வழங்கப்பட்ட அரசு சலுகைகளும் நிறுத்தப்பட்டு பிறகு 1949-ல் அரசு கல்லூரியாக அது அறிவிக்கப்பட்டது. இன்றைய சென்னை எத்திராஜ் கல்லூரி அன்று முஸ்லீம்களுக்காக துவங்கப்பட்டு பிறகு பிடுங்கப்பட்டதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, அரசை நம்பியிருந்த இஸ்லாமிய கல்வி ஆர்வலர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு சுயமாக எழுந்து நிற்க தலைப்பட்டனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆங்காங்கே முஸ்லீம் கல்லூரிகள் உருவாக ஆரம்பித்தது. 1951-ல் ஒரே ஆண்டில் சென்னை புதுக்கல்லூரியும், திருச்சியில் ஜமால் முகமது கல்லூரியும் துவங்கப்பட்டது. 1954-ல் சென்னை ளுஐநுவு  மகளிர் கல்லூரியும் அதே ஆண்டு அதிராம்பட்டிணத்தில் காதர்மைதீன் கல்லூரியும் உருவாகின. 1956-ல் உத்தமபாளையத்தில் கருத்தராவுத்தர் கல்லூரியும், 1965-ல் மேல்விசாரத்தில் அப்துல் ஹக்கிம் கல்லூரியும்,   1968-ல் மதுரை வக்போர்டு கல்லூரியும், 1969-ல் ஆம்பூரில் மஜ்ஹருல் உலூம் கல்லூரியும், 1970-ல் இளையான்குடியில் டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியும், 1975-ல் சென்னை காயிதே மில்லத் கல்லூரியும் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட ஆரம்பித்தது. இவையனைத்தும் அரசு நிதியுதவியை பெற்று முஸ்லீம்களால் நடத்தப்படும் கல்லூரிகளாகும். 1980-க்குப் பிறகு தமிழகத்தில் தனியார் கல்லூரிகளுக்கான அரசு உதவி முழுவதுமாக நிறுத்தப்பட்டது. புதிதாக தொடங்கப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் சுயநிதியில் இயக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவானது.

1980-களுக்குப் பிறகும் சுயநிதியின் அடிப்படையில் முஸ்லீம்களின் கல்வி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் வளர ஆரம்பித்தன. தமிழகம் முழுவதும் இன்றைய நிலவரப்படி அதிகமான பள்ளிகள் முஸ்லீம் சங்கங்களால் நடத்தப்பட்டு வருகிறது. அதிகமான கலை அறிவியல், பொறியியல், பாராமெடிக்கல் போன்ற கல்லூரிகளும் முஸ்லீம் சமுதாயத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது. பல தொழில் நுணுக்க பயிற்ச்சி நிலையங்கள், ஐவுஐ, Pழடலவநஉhniஉ, அரபிக்கல்லூரிகள் போன்று அதிகமான உயர்நிலைக் கல்வி நிறுவனங்களும் முஸ்லீம்களால் நடத்தப்படுகின்றன. இவைகளில், கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் கல்லூரி, திருவாரூர் ராபியம்மாள் அகமது மைதீன் கல்லூரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி, ஐமான் கல்லூரி, சென்னை ஜஸ்டிஸ் பஷீர் அகமது கல்லூரி போன்ற கல்லூரிகள் பெண்கள் கல்லூரிகளாக செயல்பட்டு வருகிறது. ஆக, தமிழக முஸ்லீம்கள் துவங்கிய பள்ளிகள், கல்லூரிகள் நமது மாணவர்கள் படிப்பதற்கு போதுமான எண்ணிக்கையில் இல்லாவிட்டாலும் தேவையான அளவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையை உருவாக்கித் தந்த வல்ல இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தி கொள்ளலாம்.

முஸ்லீம் நடத்தும் கல்லூரிகளில்… முஸ்லீம் மாணவர்கள் எண்ணிக்கை ?

எவர் தனது இளமையில் கல்வியைத் தேடுவதிலும் வணக்க வழிபாட்டிலும் வளர்ந்து பெரியவராகிறாரோ அவருக்கு நாற்பது ஸித்தீக்கீன்களின் நன்மை கிடைக்கும்.  (நபிமொழி )

இஸ்லாமியர்கள் நடத்தும் கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில் துவங்கப்பட்டாலும்,  அந்தந்த கல்லூரிகளில் படிக்கும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை என்ன என்பது அதிர்ச்சியான தகவல். 1903-ம் ஆண்டில் தமிழகத்தில் வெறும் 10 முஸ்லீம் மாணவர்கள் மட்டும் படித்த காலம் போய் 2002-2003 தமிழக புள்ளி விபரப்படி தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை 25,000க்கு மேலாக உயர்ந்துள்ளது. இன்று இலட்சத்தை கூட தொட்டிருக்கலாம். இந்த எண்ணிக்கை மேலோட்டமாக வளர்ச்சியாகத் தெரிந்தாலும் முஸ்லீம்களின் சதவிகித எண்ணிக்கையில் இது மிக மிக சொற்பமே.

இந்திய அரசால் நடத்தப்படும் அபுல் கலாம் ஆசாத் கல்வி அறக்கட்டளை, சிறுபான்மை கல்வி நிறுவனங்களின்

கல்விக்கான தேடலில்..!

கல்விக்கான தேடலில்..!

மேம்பாட்டிற்காக நடத்தப்படுகிறது. பல இலட்சக்கணக்கான நிதி உதவியையும் முஸ்லீம் கல்வி நிறுவனங்களுக்கு இந்த அறக்கட்டளை வழங்குகிறது. தமிழகத்தில் ஒரு சில பள்ளி கல்லூரிகள் மாத்திரமே இந்த அறக்கட்டளையின் மூலம் நிதியுதவி பெற முடிந்துள்ளது. காரணம், நிதியுதவி பெற இந்த அறக்கட்டளை விதிக்கும் நிபந்தனைகளில் ஒன்று, ‘முஸ்லீம்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் குறைந்தது 25 சதவீத மாணவர்களாவது படிக்க வேண்டும்’ என்பது. 25 சதவீத மாணவர்கள் முஸ்லீம் மாணவர்கள் கூட இல்லாததால், முஸ்லீமகளால் நடத்தப்படும் பல கல்வி நிறுவனங்கள் நிதியுதவியை பெற முடியாமல் தவிக்கிறது. இப்பொழுது தெரிந்திருக்கும் முஸ்லீம் கல்வி நிறுவனங்களில் படிக்கும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை. தமிழக அளவில் 1850 முதல் 1980 வரை மிக குறைந்த நிலையில் இருந்த கல்வி விழிப்புணர்வு 1980-க்கு மேல் ஓரளவு வேகமெடுத்து இருப்பது உண்மைதான். இருந்தாலும் இந்த மிகக் குறைந்த கல்வி வளர்ச்சியாவது ஆக்கப்பூர்வமாக இருக்கிறதா என்றால் கேள்விக் குறிதான் மிஞ்சுகிறது.

இன்றைய தமிழக இஸ்லாமியரின் கல்வி விழிப்புணர்வு – ஒரு பார்வை:

எந்த ஒரு சமுதாயமும் நல்வழியில் தன்னை மாற்றிக் கொள்ளாதவரை , அது மாறுவதற்கான சாத்தியம் இல்லை.   ( நபி மொழி  )

கடந்த காலங்களில் தமிழகத்தில் பல்வேறு நிலைகளில் கல்வி விழிப்புணர்வு காணப்படுகிறது. கல்வியின் தேவை மற்றும் அவசரம் குறித்து கல்வியறிவு குறைந்த பெற்றோர்கள்கூட .ஆர்வத்துடன் ஆலேசித்துக் கொள்வது நம் கண்கூட கண்டு மகிழ முடிகிறது.

 

 

Related Post