ஈரத்தை இணைத்து வைத்த ஈரம் … சுருதி மாறா தாயன்புச் சாகரம்.

ஸினூஃபா அன்ஸார்
வசந்தம்

பெண், அவள் கருணை கருப்பையில் ஆரம்பித்து கல்லறை வரை தொடரக் கூடியது. அவளின் படைப்பு கூட மென்

பெண், அவள் கருணை கருப்பையில் ஆரம்பித்து கல்லறை வரை தொடரக் கூடியது. அவளின் படைப்பு கூட மென்மை கலந்ததுவே! அவளின் பரந்த மனமும் விரிந்த சேவைகளும் இன்றைய காலத்தின் தேவைகள் மட்டுமல்ல அவைகள் காலத்தை காட்டும் கண்ணாடிகளும் கூட..!

பெண், அவள் கருணை கருப்பையில் ஆரம்பித்து கல்லறை வரை தொடரக் கூடியது. அவளின் படைப்பு கூட மென்மை கலந்ததுவே! அவளின் பரந்த மனமும் விரிந்த சேவைகளும் இன்றைய காலத்தின் தேவைகள் மட்டுமல்ல அவைகள் காலத்தை காட்டும் கண்ணாடிகளும் கூட..!

மை கலந்ததுவே! அவளின் பரந்த மனமும் விரிந்த சேவைகளும் இன்றைய காலத்தின் தேவைகள் மட்டுமல்ல அவைகள் காலத்தை காட்டும் கண்ணாடிகளும் கூட..!தனது சிறந்த குணங்களின் இமாலய எண்ணங்களால், அனைத்துவித இலட்சியங்களையும் அடைந்து கொள்வாள். அதிலும் இறைவனுடன் தொடர்பு கொண்ட ஒரு உண்மை உள்ளம்.., இறைநேசத்தின்பால் வாழும் இறையச்சமிக்க ஒரு உள்ளம் கொண்டவளோ உலகத்தையே வெல்லும் ஆற்றல் கொண்டவள்!ஆம்! இயற்கையாக அவளை சூழும் துன்ப நோய்களையும் கூடவே!

வளைகுடா நாடுகளுக்கும் பெண்களுக்கும் மிகப்பெரும் அளவில் தொடர்புண்டு என்பது பலரும் அறிந்த உண்மை! வறுமைக்கும் துன்ப துயரங்களுக்கும் அவர்களின் கடல் கடந்த பயணம்!அப்போது தன் தாராள மனதினால் தன்னால் பிரிக்க முடியா அன்பையும் நேசத்தையும் உறவையும் அவர்கள் தாங்கி தன் பொறுப்பானவர்களின் அவர்களின் எதிர் கால வெளிச்சத்திற்கு தன்னை மெழுகுவர்த்தியாக்குவாள்!
பெண்ணின் ஆளுமையை மென்மேலும் மேன்மைப்படுத்தும் ஒரு உண்மைச் சம்பவத்தின் அலசலிது.
ரியாத் மாநகரின் ஹுரைம்லா இடம். அங்கே ஒரு குடும்பத்தில்; புற்று நோயால் அவதியுரும் ஒரு பெண்ணைப் பராமரிக்க ஒரு பணிப் பெண் தேவைப்படுகின்றாள் அவர்களுக்கு! பணியாளர் அலுவலகம் மூலம் இந்தோனேஷியாவிலிருந்து ஒரு பணியாளப் பெண்மணியை கொண்டு வருகின்றனர். காலங்கள் யாருக்காகத் தான் காத்திருக்கும்? படுக்கையுடன் தான் இருந்தாலும் தன்னைக் கவனித்துக்கொள்ளும் அந்த பணிப்பெண்ணை கவனிக்காது இருக்கவி;ல்லை. அடிக்கடி அந்தப் பெண்ணின் ஆடை ஈரமாகி விடுவதைக் கண்ட அவள், ஒரு நாள் அந்தப் பணிப்பெண்ணை அருகில் அமர்த்திக் கேட்டாள்: ‘உன் ஆடையின் ஈரத்துக்கு என்ன காரணம்?’ அந்தப் பெண் அழுகையுடன் பேச ஆரம்பித்தாள்: ‘நான் என் 20 நாள் குழந்தையை தவிக்கவிட்டே இங்கு வந்துள்ளேன். அதற்குரிய உரிமையை நான் கொடுக்கத் தவறிவிட்டேன். அந்த உரிமை (தாய்ப்பால்) என் மேனியை நனைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வேதனையை என்னால் பொறுக்க முடியாது. ஒவ்வொரு நாளும் நான் அந்தத் துயரம் தாங்க முடியாது தவிக்கிறேன்!’ அவள் விழியோரம் கண்ணீர்த் திவலைகள் ஆறாய்!
ஆம்! உலகத்தை கண் விழித்துப் பார்த்து 20 நாளிலேயே பாசத்தின் உறைவிடமான அந்த தாயிடமிருந்து அந்தப் பச்

பெண், அவள் கருணை கருப்பையில் ஆரம்பித்து கல்லறை வரை தொடரக் கூடியது. அவளின் படைப்பு கூட மென்மை கலந்ததுவே! அவளின் பரந்த மனமும் விரிந்த சேவைகளும் இன்றைய காலத்தின் தேவைகள் மட்டுமல்ல அவைகள் காலத்தை காட்டும் கண்ணாடிகளும் கூட..!

பெண், அவள் கருணை கருப்பையில் ஆரம்பித்து கல்லறை வரை தொடரக் கூடியது. அவளின் படைப்பு கூட மென்மை கலந்ததுவே! அவளின் பரந்த மனமும் விரிந்த சேவைகளும் இன்றைய காலத்தின் தேவைகள் மட்டுமல்ல அவைகள் காலத்தை காட்டும் கண்ணாடிகளும் கூட..!

சிளம் மழலை பிரிக்கப்பட்டது. அந்தப் பணிப் பெண்ணின் துயரக் கதையைக் கேட்ட எஜமானி கவலையால் கணத்துப்போனாள். உடனே துரித நடவடிக்கையில் இறங்கலானாள். ஆம், அந்தஅடுத்த கட்ட நடவடிக்கை என்ன??
பணிப்பெண் அங்கு கொண்டு வரப்பட்டது இரண்டு வருட தவணையினடிப்படையிலேயே!! அவளின் இரண்டு வருட சம்பளமும் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பணிப்பெண்ணுக்குரியனவும்,அந்தக் குழந்தைக்குத் தேவையான பொருட்கள் யாவும் கொண்டு வரப்பட்டன. கொண்டு வரப்பட்டது. சகல வசதிகளுடனும் அவள் தன் தாயகம் செல்ல உடனே அனுமதி கொடுக்கப்பட்டதுடன், இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு திரும்பி வரவும் அவளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அந்தப் பணிப் பெண்ணின் எல்லையில்லா சந்தோஷத்திற்கு சொல்லவா வேண்டும்?
வளைகுடா நாடுகளில் கடுமைமிக்க உள்ளம் கொண்ட எஜமானிகளே அதிகம் என்பதை இந்த ‘உண்மை சித்தரித்தல்’ முறியடிக்கின்றது. இவ்வாறு ஏராளமாய் தாராளமாய் இருக்கும் உள்ளங்கள் நம்மத்தியில் உள்ளன! நாம்தான் அடையாளம் காணாது இருந்துகொண்டு ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு அனைத்து நல்இதயங்களையும் வசை பாடுகின்றோம். இந்த வஞ்சித்தல் நியாயமாகுமா, என்ன?
சில நாட்கள் கழிந்தன.மீண்டும் ஒரு தினம் அந்த எஜமானி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டாள் சோதனைக்காக !!என்ன ஆச்சரியம் அனைத்து வித சோதனைகளிலும் அவளுக்கிருந்த புற்று நோய் அறவே இல்லாமல் இருந்தது. மீண்டும் மீண்டும் சோதனைக்குப் பிறகும் அவளின் நோய் பூஜ்ய சதவீதமே காட்டியது.
ஆம்! உங்களுக்கு ஏற்படுகின்ற நோய்களை தர்மம் செய்வது கொண்டு நிவர்த்தி செய்து (குணப்படுத்திக்) கொள்ளுங்கள் என்ற நாயகம் (ஸல்) அவர்களின் கூற்று எத்துணை நிதர்சனமானது!(ஆதாரம்:அல்லாமா அல்பானீ,ஸஹீஹூல் ஜாமே)
அன்பு நெஞ்சங்களே! இந்த சம்பவம்; உண்மையில் நடந்திருக்கலாம். அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆனால் படிப்பினைகளும் அது பெற்றுத் தரும் பயிற்சிகளும் உண்மையே!! முனித வாழ்விற்குத் தேவையான அம்சங்களே!!
நடக்கும் பாதங்கள் கோடி பெறும் என்பது போல, கொடுக்கும் கரங்களும் கோடோனு கோடி பெறும். இதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை.., கருத்து வேறுபடும் நெஞ்சங்களுக்கு நாதியில்லை!

Related Post