இஸ்லாமிய மைதானத்தில் இன்னுமொரு வீரன்..!

இஸ்லாமிய மைதானத்தில் இன்னுமொரு வீரன்..!

இஸ்லாமிய மைதானத்தில் இன்னுமொரு வீரன்..!

இஸ்லாமிய மைதானத்தில் இன்னுமொரு வீரன்..!

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி….

இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; அவன் பக்கம் நெருங்கிச் செல்வதற்கான வழி வகையினைத் தேடுங்கள்; மேலும், அவனுடைய வழியில் கடுமையாகப் பாடுபடுங்கள்! நீங்கள் வெற்றி பெறக்கூடும். 5:36 நன்கு தெரிந்து கொள்ளுங்கள்: எவர்கள் நிராகரிக்கும் போக்கினை மேற்கொள்கின்றார்களோ அவர்களிடம் பூமி முழுவதிலும் உள்ள செல்வம் அனைத்தும், அத்துடன் அதேபோல் இன்னொரு பங்கும் இருந்து அவற்றை மறுமைநாளின் வேதனையிலிருந்து (தாங்கள்) விடுபட ஈடாகக் கொடுக்க விரும்பினாலும் அது அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை கிடைத்தே தீரும்! 5:37 அவர்கள் நரகத்தை விட்டு ஓட நினைப்பார்கள். ஆனால் அவர்கள் அதை விட்டு வெளியேற முடியாது. மேலும், அவர்களுக்கு நிலையான வேதனை தரப்படும்.

5:99 தூதுச் செய்தியை எடுத்துரைப்பதே தூதரின் பொறுப்பாகும்; நீங்கள் வெளிப்படுத்துகின்றவற்றையும், மூடி மறைக்கின்றவற்றையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான். 5:100 (நபியே!) நீர் அவர்களிடம் கூறிவிடும்: “தூய்மையானவையும், தூய்மையற்றவையும் ஒரு போதும் சமமாகமாட்டா. தூய்மையில்லாதவை பெருகிக்கிடப்பது உம்மை வியப்பில் ஆழ்த்தினாலும் சரியே! எனவே அறிவுடைய மக்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதை விட்டு விலகியே வாழுங்கள்; நீங்கள் வெற்றி பெறக்கூடும்.”

5:101 இறைநம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்கள் உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும். அவற்றைப் பற்றி நீங்கள் வினவாதீர்கள். ஆயினும் குர்ஆன் இறக்கியருளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றி நீங்கள் வினவினால் அப்போது அவை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறப்பட்டு விடும். நீங்கள் (இதுவரை) கேட்டவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் சகிப்புத்தன்மையுடையவனாகவும் இருக்கின்றான். 5:102 உங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு கூட்டத்தார் இத்தகைய கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பிறகு அவற்றின் காரணமாகவே அவர்கள் நிராகரிப்பில் ஆழ்ந்து விட்டார்கள். 5:103 ‘பஹீரா’, ஸாயிபா, வஸீலா, ஹாம்,* என்பனவற்றை யெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. ஆயினும் நிராகரிப்போர்தான் அல்லாஹ்வின் மீது பொய்களைப் புனைந்து கூறுகின்றனர். மேலும், அவர்களில் பெரும்பாலோர் (இத்தகைய மூட நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு) அறிவற்றவர்களாய் இருக்கின்றனர். 5:104 “மேலும், அல்லாஹ் இறக்கி வைத்த சட்டத்தின் பக்கமும், இறைத்தூதரின் பக்கமும் வாருங்கள்!” என்று அவர்களிடம் கூறப்படுமாயின் “எங்கள் மூதாதையர் எவ்வழியில் வாழக்கண்டோமோ அவ்வழியே எங்களுக்குப் போதுமானது” என்று பதில் கூறுகிறார்கள். இவர்களின் மூதாதையர் எதையும் புரியாதவர்களாகவும், நேர்வழியைக் குறித்து எதையும் அறியாதவர்களாகவும் இருந்தாலுமா அவர்களை இவர்கள் பின்பற்றிச் செல்வார்கள்?

பிரபல கிரிக்கெட் வீரர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார்….!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் வெய்ன் பர்னெல் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்.
மேலும் தனது பெயரை வெய்ன் வலீது பர்னெல் என்று மாற்றிக்கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்…

Related Post