இஸ்லாமியப் புத்தாண்டே வருக..!

– சுடர் ஒளி

வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் அல்லாஹ்வைத் துதிக்கின்றது. மேலும், அவன் யாவற்றையும் மிகைத்தோன்; நுண்ணறிவாளன்!

புதியதொரு இஸ்லாமிய வருட மான முஹர்ரம் மாதத்தை முதலாகக் கொண்டு ஆரம்பிக்கும் இஸ்லாமியப் புத்தாண்டு

புதியதொரு இஸ்லாமிய வருட மான முஹர்ரம் மாதத்தை முதலாகக் கொண்டு ஆரம்பிக்கும் இஸ்லாமியப் புத்தாண்டு

புதியதொரு இஸ்லாமிய வருட மான முஹர்ரம் மாதத்தை முதலாகக் கொண்டு ஆரம்பிக்கும் இஸ்லாமியப் புத்தாண்டு தூய பிரகடனத்தை ஒவ் வொரு முஸ்லிமுக்கும் நினைவுபடுத் திக் கொண்டிருக்கிறது. நடப்பு வருடத்தில் செய்த பாவங்களையும் தவறுகளையும் எண்ணி மனம் வருந்தி அவற்றுக்காக அல்லா ஹ்விடத்தில் மன்னிப்புக்கோரி அவற்றை அழித்து விட்டு புதியதொரு வருடத்தை ஈமானிய உணர்வுக ளோடு வரவேற்று இஸ்லாத்துடன் பின்னிப்பிணைந்த வாழ்க்கைக்கான திட்டத்தைத் தீட்டிக் கொள்ள வேண்டிய தருணம் இது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவி லிருந்து மதீனா வில் குடியேறிய நிகழ்ச்சியை (ஹிஜ் ரத்தை) அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களின் வருடக்கணக்கு கணிக் கப்பட்டுள்ளது. எனவே, இதனை ஹிஜ்ரி என்று அழைக்கின்றனர். அல்லாஹ் வின் அருட்கொடையால் நாம் ஹிஜ்ரி 1435ஐ கடந்து ஹிஜ்ரி 1436 இல் காலடி வைக்கிறோம்.

ஹிஜ்ரத் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டே வருடத்தின் ஆரம்ப மாதமாக முஹர்ரம் கணிக்கப்படுகிறது. ஆங்கில, தமிழ், சிங்கள வருடங்கள் சூரிய சுழற்சி யைக் கொண்டு கணிக்கப்பட்டாலும் சந்திர சுழற்சி யின் மூலமாகவே முஸ்லிம்களின் வருடங்கள் கணிக்கப்படுகின்றன. இது இஸ்லாமிய வருடத்தின் தனித்துவத்தை எடுத்துக்காட்டு கிறது. ஆனால் அனைத்தும் 12 மாதங்களைக் கொண்டவை.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷிரா தினத்தில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். நபியவர்கள் அவர் களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர் கள் “”இது ஒரு புனிதமான நாளாகும். இதில் அல்லாஹ் மூஸா(அலை) அவர்களையும் அவர்களது சமுதாயத்தினரையும் ஃபிர் அவ்னி டமிருந்து காப்பாற்றினான். மேலும், ஃபிர் அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் கடலிலே மூழ்கடித்தான். இதனால் மூஸா (அலை) அல்லா ஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அந்த நாளில் நோன்பு நோற்றார்கள். ஆகையால் நாங்களும் நோன்பு நோற்கின்றோம்” என்றார்கள்.

மூஸாவைப் பின்பற்றுவதற்கு உங் களைவிட நாமே தகுதியானவர்கள் என்று கூறி, நபி (ஸல்) அவர்களும் நோன்பு நேற்றுமுன்தினம் பிறரை யும் நோன்பு நோற்க ஏவினார்கள். முஸ் லிம்கள் அனைத்து விடயங்களிலும் யூதர்களுக்கு மாற்றமாகத் தங்களது நடவடிக்கைகளை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. யூதர்களும் ஆஷிரா நோன்பை நோற்று வந்தத னால் அவர்களுக்கு மாற்றமாக ஒன்ப தாவது நாளும் நோற்க வேண்டும் என்று நபிகளார் கூறியிருக்கின்றார். “”வருகின்ற வருடம் நான் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற் பேன்” என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள். ஆனால் நபியவர்கள் அதற்கு முன்னரே மரணித்து விட்டார்கள்.

சிறப்பு பொருந்திய புனிதமிகு 4 மாதங்கள் முஹர் ரம், துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, ரஜப் ஆகும்.
முஸ்லிம்களின் வருடக் கணிப் பீட்டில் முதல் மாதம் முஹர் ரம் மாத மாகும். உமர் (ரழி) அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் நபித் தோழர்களை ஒன்று சேர்த்து எப்பொழுது முதல் இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கேட் டார்கள். இதன் அடிப்படையில் பலரும் பல மாதங்களைக் குறிப்பிட்டார்கள். இறுதி யில் முஸ்லிம்களின் முதல் மாத மாக முஹர்ரம் மாதத்தையும் வருடம் ஆரம்பிப்பது நபிகளார் மக்காவி லிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற நாள் என்றும் முடிவெடுத்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் உலகத்துக்கு அனுப்பப்பட்ட உன்னத நோக்கத்தை அடைந்துகொள்வதில் அவர்களுக்கு சாதகமாக அமைந்த ஒரு பெரிய திருப்பு முனை ஹிஜ்ரத் நிகழ்ச்சியை அடிப்ப டையாகக் கொண்டே கணிக்கப்படு கிறது.

எமது உள்ளத்தையும் புறத்தை யும் பரிசுத்தப்படுத்தி புதிய வருடத் தோடு நிஜங்களின் நிதர்சன மாய்த் திகழும் இஸ்லாத்தை இந்த மண்ணில் உயிர் வாழச் செய்ய முன்வரு வோம். ஒவ்ய வாரு வருடமும் எம்மைவிட்டுப் பிரிந்து செல்லும்போது எமது ஆயுள் காலம் குறைவடைந்து மரணம் எம்மை அண்மித்துக் கொண்டிருக்கிறது என் பதை நினைவில் வைத்துக் கொள் வோம். புதுவருடத்துடன் எமக்கு மத்தி யில் காணப்படும் அனைத்து பிளவுக ளையும் மனக்கசப்புக்களையும் உத றித்தள்ளிவிட்டு சகோதரத்துவத்தை – பரஸ்பர புரிந்துணர்வை கட்டியயழுப்பி இஸ்லாத்தின் இலச்சினையை உயரச் செய்வோம்.

Related Post