இன்று சர்வதேச புத்தக தினம்!

 

திருக் குர்ஆன்

திருக் குர்ஆன்

லகை மாற்றியமைத்த பல நூல்களை நீங்கள் வாசித்திருக்கலாம். கேள்விப்பட்டிருக்கலாம்.ஆனால்,அவை மனிதனின் கைங்கர்யத்ததால் விளைந்தவைகளாய் மட்டுமே இருந்திருக்கும் மற்றும் இன்னொரு புத்தகத்ததால் தவறு என நிரூபிக்கப்பட்டிருக்கும்.ஆனால், ஒரு புத்தகம் பிடைத்வனால் வழங்கப்பட்டு இன்று வரை தனக்கு இணையான ஒரு புத்தகத்தைப் பெறாது தரணியில் தலைநிமிர்ந்து 1400 ஆண்டுகளுக்கும் மேலாக தலைநிமிர்ந்து நிற்கின்றது.அதன்சிறப்புத் தன்மைகள் குறித்து அதுவே கூறுவதைக் கேளுங்கள்:-இது அல்லாஹ்வின் வேதமாகும்; இதில் யாதொரு சந்தேகமும் இல்லை, இறையச்சமுடையோர்க்கு (இது) சீரிய வழிகாட்டியாகும். 2:3 அவர்கள் எத்தகையோர் என்றால் ‘கைப் மறைவானவற்றை நம்புகிறார்கள். மேலும் தொழுகையை நிலைபெறச் செய்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள். 2:4 மேலும், உமக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தின் (குர்ஆன்) மீதும், உமக்கு முன்னர் இறக்கியருளப்பட்ட வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்கின்றார்கள். இறுதித் தீர்ப்புநாளின் (மறுமையின்) மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்கின்றார்கள். 2:5 இத்தகையோரே தம் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருப்பவர்கள். மேலும், இவர்களே வெற்றி பெறுபவர்கள்.(திருக் குர்ஆன் 2:2-5)

(நபியே!) நீர் கூறும்: யாரேனும் ஜிப்ரீலுக்குப் பகைவராக இருந்தால் அவர் அறிந்து கொள்ளட்டும் அல்லாஹ்வின் ஆணைப்படியே ஜிப்ரீல் இதனை உம்முடைய உள்ளத்தில் இறக்கி வைத்தார். இது (எத்தகைய வேதமெனில்) தனக்கு முன்னுள்ள வேதங்களை மெய்ப்படுத்துவதாகவும், இறைநம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழி காட்டக்கூடியதாகவும், வெற்றிக்கான நற்செய்தி அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. (ஜிப்ரீல் மீது அவர்கள் பகைமை கொள்வதற்கு இதுவே காரணமெனில், நபியே! நீர் கூறும்:)(திருக் குர்ஆன் 2:97)

 இது மக்களுக்குரிய தெளிவான விளக்கமாகும். மேலும், இறைவனை அஞ்சி வாழ்வோர்க்கு வழிகாட்டியும், அறவுரையுமாகும்.(திருக் குர்ஆன் 3:198)

 

Related Post