இணையும் இதயங்கள்! தட்டும் இன்பங்கள்!!

ஸினூஃபா அன்ஸார்

வசந்தம்

சர்வதேச அமைதி தினம்..!

உருவங்கள் பல இங்கே-அதில் பல

நிறங்கள் அங்கே!
வண்ணங்கள் பல இருப்பினும்
மண்ணில் எல்லோரும் ஒன்றே!

அவலமுண்டு இங்கே,
துக்கமும் துயரமும் உண்டு ஒருங்கே!
இன்பம் கண்டு வாழ்ந்து பார்க்கும் மானிடா!
துன்பம் கண்டு துவண்டு போகலாமா, எண்ணிப் பாருடா!!

பட்டபின்தான் ஞானியா?
சுட்டபின்தான் நெருப்பா?
கட்டையில் போனபின்தான் உயிரா?
நட்டுவிட்ட பின்தான் உடலா?

இதயக் கருமையை கருவறுப்பாய்!
உதயமாய் அன்பை உதிக்கச் செய்வாய்!!
இதயங்கள் இணக்கமானால்..,
இன்பங்கள் நின் வாழ்க்கைவாசல் தட்டும்!!

கருவாகி உருவாக தாய்-தந்தை துணையிருக்க..,
மருவாகிப் போன உன் மண்ணுடலுக்கு..,
தருவாகி நின்று உயிர் தந்து..,
எருவாக உன் உணர்வுகளை பொதி;த்தவனை அறிவாயா?

மாமறை போற்றி வாழ்வாய்!
மண்ணறை நினைந்து மருங்குவாய்!!
இருமை உலகின் நாயன் தந்த
இணையில்லா தூதவன் நபிவழி போற்றுவாய்!!

Related Post