அழகிய பொன்மொழிகள்..!

தமிழில்: ஸினூஃபா அன்ஸார்

அழகிய  பொன்மொழிகள்..!

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய  பொன் மொழிகளுள் சில . . .!

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய  பொன் மொழிகளுள்

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய பொன் மொழிகளுள்

‘அல்லாஹுத்தஆலா உங்களுடைய தோற்றங்களையோ, உருவங்களையோ பார்ப்பதில்லை, எனினும் உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவதானிக்கின்றான்’ என முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) அவர்கள்.
ஆதாரம் : முஸ்லிம்.

‘ மக்களே! நீங்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள்! நிச்சயமாக நான் தினமும் நூறு முறை பாவ மன்னிப்புக் கோருகின்றேன்’ என முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) அவர்கள்.
ஆதாரம் : முஸ்லிம்.

‘ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது இஸ்லாத்தின் இயற்கைத் தன்மையிலேயே பிறக்கின்றது. அதன் பெற்றோரே அதனை யூதனாகவோ அல்லது கிறிஸ்தவனாகவோ அல்லது மஜூஸியாகவோ மாற்றுகின்றனர்.’ என முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்.

‘பெற்றாருக்குத் தீங்கிழைப்பதையும், அவர்களைத் துன்புறுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹுத்தஆலா விலக்கியுள்ளான். (ஹராமாக்கியுள்ளான்) ‘ என முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : முகீரா (ரழி) அவர்கள்.
ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்.

‘அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர் பேசினால் நல்லதை, நன்மையானதைப் பேசட்டும், இன்றேல் வாய் மூடி அமைதியாக இருக்கட்டும்.’ என முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) அவர்கள்.
ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்.

Related Post