Main Menu
أكاديمية سبيلي Sabeeli Academy

அன்புள்ள சகோதரிக்கு ஒரு அழகிய மடல்..!

தமிழில்: ஸினூஃபா அன்ஸார்

ன்புள்ள சகோதரிக்கு ஒரு அழகிய மடல்..!

அன்புள்ள சகோதரிக்கு ஒரு அழகிய மடல்

அன்புள்ள சகோதரிக்கு ஒரு அழகிய மடல்

புது வாழ்வை நோக்காகக்கொண்டு தனது மண்ணையும்;, மண்ணிலுள்ள ஏனைய சொந்தங்களையும் பிரிந்து தாங்கள் குவைத் நாட்டிற்கு கால்தடம் பதித்துள்ளீர்கள். உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்களது நோக்கம் சிறந்தமுறையில் அரங்கேரவும், அதற்கான உங்களது ஊக்கம் இன்னல்களின்றித் தொடரவும் ஆசிகளுடன் ஆராதிக்கின்றோம்.

முதலில் இந்நாடு பற்றி குறிப்பிடுவதாயின் இந்நாடு செழிப்பானது, வளமானது. இங்கு தொழில் வாய்ப்பிற்காக வரக்கூடிய அனைத்து நாட்டவர்களுக்கும் இந்நாடு பாதுகாப்பளிக்கக்கூடியது. மேலும் இந்நாட்டவர்கள் அனைவரையும் அன்பரவனைப்புடன் கவனிப்பவர்பகள், இறைவனை அஞ்சி வாழக்கூடியவர்கள், மார்க்கப்பற்றுமிக்கவர்கள். சகோதரியே! கஷ்டங்களைக் களைந்தெறியவும், சுபீட்சமிகு நல்வாழ்வொன்றிற்கு அத்திவாரமிடவும், உங்கள் குழந்தைகளின் கல்வியிற்கு அறிவு வெளிச்சமூட்டவும், வறுமை வாழ்விற்கு முற்றிடவும், உங்களைச் சுமந்த உங்கள் பெற்றோர்களை நீங்கள் சுமக்கவுமே உங்கள் பயணத்தை இலக்காக்கினீர்கள். சகோதரியே! அறிமுகமற்றவர்களுக்கு மத்தியிலும் புதியதொரு கலாச்சரத்திற்கு மத்தியிலுமே உங்கள் பணியை ஆரம்பிக்கப்போகிறீர்கள். உங்கள் மனம் எவ்வகையான சூழ்நிலையில் இருந்தாலும் சரியே உங்களுக்குத் தரப்படுகின்ற வேலைகளில் நீங்கள் கூடுதலான கவனம் செலுத்தல் அவசியமாகும்.

உங்கள் வேலை நம்பிக்கையின் அடிப்படையில் தரப்பட்டது.

அப்பொறுப்புக்கள் உங்களிடம் ஒப்படைக்கப்படுகின்ற அமானிதங்களாகும். அவை பொருட்களாயினும் சரியே! குழந்தைகளாயினும் சரியே! பேணுதலுடனும் அன்புடனும் திருப்தியுடனும் நிறைவேற்றுங்கள். விஷேசமாக குழந்தைகளை அணுகும்போது மிக அன்பான முறையிலும் பொறுமையை சிரமேற்கொண்டும் ஈடுபடுங்கள். பொறுப்பாளர்கள் வீட்டிலில்லா வேளைகளில் அவர்களது அனைத்து உடைமைகளையும் விஷேசமாக குழந்தைகளையும் பாதுகாத்துக்கொடுங்கள்.
 எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உண்மையே பேசுங்கள்.
எமது வாழ்வை உண்மையின் அடிப்படையில் அமைத்துக்கொள்வது அவசியமாகும். உங்களின் நேர்மை, உண்மை உங்கள் தொழிலில் கூடிய பயனையும் வெற்றியையும் பெற்றுத்தரும். அத்துடன் உண்மை உயர்வு தரக்கூடியது. உள்ளத்தைத் தூய்மை படுத்தக்கூடியது.

 

Related Post