அன்னையே..!

ரபுலகில் பிறந்து..

அன்னையே..!

அன்னையே..!

வணிகத்தில் கொடி கட்டிப் பறந்து…

கொடீஸ்வரியாய் திகழ்ந்து…

இளைஞர் முஹம்மதை மணமுடித்து…

அவர்களிடமே தங்களை முழுமையாய் ஒப்படைத்து…

கணவர் முஹம்மது

இறைத் தூதராய்

நபிகள் முஹம்மது ஆனதும்…

முதன் முதலாய் இஸ்லாத்தை ஏற்று…

கொட்டிக் கிடந்த செல்வத்தையெல்லாம்

ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கி…

வறுமையிலும் வாடாத மலராய் வாழ்ந்து…

உலக முஸ்லிம்களின்

தாயாக வாழும்

என் முதல் தாயே!

கதீஜா உம்மாவே….

உங்களுக்கு என் அன்பின் சலாம்….

அஸ்ஸலாமு அலைக்கும் !

இன்று மகளிர் தினமாம்..

உங்களை வாழ்த்தாமல் நான் யாரை வாழ்த்துவேன்…

முதல் வாழ்த்தும் உங்களுக்கே..!

Related Post