அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 7

– தமிழில் : மு.அ. அப்துல் முஸவ்விர்

அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 7

ண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பரம்பரையும் அன்னாரின் தூதுத்துவத்துக்கு முன்பான வாழ்வும்!

பார் போற்றும்அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பரம்பரை

பளிங்காய் உரைத்த பாதிரியார், பஹீரா!

பார் போற்றும்அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பரம்பரை

பார் போற்றும்அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பரம்பரை

அப்போது அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு பன்னிரண்டு வயதிருக்கும். தனது சிறிய தந்தையான அபூ தாலிப் அவர்களுடன் வணிகப் பயணமாக சிரியா தேசம் சென்றார் முஹம்மத் (ஸல்) அவர்கள்! அவர்கள் பஸ்ரா நகரை அடைந்த வேளை, பஹீரா எனும் கிறித்துவ பாதிரியார் ஒருவரை சந்தித்தனர். அவர்கள் மீது அன்பம் கரிசனமும் பொழிந்த அவர், மிகத் தாராளமாக அவர்களுக்காக செலவு செய்தார். ஆனால், அதற்கு முன்பு வரை அவர்களை இவ்வாறு வரவேற்று திருப்பதிபடுத்தும் நடத்தை கொண்டவராக இருந்ததில்லை பாதிரியார் பஹீரா..!
சிறுவனான அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களை மிகத் துரிதமாக அவரை அடையாளம் கண்டார். பின்னர் சிறுவனின் கரங்களைப் பற்றியவராய், ‘ இது மனித குலம் முழுமைக்கும் தலைமைப் பொறுப்பு கொண்டது. புடைப்பினங்கள் முழமைக்குமான ஒரு நற்செய்தியுடன் அல்லாஹ் இவரை அனுப்பி வைப்பான். ஆபூ தாலிப் வினவினார்: ‘ தங்களுக்கு எப்படி தெரியும்?’ பதில் கிடைத்தது: அகாபா அமைந்த திசை வழியாக நீர் உள்ளே நுழையும்போது, ஒவ்வொரு கற்களும், மரங்களும் தாமாகவே சிரம் பணிந்தன. எந்த ஒருவருக்கும் அவை இவ்வாறு செய்ததில்லை, இறைத்தூதர்களுக்காக மட்டுமே அன்றி..! அதுமட்டுமல்ல, அவருடைய தோள்பட்டையின் அடியில் இருக்கும், ஆப்பிள்பழ வடிவத்தைக் கொண்டு, இறைத்தூதுத்துவத்தின் இறுதி முத்திரையாக அவரை அடையாளம் காண்கின்றேன். எமது கிரந்தங்களிலிருந்து, இத்தகைய விவரங்களை நாம் பெற்றுள்ளோம்!’ அதுமட்டுமல்ல, அந்த சிறுவன் தனது சிரிய பயணத்தை தொடரச் செய்யாமல், உடனே மக்கா திரும்ப அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். அங்கு வாழ்ந்த யூதர்கள் குறித்த அச்சமே அவரை இவ்வாறு சொல்லத் தூண்டியது. அதற்கு செவிசாய்த்த அபூதாலிப் அவர்கள் தமது பணியாளர்கள் சிலருடன் சிறுவனை மக்கா திருப்பி அனுப்பி வைத்தார்.
பிள்ளை முஹம்மத் (ஸல்) பங்காற்றிய ஃபிஜர் யுத்தம்
குறைஷ் மற்றும் கினானா குலத்தினருக்கும், கைஸ் குலத்தாருக்கும் இடையே போர் மூண்டது. ஆப்போது அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வயது பதினைந்து இருக்கும். அப்போருக்கு இந்தப் பெயர் வரக் காரணம், போர் தடை செய்யப்பட்ட புனித மாதத்தில் அது நடைபெற்றதே..! இப்போர்களின் ஒன்றில், அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களும் தமது சிறிய தந்தையருடன் களம் கண்டார்கள். ஆனால், எவருக்கும் எதிராக ஆயுதம் ஏந்தவில்லை. எதிரிகளிடமிருந்து எய்தப்பட்டு, கீழே விழுந்த அம்புகளை எடுத்து, தமது சிறிய தந்தையரிடம் ஒப்படைக்கும் பணியை மட்டுமே மேற்கொண்டார்கள்.

 

Related Post